பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணிடம் விசாரணை மதுரை புதுராமநாதபுரம் ரோடு, கம்பர் தெருவை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது 35). இவர் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- பைக்காரா, முத்துராமலிங்கபுரம், புது மேட்டு தெருவில் இளங்கோவன் (45) என்பவர் வசித்து வந்தார். இவர் பொன்மேனி பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இவரும், மனைவி கவிதாவும் மாத சீட்டு வசூலித்து வந்தனர். நான் அவர்களிடம் ரூ.2 லட்சம் சீட்டு போட்டிருந்தேன். மாத சீட்டு முதிர்வடைந்தது. இளங்கோவன் […]
Month: November 2022
பாலக்கோட்டில் குடிநீர் கேட்டு சாலை மறியல்- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பாலக்கோட்டில் குடிநீர் கேட்டு சாலை மறியல்- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி பகுதிகளான 1,2, 3, 8,10 ஆகிய 5 வார்டுகளில்சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த 1 மாதமாக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் முறையாக வருவதில்லை எனவும் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விநியோகம் செய்வதாகவும் இதனால் போதிய தண்ணீர் இன்றி அவதிப்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் […]
பஞ்சப்பள்ளியில் 3.26இலட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
பஞ்சப்பள்ளியில் 3.26இலட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி காவல்துறையினர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பஞ்சப்பள்ளியிலிருந்து மாரண்டஅள்ளி நோக்கி வேகமாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரானை செய்தனர்.சந்தேமடைந்த காவல்துறையினர் வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்ததில் 3.26 இலட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பராக் பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து 4 இலட்சம் மதிப்புள்ள […]
மகேந்திரமங்கலம் அருகே விஷம் குடித்து கூலி தொழிலாளி சாவு
மகேந்திரமங்கலம் அருகே விஷம் குடித்து கூலி தொழிலாளி சாவு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் அருகே போடரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது .40)இவருக்கு பொன்னியம்மாள் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது.தொடர்ந்து பல்வேறு இடங்களில் வைத்தியம் பார்த்தும் இவரது தலைவலி நீங்கவில்லை, இந்நிலையில் கடந்த 12ம் தேதி இரவு மனைவியிடம் தனக்கு தாங்க முடியாத அளவிற்க்கு தலைவலி அதிகமாக உள்ளதாகவும் […]
திருமங்கலத்தில் நடந்த கிடா விருந்தில் தகராறு: துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய நபர் கைது
திருமங்கலத்தில் நடந்த கிடா விருந்தில் தகராறு: துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய நபர் கைது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கொக்குளத்தை சேர்ந்தவர் தனசேகரன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேர்த்திக்கடனுக்காக திருமங்கலம் காட்டுப் பத்திரகாளி அம்மன் கோவிலில் நேற்று கிடா வெட்டி கறி விருந்து வைத்தார். இதில் பங்கேற்குமாறு நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது மதுபோதையில் மதுரை கீழப்பனங்காடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வேதகிரி என்பவருக்கும், திருமங்கலம் அருகே உள்ள அ.தொட்டியபட்டியைச் […]
நீதிமன்ற சுதந்திரம் என்பது ஒரு நீதிபதிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமை அல்ல அது அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு
நீதிமன்ற சுதந்திரம் என்பது ஒரு நீதிபதிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமை அல்ல அது அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்புJudicial freedom is not a special right given to a judge but a responsibility given to him தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த தலைமை நீதிபதி […]
மதுரை திருமங்கலம் அருகே நடந்த வாலிபர் கொலையில் மேலும் 5 பேர் கைது
மதுரை திருமங்கலம் அருகே நடந்த வாலிபர் கொலையில் மேலும் 5 பேர் கைது திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த போஸ் மகன் பாரதிராஜா (வயது 35). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சந்தன பாண்டியன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. 2 மாதத்திற்கு முன்பு புதுப்பட்டியில் உள்ள கோவில் திருவிழாவில் பாடல் போடுவது தொடர்பாக பாரதிராஜாவுக்கும், சந்தனபாண்டிக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் பாரதிராஜாவை கைது செய்ய […]
மதுரை வைகை ஆற்றில் கொள்ளையடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 பேர் கைது
மதுரை வைகை ஆற்றில் கொள்ளையடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 பேர் கைது மதுரை வைகை தென்கரை பகுதியில் ஆயுதங்களுடன் 10 பேர் கும்பல் கொள்ளை யடிப்பதற்காக பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனையின் பேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் […]
மதுரை ஒத்தக்கடை, நகுலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் திருக்கண்ணன் (வயது 54). இவர் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக உள்ளார்.
அரசு அதிகாரி மீது தாக்குதல் மதுரை ஒத்தக்கடை, நகுலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் திருக்கண்ணன் (வயது 54). இவர் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக உள்ளார். சம்பவத்தன்று காலை திருக்கண்ணன் மருத்துவ குழுவினருடன், ஒத்தக்கடை அய்யப்பன் நகருக்கு சென்றார். அப்போது அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு யானைக்கால் நோய் தொடர் பாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதற்கு ஜகதாரணி குடியிருப்பில் வசிக்கும் சந்தோஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். […]
கார் மோதி மூன்று இருசக்கர வாகனம் சேதம் – தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக் – 6 பேர் காயம்
கார் மோதி மூன்று இருசக்கர வாகனம் சேதம் – தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக் – 6 பேர் காயம் மதுரை மாவட்டம் அண்ணா பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் ராஜேஸ் என்பவர் தனது தாய் கல்யாணி, மனைவி அமுதா மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் காட்டுமன்னார் கோவிலில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்று விட்டு மீண்டும் மதுரை திரும்பியுள்ளனர். கார், மணப்பாறை அடுத்த திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை கைக்காட்டி அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த […]