வியாபாரி வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை மதுரை மாவட்டம் திரு மங்கலம் முகமதுஷாபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் முத்துபால்பாண்டி(வயது 39). இவர் மதுரையில் கண்கண்ணாடி கடை வைத்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி. நேற்று முத்துபால் பாண்டிக்கு பிறந்தநாள் என்பதால் மனைவி புவனேஸ்வரி, தாய் கமலம் மற்றும் குடும்பத்தினருடன் திருமங்கலத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்று கொண்டாட முத்துபால்பாண்டி முடிவு செய்தார். இதற்காக இரவு 9.30 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் […]
Month: July 2023
தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில்மாதாந்திர ஆய்வு கூட்டம்
தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில்மாதாந்திர ஆய்வு கூட்டம் தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவ லகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதியப்பட்ட குற்ற வழக்குகளின் நிலையை குறித்தும் மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு, எஸ்.பி. அறிவுரை வழங்கினார். மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் […]
தொழிற்சாலை பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
தொழிற்சாலை பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவுப்படி, செங்கோட்டை அருகே உள்ள தனியார் ரப்பர் கையுறை தயாரிப்பு தொழிற்சாலையில் தீத்தடுப்பு பயிற்சி நடந்தது. செங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் செல்வன், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி அளித்தனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி கடையநல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் கால ஒத்திகை பயிற்ச்சி
தென்காசி கடையநல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் கால ஒத்திகை பயிற்ச்சி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூர் அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களையும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்பது எப்படி திடீரென ஏற்பட்ட தீயை அணைப்பது எப்படி, அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி கடைய நல்லூர் அரசு கலை […]
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை புது நத்தம் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக நூலக வளாகத்தில் கருணாநிதியின் சிலையையும் திறந்து வைத்தார். தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச தரத்தில் நூலகம் கட்டப்பட்டுள்ளது. நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. நாளிதழ் சேமிப்பு இடம், நூல் கட்டும் இடம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் 6 தளங்கள் கொண்டு […]
சவுளுக் கொட்டாய் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி சரக்கு லாரி நேருக்கு நேர் மோதியதில் படுகாயமடைந்த கார்பெண்டர் சிகிச்சை பலனின்றி சாவு.
சவுளுக் கொட்டாய் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி சரக்கு லாரி நேருக்கு நேர் மோதியதில் படுகாயமடைந்த கார்பெண்டர் சிகிச்சை பலனின்றி சாவு. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கோடியூர் கிராமத்தை சேர்ந்த கார்பெண்டர் ராஜா (வயது. 56), இவரது மனைவி செல்வி. ராஜா இன்று காலை வேலைக்காக தர்மபுரியிலிருந்து பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்,சவுளுர் கொட்டாய் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் […]
கடமடை அருகே மொபட் மீது சொகுசு கார் மோதியதில் கட்டிட மேஸ்திரி படுகாயம்.
கடமடை அருகே மொபட் மீது சொகுசு கார் மோதியதில் கட்டிட மேஸ்திரி படுகாயம். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பச்சியப்பன் (வயது .35). இவர் பெங்களுருவில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.இன்று மாலை வேலை முடிந்து தனது மொபட்டில் தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.பாலக்கோடு அருகே கடமடை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சொகுசுகார் பச்சியப்பன் மீது நேருக்கு நேர் மோதியது, இதில் பச்சியப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.அக்கம்பக்கத்தினர் […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாசில்தார் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் துறை சார்பில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் மாவட்ட அலுவலர் குமார் உத்தரவின் பேரில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. ஒத்திகையின் போது திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் கூறுகையில் பெண்கள் சமையல் செய்யும்போது பருத்தி ஆடை அணிவது நல்லது, […]
கைதி உள்பட 3 பேர் சாவு
கைதி உள்பட 3 பேர் சாவு விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைனை சேர்ந்தவர் செல்வம் (வயது68). இவர் 2023-ம் ஆண்டு குற்ற வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் (தண்டனை கைதி) உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி முனீஸ் திவாகர் மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். […]
சிதம்பரம் நகரில் பள்ளிக்கு செல்லாமல் சாலைகளில் சுற்றி திரிந்த மாணவர்கள் அறிவுரை கூறி அனுப்பிய போலீசார்
சிதம்பரம் நகரில் பள்ளிக்கு செல்லாமல் சாலைகளில் சுற்றி திரிந்த மாணவர்கள் அறிவுரை கூறி அனுப்பிய போலீசார் சிதம்பரத்தில் பள்ளிக்கு வராமல் வீதியில் சுற்றித்திரிந்த மாணவர்களை போலீஸார் அழைத்துச் சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் நகர பகுதியில் பள்ளி சீறுடையுடன் பள்ளிக்கு செல்லாமல் வடக்கு வீதியில் சில மாணவர்கள் சுற்றி திரிந்தனர். அப்போது நகர பகுதியில் ரோந்து பணியில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி இதனை கண்டார். அவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்த […]