மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை 19.07.2013-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஏரகாடைச் சேர்ந்த கோபால் என்பவருக்கும் அவரது மனைவி வனிதா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில் கோபால் அவரது மனைவி வனிதாவை கத்தியால் குத்தி கொலை செய்ததையடுத்து இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய குற்ற எண் u/s 302 IPC-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று 21.02.2020-ம் தேதி […]
Month: February 2020
சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.
சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் அவர்கள் உத்தரவின்படி நெற்குப்பை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ராமர் அவர்கள் 17.02.2020 அன்று நெற்குப்பை பகுதியில் உள்ள பொது மக்களை ஒன்று சேர்த்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எளிதாக புரியும்படி எடுத்துரைத்தார். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது. உச்சிப்புளி காவல் நிலைய குற்ற எண்: 12/2020 294(b),336, 332, 307 IPC என்ற குற்ற வழக்கின் எதிரி கணேசமூர்த்தி @ கணேசன் 22/20, த/பெ ராமு, வெள்ளமாசிவலசை, நாகாச்சி, இராமநாதபுரம். என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் பேரில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி, உச்சிப்புளி காவல் […]
பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசாரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்
பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசாரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், வ/23, த/பெ.பொன்னுசாமி என்பவர் பலமுறை பாலியல் வன் கொடுமை செய்து திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் […]
இரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோரை மீட்ட இருப்புப்பாதை காவல்துறையினர்
இரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோரை மீட்ட இருப்புப்பாதை காவல்துறையினர். இரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்கள்¸ மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகியோர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு, பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் இருப்புப்பாதை காவல்துறை தலைவர் திருமதி.V.வனிதா இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் 16.02.2020-ம் தேதியன்று நடைபெற்ற சோதனையில் சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள இரயில் நிலையங்களிலும்¸ இரயில்களிலும் தணிக்கையில் ஈடுபட்டு ஆதரவற்று சுற்றித்திரிந்த 136 […]
நண்பன் கொலை வழக்கில் 5000 அபராதம், 7 ஆண்டு சிறை தண்டனை.
நண்பன் கொலை வழக்கில் 5000 அபராதம், 7 ஆண்டு சிறை தண்டனை..! சிவகங்கை வைரவன்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் கடந்த 2013-ம் வருடம் தனது நண்பர்களான மணிகண்டன் மற்றும் விஜயபாண்டியன் ஆகிய 2பேருடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஆண்டியப்பனை மேற்படி நபர்கள் இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி, கை மற்றும் ஆயுதத்தால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் படுகாயமடைந்த ஆண்டியப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆண்டியப்பன் 05.05.13 அன்று அளித்த புகாரின் பேரில் சிவகங்கை […]
அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் வருடாந்திர நினைவூட்டல் காவத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் வருடாந்திர நினைவூட்டல் காவத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 18/02/2020 அன்று காலை வருடாந்திர கூட்டு திரட்டு காவத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் , ஆயுதப்படை ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் தலைமையிலான காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்கள். அதன்பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களை Turn-out ஆய்வு செய்தார்கள். மேலும் மாவட்ட நாய் படைப்பிரிவின் மரியாதையை […]
வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்.
வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர். தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் மகள் தற்கொலை செய்ததாக காவல் நிலையத்தில் பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் யாசர் அராபத் மற்றும் மூன்று நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில். இவ்வழக்கு 17.02.2020-ம் தேதியன்று தேனி மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் […]
காவலரின் மனிதாபிமானம்..!!
காவலரின் மனிதாபிமானம்..!! புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் மோகன். இவருக்கு அண்ணாநகர் பகுதியில் காரில் வந்தவர்கள் ஒரு முதியவரை காயத்துடன் இறக்கி சென்றுவிட்டதாக தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற காவலர் மோகன், பேசமுடியாத நிலையில் இருந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். அதனை அவர் சாப்பிட முடியாததால் அவரே ஊட்டிவிட்டதுடன், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து பின்பு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார்.
கோத்தகிரியில் வனவிலங்குகளுக்கு ஆபத்தான முறையில் சுருக்கு வைத்தவர் மீது வழக்குப் பதிவு
கோத்தகிரி அருகே சுருக்கில் சிக்கிய புலி தப்பிய நிலையில், வன விலங்குகளை வேட்டையாட சுருக்கு வைத்த நில உரிமையாளர் மீது வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள உயிலட்டி கிராமப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கும் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ள விளைநிலத்திற்கும் இடையில் உள்ள புதர் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியில் புலி ஒன்று சுருக்கு வலையில் சிக்கியது. வனத்துறையினர் மீட்புப் பணியில் இறங்கும் முன்பு புலி தாமாக […]