காவலர்களை பனி செய்ய விடாமல் தடுத்த இருவர் கைது. கோவை காந்திபுரம் போக்குவரத்து போலீசில் பணிபுரிந்து வருபவர் சுதா. இவர் நேற்று கணபதி செல்லும் வழியில் உள்ள டெக்ஸ்டூல் பாலம் அருகே டிராபிக்கை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் சுதாவிடம் தகராறு செய்தார். மேலும் பணி செய்ய விடாமல் சுதாவிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த இதையடுத்து சுதா அளித்த புகாரின் பெயரில் சரவணம்பட்டி போலீசார் , சுதாவிடம் […]
Month: February 2020
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு ஆலோசனை
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் விதி மீறும் கனரக வாகனங்களின் டிரான்ஸ்போர்ட் வாகனங்களை சிமெண்ட் ஆலை நிறுவனங்களில் இயக்க அனுமதிக்க மாட்டோம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களிடம் சிமெண்ட் ஆலை அலுவலர்கள் உறுதியளித்தனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் 13/02/2020 அன்று சாலை பாதுகாப்பு சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர்
இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் அகில இந்திய அளவில் காவல்துறையினருக்காக நடைபெற்ற பூப்பந்து போட்டியில் மதுரை மாநகர காவல் ஆய்வாளர் திருமதி.ஹேமா மாலா அவர்கள் முதலிடத்தை பெற்று தங்க பதக்கத்தை வென்றார். அவரை நேரில் அழைத்து மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
60 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது.
60 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி 11.02.2020 ந் தேதி B1 விளக்குத்தூண் ச&ஒ காவல் ஆய்வாளர் திருமதி.லோகேஸ்வரி அவர்கள் ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் கான்பாளையம் 3வது தெரு சந்திப்பு, அண்ணாமலை சரக்குக்கடை அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மூட்டைகள் இருப்பதை கண்டுபிடித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை செய்ததில் மணிகண்டன் 45/2020, த/பெ.கிருஷ்ணமூர்த்தி, கான்பாளையம், […]
மாணவர்களிடையே மோதல்¸ பேருந்து கண்ணாடி உடைப்பு¸ கல்லூரி மாணவர்கள் கைது
மாணவர்களிடையே மோதல்¸ பேருந்து கண்ணாடி உடைப்பு¸ கல்லூரி மாணவர்கள் கைது சென்னை¸ சென்ட்ரல் மேம்பாலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்களை 10.02.2020ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்ததாக 30க்கும் மேற்பட்ட மாணவர்களை அவர்களது பெற்றோருடன் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டு உதவி ஆணையர் அவர்கள் தகுந்த அறிவுறை வழங்கியும்¸ மாணவர்களின் பெற்றோர்களிடம் அவர்களது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணித்து வரும்படியும்¸ மாதம் ஒருமுறையாவது கல்லூரி முதல்வரை […]
காவலரின் மனிதநேயம்
காவலரின் மனிதநேயம் சென்னை பெருநகர ஆயுதப்படை காவலர் திரு. திரு.பு.தனசேகரன் அவர்கள் 12.02.2020ம் தேதி பாரிமுனை பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தபோது பழைய துணியுடன் இருந்த இக்குழந்தைக்கு புதிய துணிமணிகளை வாங்கி கொடுத்தும்¸ பெற்றோருக்கு உதவிக்கு பணம் கொடுத்தும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். காவலரின் இச்செயல் அங்கிருந்த அனைவரின் பாராட்டையும் பெற்றது.
மக்களை சிரமப்படுத்தாமல்¸சிறப்பாக செயல்படுங்கள் – முதல்வர் பதக்கம் வழங்கி இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு. c.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் பேச்சு
மக்களை சிரமப்படுத்தாமல்¸சிறப்பாக செயல்படுங்கள் – முதல்வர் பதக்கம் வழங்கி இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு. c.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் பேச்சு
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகரத்தில் SDPI கட்சியின் விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மற்றும் நேஷனல் விமன்ஸ் பிரண்ட் (NFW) ஆகியோர்கள் சேர்ந்து காங்கேயம் ரோடு வேலவன் ஹோட்டல் அருகில் இருந்து CTC காங்கேயம் கிராஷ் வரை மாபெரும் பேரணி மகளிர் மட்டும் கலந்து கொண்டனர். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்
கார்கள் திருடும் கும்பலை சிறைக்கு அனுப்பிய போலீசார்
கார்கள் திருடும் கும்பலை சிறைக்கு அனுப்பிய போலீசார் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் நூதன முறையில் நான்கு சக்கர வாகனங்களை திருடும் கும்பலை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் தலைமையில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் நான்கு சக்கர வாகனங்களை திருடும் கும்பலை கைது செய்து அவர்களிடமிருந்து 26 நான்கு சக்கர வாகனங்களை கைப்பற்றினர்.
கொலையாளிகளை விரட்டி பிடித்த தனிப்படை போலீஸார்.
கொலையாளிகளை விரட்டி பிடித்த தனிப்படை போலீஸார். கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட அதையூர் கிராமத்தில் சொத்து தகராறில் பெண்ணை அடித்து கொலை செய்த கொலையாளிகளை காவல் கண்காணிப்பாளர் அறிவுரைபடியும் துணை காவல் கண்காணிப்பாளர் உளுந்துர்பேட்டை அவர்கள் தலைமையில் மிக விரைவாக வழக்கின் எதிரிகளை மடக்கி பிடித்த போலீசாரை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கள்ளக்குறிச்சி மாவட்டம் திரு. ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி வெகுமதிகள் அளித்தார்கள்.