22-06-2023 தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட மாங்கரை கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா… மாங்கரை மற்றும் அதன் சுற்றுப்புற ஏழு கிராமங்களான மோட்டுப்பட்டி, ஆணைக்கல்லனூர்,நூலவள்ளி, கொட்டாயூர் ,பில்லப்பட்டி,மற்றும் குள்ளாத்திரம்பட்டி, ஆகிய ஏழு கிராமங்களும் இணைந்து கடந்த 10 நாட்களாக திருவிழாவை சிறப்பாக நடத்தப்பட்டது.(22/06/2023 )மாங்கரையில் ஏழு கிராமங்கள் சார்பாக எருதாட்டம் நடைபெற்றது.இந்த எருதாட்ட விழாவிற்க்கு பென்னாகரம் DSP திருமதி. மகாலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்சுமார் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு […]
Month: June 2023
பாலக்கோட்டில் 3 குழந்தைகளுடன் தாய் மாயம்.
கணவர் கண்ணீருடன் காவல் நிலையத்தில் மனைவியை மீட்டு தர கோரி புகார் .
பாலக்கோட்டில் 3 குழந்தைகளுடன் தாய் மாயம்.கணவர் கண்ணீருடன் காவல் நிலையத்தில் மனைவியை மீட்டு தர கோரி புகார் . தர்மபுரிமாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகர் பகுயை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பசுபதி (வயது.37),இவருடைய மனைவி செவ்வந்தி (வயது.30).இவர்களுக்கு திருமணமாகி 10 வயதில் கவியரசு என்ற மகனும், 7 வயதில் காவியா என்ற மகளும், 5 வயதில் நவியா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கனவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு […]
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு பணியாளர்களுக்கான “முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறையினரை பாராட்டு
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு பணியாளர்களுக்கான “முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறையினரை பாராட்டி மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுதாதம் அவர்களும் பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பொறுப்பு வகித்தார். இதில் நமது மாவட்ட காவல்துறையினர் கைப்பந்து போட்டியில் முதலிடம், கபடி போட்டியில் முதலிடமும், மற்றும் தடகள பிரிவில் முதலிடத்தில் பிடித்து அசத்தினர்.
மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்
மோட்டார் சைக்கிள்-வேன் மோதல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூரை அடுத்துள்ள கணபதிபட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை மகன் பாண்டியன்(வயது19). இவர் நாகமங்கலத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மதியம் கடையில் இருந்து வீட்டிற்கு சாப்பிட மோட்டார் சைக்கிளில் சென்றார். நாகமங்கலம் நாடகமேடை அருகே சென்றபோது அங்குள்ள வளைவில் வேகமாக வந்த வேனும், மோட்டார் சைக்கிலும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த பாண்டியன் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக […]
பாலக்கோட்டில் , உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு.
பாலக்கோட்டில் , உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு. தர்மபுரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வரப்பட்ட புகார் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ். உத்தரவின் பேரில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே. நந்தகோபால் அவர்கள், பாலக்கோடு பஸ் நிலையம், எம். ஜி. ரோடு, பைபாஸ் ரோடு, தர்மபுரி ரோடு மற்றும் தக்காளி மார்க்கெட் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் துரித உணவகங்களில் […]
வாங்கிய கடனை தர மறுத்ததால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.
வாங்கிய கடனை தர மறுத்ததால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு. தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அமானி மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது60). கட்டிட மேஸ்திரி. இவருக்கு நாகம்மாள் (45) என்ற மனைவி உள்ளார். முனிராஜ் அடிக்கடி கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர் போன்ற வெளியூர்களில் சென்று தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். இதன்காரணமாக அவர் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்குவந்து செல்வார். இவருக்கு குடிபழக்கமும்உள்ளது.இந்த நிலையில் முனிராஜின் மனைவி நாகம்மாள் மகளிர் சுயஉதவிகுழு மூலமாக […]
பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி
பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி மதுரை மாவட்டம் திருமங்கலம் சாத்தங்குடியை சேர்ந்தவர் உதயபாண்டி. இவரது மனைவி காயத்ரி(வயது29). சம்பவத்தன்று செல்போன் மூலம் இவரிடம் பேசிய மர்ம நபர் ரூ.10 லட்சம் கடன் வாங்கித்தருவதாக கூறியுள்ளார். அதற்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார். இதை நம்பிய காயத்ரி சம்பவத்தன்று மாட்டுத் தாவணி அருகே சரவணன் என்பவரிடம் ரூ.3 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் கண்ணிமைக்கும் […]
காண்டிராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி
காண்டிராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி மதுரை மதிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பானுகோபன்(வயது36). கட்டிட காண்டிரக்டரான இவர், சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துச் சென்றான். இதுகுறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜய்(27) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். […]
மதுரையில் பெற்றோர் மது குடித்து துன்புறுத்தியதால் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சிறுமி
மதுரையில் பெற்றோர் மது குடித்து துன்புறுத்தியதால் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சிறுமி ‘மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு’ என்ற விழிப்புணர்வு வாசகம் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டிருப்பதை காணலாம். அதனை பார்த்துக் கொண்டே நாள்தோறும் ஏராளமான கடந்து செல்கின்றனர். மதுவினால் நாடும்… வீடும்… எவ்வாறு பாதிக்கப்படுகிறது? என்பதை யோசிப்பதற்கு யாருக்கும் நேரம் இல்லாமல் ஓடுகிறோம். இன்றைய நவீன காலத்தில் மது குடிப்பது பகட்டான விஷயமாகவே கருதப்படுகிறது. அதிலும் இன்று இருபாலரும் ஒன்றாக சேர்ந்து மது குடிக்கின்றனர். ஆண்களுக்கு […]
திருமங்கலம் அருகே விபத்து- கட்டிட தொழிலாளிகள் 2 பேர் பலி
திருமங்கலம் அருகே விபத்து- கட்டிட தொழிலாளிகள் 2 பேர் பலி திருமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது55). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்க நான்கு வழிச்சாலையை கடப்பதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த முத்துபாண்டி(52), திருமங்கலம் அருகே உள்ள எஸ்.கோபாலபுரம் வெங்கடசாமி(49) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். […]