Police Recruitment

தருமபுரி அருகே ஓடும் பஸ்ஸில் 4.5 பவுன் தங்கம் திருட்டு.

தருமபுரி அருகே ஓடும் பஸ்ஸில் 4.5 பவுன் தங்கம் திருட்டு. தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஜெயந்தி 70. இவர் 4.5 பவுன் நகைகளை கடையில் விற்று ரூ.1.97 லட்சத்தை ஏறிசென்றார் இறங்கிய பின்னர் பணத்தை காணவில்லை. பதறிப்போன இவர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதில் பஸ்ஸில் தான் பயணம் செய்தபோது தனது அருகே உட்கார்ந்த மர்மநபர் தான் திருடினார் என தெரிவித்தார். போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Police Recruitment

மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு; கணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு; கணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 33). சம்பவத்தன்று இவர் தனது மனைவி கவுசல்யாவுடன் ஏற்பட்ட தகராறில் அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசினார். இதுதொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தனகுமாரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பரிந்துரையின் பேரில், சந்தனகுமாரை […]

Police Recruitment

கடனை செலுத்தாத வாகனத்தை வங்கிகள் கையகப்படுத்த முடியாது!உயர் நீதிமன்றம் கடிவாளம்.

கடனை செலுத்தாத வாகனத்தை வங்கிகள் கையகப்படுத்த முடியாது!உயர் நீதிமன்றம் கடிவாளம். வாகன கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தக் கூடாது என, உத்தரவிட்ட பாட்னா உயர் நீதிமன்றம், இந்த செயல், தனி நபரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை மீறும் வகையில் இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளது

Police Recruitment

தென்காசி மாவட்டாம் செங்கோட்டை அருகே ஆம்பர் கிரீஸ் கட்டிகளை பதுக்கியவர்களிடம் விசாரணை

தென்காசி மாவட்டாம் செங்கோட்டை அருகே ஆம்பர் கிரீஸ் கட்டிகளை பதுக்கியவர்களிடம் விசாரணை செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதியில் சிலர் ஆம்பர்கிரீஸ் கட்டிகளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கு தங்கச்சன் என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது சிறு சிறு துண்டுகளாக சுமார் 3 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஒரு அறையில்மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் சந்தை மதிப்பு சுமார் 41 […]

Police Recruitment

தமிழகத்தில் முதல் முறையாக காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன: டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகத்தில் முதல் முறையாக காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன: டிஜிபி சைலேந்திர பாபு தமிழகத்தில் முதல் முறையாக காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என காவல் துறை தலைவர் சி.சைலேந்திர பாபு கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்துக்கு வந்த காவல் துறை தலைவர் சி.சைலேந்திர பாபு இன்று குன்னூர், வெலிங்டன், உதகை காவல் நிலையங்களை ஆய்வு செய்தார். அப்போது, காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும், காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸாரிடம் […]

Police Recruitment

டிஜிபி பதவி உயர்வு வழங்க கோரி ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

டிஜிபி பதவி உயர்வு வழங்க கோரி ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு டிஜிபி பதவி உயர்வு வழங்கக் கோரி ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் 870 கோடி ரூபாய் பாஸி நிதிநிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்நிறுவனத்தின் இயக்குனரை கடத்தி பணம் பறித்ததாக அப்போது மேற்கு மண்டல ஐஜி.யாக இருந்த […]

Police Recruitment

ரூ. 17 மட்டும் வைத்திருந்தவர் வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ. 100 கோடி – சைபர் செல் சம்மனால் அதிர்ந்த கூலித் தொழிலாளி!

ரூ. 17 மட்டும் வைத்திருந்தவர் வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ. 100 கோடி – சைபர் செல் சம்மனால் அதிர்ந்த கூலித் தொழிலாளி! கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.100 கோடி டெபாசிட் ஆனதை அடுத்து வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கம்.முகமது விசாரணைக்காக நேரில் ஆஜராக தேகானா சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது.மேற்கு வங்காளம், முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் கிராமத்தில் வசிக்கும் முகமது நசிருல்லா மண்டல் என்கிற தினசரி கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.100 […]

Police Recruitment

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வேனில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபர் கைது

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வேனில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபர் கைது செங்கோட்டை நகராட்சி பூங்கா அருகில் உள்ள முருகாத்தாள் என்பவர் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து ஒரு வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரு டன் ரேஷன் அரிசியுடன் அந்த […]

Police Recruitment

மதுரை வாடிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய பார்களுக்கு சீல்

மதுரை வாடிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய பார்களுக்கு சீல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் தாதம்பட்டி நீரேத்தான் மதுபான கடை அருகில் அனுமதியின்றி செயல்பட்ட 2 மதுபான பார்களும், சமயநல்லூர், சிக்கந்தர்சாவடியில் தலா ஒரு பாரும் பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த பணியில் மதுரை தெற்கு கோட்ட கலால் தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் முகைதீன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயராஜ், சிவலிங்கம் மற்றும் கிராம […]

Police Recruitment

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் மதுரை நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அதிரடியாக அனைத்து பகுதிகளையும் கண்காணித்தனர். தெப்பக்குளம் மாரி யம்மன் மேற்குத்தெருவில் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த பிரதீப் குமார் சோனி (45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிலோ புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்தனர். தெப்பக்குளம், கீரைத்துறை, சுப்பிரமணிய புரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் சோதனை […]