Police Department News

கார் மோதி வாலிபர் சாவு

கார் மோதி வாலிபர் சாவு மதுரை நாராயணபுரம் கேசவசாமி தெருவை சேர்ந்த காமராஜ் மகன் ஆனந்தபாண்டி(19). இவர் நேற்று நள்ளிரவு புது நத்தம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். நாகனாகுளம் பகுதியில் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் ஆனந்த பாண்டி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக […]

Police Department News

உலக புத்தக தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலக புத்தக தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக புத்தக தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:- ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது. நாம் அறியாத உலகத்தைக் காட்டுகிறது. அறிவூட்டுகிறது! நம்மை பண்படுத்துகிறது! அதனால்தான், புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கமாகத் தி.மு.க.வினர் முன்னெடுக்கிறோம். புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் வகையில், நமது திராவிட மாடல் அரசு மாவட்டங்கள் தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துவதுடன், […]

Police Department News

மதுவுக்கு பணம் கொடுப்பதில் தகராறு- நண்பனை கத்தியால் குத்திய டிரைவர் கைது

மதுவுக்கு பணம் கொடுப்பதில் தகராறு- நண்பனை கத்தியால் குத்திய டிரைவர் கைது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அஜித் (வயது25),சரண் ராம்(28),நண்பர்களான இருவரும் மணலி புதுநகர் அருகே உள்ள தனியார் சரக்கு பெட்டகத்தில் லாரி டிரைவர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.நேற்று இரவு அவர்கள், மணலி புதுநகர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்தனர். அதற்கான செலவை முதலில் அஜித் செய்தார். பின்னர் மதுகுடிக்க கொடுத்த பாதிபணத்தை தருமாறு சரண்ராமிடம் கேட்டார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. […]

Police Department News

கல்வீசி தாக்கி கொத்தனார் கொடூரக்கொலை

கல்வீசி தாக்கி கொத்தனார் கொடூரக்கொலை மதுரை பி.பி.குளம் இந்திரா நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 61), கொத்தனார். இவரது மனைவி சிவகாமி. மோகனும், ஆட்டோ டிரைவர் வடிவேல் (43) என்பவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று வடிவேல் ஓட்டி வந்த ஆட்டோ நிலை தடுமாறி மோகன் வீட்டின்மீது மோதியது. இதனை மோகன் தட்டி கேட்டார். அப்போது அங்கு […]

Police Department News

ரெயிலில் பெண் தவறவிட்ட தங்கச்சங்கிலியை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

ரெயிலில் பெண் தவறவிட்ட தங்கச்சங்கிலியை ஒப்படைத்தவருக்கு பாராட்டு திருச்சி காட்டூர் கோகுல நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகரன் (வயது 63). இவர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது குடும்பத்துடன் பயணம் செய்தார். அப்போது அவரது மகளின் தங்கச்சங்கிலி தொலைந்து விட்டது. இது குறித்து அவர் திருச்சி ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அதே ரெயிலில் பயணம் செய்த மணப்பாறை ரெட்டியாபட்டியை சேர்ந்த சேவி (53) என்பவர், அந்த தங்கச்சங்கிலியை […]

Police Department News

சாதாரண போலீஸ் விசாரணைகளை மனித உரிமை மீறலாக கருத முடியாது: சென்னை ஐகோர்ட் கருத்து

சாதாரண போலீஸ் விசாரணைகளை மனித உரிமை மீறலாக கருத முடியாது: சென்னை ஐகோர்ட் கருத்து காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நடந்தாலும், ஒவ்வொரு சாதாரண போலீஸ் விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி ரமேஷ் என்பவர், கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம் சுமித்தி சலானி என்பவருடன் வியாபார தொடர்பு வைத்திருந்தார். வெள்ளி விளக்குகள் சப்ளை செய்த வகையில் தனக்கு தர வேண்டிய பாக்கித் […]

Police Department News

சென்னைராயபுரத்தில் ஆட்டோவில் மூதாட்டி தவற விட்ட ரூ.80 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த டிரைவர்

சென்னைராயபுரத்தில் ஆட்டோவில் மூதாட்டி தவற விட்ட ரூ.80 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த டிரைவர் சென்னை ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் மும்தாஜ் பேகம் (வயது 67). இவர்,சேக் மேஸ்திரி பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றார். அப்போது ரூ.80 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்து சென்றார். மகள் வீட்டுக்கு சென்றதும் பார்த்தபோது ரூ. 80 ஆயிரம் இருந்த பணப்பை மாயமாகி இருந்தது. அதனை ஆட்டோவிலேயே தவறவிட்டது தெரியவந்தது. இது குறித்து ராயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. […]

Police Department News

சென்னைவானகரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் செல்போன் பறித்த 3 சிறுவர்கள் கைது

சென்னைவானகரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் செல்போன் பறித்த 3 சிறுவர்கள் கைது சென்னை, வானகரம், பள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மல்லிகா. இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென மல்லிகாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை […]

Police Department News

சென்னைதவறான தொடுதல் குறித்து குழந்தைக்கு கற்று கொடுத்த பெற்றோர்

சென்னைதவறான தொடுதல் குறித்து குழந்தைக்கு கற்று கொடுத்த பெற்றோர் நல்ல தொடுதல், தவறான தொடுதல் பற்றி குழந்தைக்கு கற்றுக் கொடுத்ததும் குழந்தையின் தாயார் அக்குழந்தையின் உடலில் தொடுகிறார்.குழந்தை ரியாக்‌ஷன் செய்வது போன்ற காட்சிகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.சமீப காலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்காக சட்டங்களை கடுமையாக்கி வரும் அரசுகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகின்றன. இந்நிலையில் சுமார் 3 வயது பெண் […]

Police Department News

இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை

இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை மதுரை சம்மட்டி புரத்தைச் சேர்ந்த 25 வயது பெண் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் திருநகர் மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த செல்வம் மகன் ஆனந்துக்கும் (24) செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர் மதுரை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். நான் அவருடன் நண்பர் என்ற முறையில் பழகினேன். ஆனந்த் என்னிடம் காதலை […]