விடாமல் தொல்லை கொடுத்த ஆன்லைன் லோன் ஆப்: ஐ.டி ஊழியர் எடுத்த விபரீத முடிவு ஆன்லைன் லோன் ஆப் மோசடியில் சிக்கி ஐ.டி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. வாங்கிய கடனை செலுத்திய பின்னரும் கடனை கட்ட சொல்லி மிரட்டல் விடுத்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளார். சென்னை கே.கே நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்த டெய்லர் சீனிவாசராஜா(53). இவருக்கு நரேந்திரன்(23) மற்றும் கீர்த்தனா என இரு பிள்ளைகள் உள்ளனர். நரேந்திரன் பிகாம் […]
Day: October 6, 2022
தமிழகத்தில் காந்தி ஜெயந்தி அன்று, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 1,200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் காந்தி ஜெயந்தி அன்று, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 1,200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாநிலம் முழுதும் அனைத்து ‘டாஸ்மாக்’ மது கடைகளையும் மூட, தமிழக அரசு உத்தரவிட்டது.ஆனாலும், அரசின் தடையை மீறி, மாநிலம் முழுதும் ஆங்காங்கே, சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பனை நடந்ததை போலீசார் கண்டறிந்து, நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, அதிகபட்சமாக கரூரில் 72 பேர் கைது செய்யப்பட்டனர்; 523 மது பாட்டில்கள் பறிமுதல் […]
ரேஷன் கடைக்கு, ஊழியர்கள் நியமன தேர்வு வெளிப்படையாக நடக்க உள்ளதால், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’ என, கூட்டுறவு துறை அறிவுறுத்திஉள்ளது.
ரேஷன் கடைக்கு, ஊழியர்கள் நியமன தேர்வு வெளிப்படையாக நடக்க உள்ளதால், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’ என, கூட்டுறவு துறை அறிவுறுத்திஉள்ளது. கூட்டுறவு துறை நடத்தும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள, 4,300 விற்பனையாளர், எடையாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்காக, கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக, அடுத்த வாரத்தில் இருந்து அறிவிப்பாணைகள் வெளியிடப்பட உள்ளன. வரும் டிசம்பருக்குள் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரியில் பணி ஆணை வழங்கப்பட […]
மதுரையிலிருந்து துாத்துக்குடிக்கு போலீஸ்காரரை இடமாறுதல் செய்த உத்தரவை கர்மா கொள்கையை பின்பற்றி ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரையிலிருந்து துாத்துக்குடிக்கு போலீஸ்காரரை இடமாறுதல் செய்த உத்தரவை கர்மா கொள்கையை பின்பற்றி ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை ஸ்ரீமுருகன் தாக்கல் செய்த மனு: காவல்துறையில் 2003 ல் இரண்டாம் நிலை போலீஸ்காரர் பணியில் சேர்ந்தேன். அவனியாபுரம் ஸ்டேஷனில் எழுத்தராக பணிபுரிந்தேன். என்னை துாத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., மற்றும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டனர். இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பு: […]
மேலூர் அருகே பட்டாசு ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியது- டிரைவர் பலி
மேலூர் அருகே பட்டாசு ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியது- டிரைவர் பலி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து பட்டாசு ஏற்றி கொண்டு ஒரு லாரி திருச்சி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டி பாலம் அருகே 4 வழிச்சாலையில் சென்ற போது விபத்தில் சிக்கியது. பட்டாசு லாரி முன்னால் சென்ற வாகனத்தின் மீதோ அல்லது சென்டர் மீடியினின் பக்கவாட்டிலோ மோதியதா? என்று தெரியவில்லை. இதில் […]
பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள்
பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது, போதிய பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடை அள்ளுதல், கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் அதனை மீறி பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த வாரம் மதுரை ஐகோர்ட்டு கடும் எச்சரிக்கை விடுத்தது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி தொழிலளர்கள் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டால் மாநகராட்சி […]