பாலக்கோடு அருகே கஞ்சா பதுக்கிய விற்ற முதியவர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல்துறையினர் பாலக்கோடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தாமரை ஏரி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பேளரஅள்ளி பகுதியை சேர்ந்த பெருமாள் […]
Day: November 20, 2022
காரிமங்கலம் பந்தாரஅள்ளி அருகே விவசாயியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது
காரிமங்கலம் பந்தாரஅள்ளி அருகே விவசாயியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது காரிமங்கலத்தை அடுத்த பந்தாரஅள்ளி அருகே உள்ள மேட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 32). விவசாயி. சம்பவத்தன்று இவர், கல்லுகாரன்கொட்டாயில் உள்ள அவருடைய மாமனார் வீட்டில் கூரையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த சின்னசாமி, இவருடைய மனைவி பழனியம்மாள் ஆகியோர் நிலப்பிரச்சினை தொடர்பாக கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மண்வெட்டி மற்றும் கட்டையால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் சிகிச்சைக்காக […]
தர்மபுரி மாவட்டம் தமிழக டிஜிபி சைலேந்தர் பாபு அவர்கள் உத்தரவின் பேரில், பொம்மிடி காவல் நிலைய பணிகள் குறித்து பள்ளி மாணவருக்கு விழிப்பு…
தர்மபுரி மாவட்டம் தமிழக டிஜிபி சைலேந்தர் பாபு அவர்கள் உத்தரவின் பேரில், பொம்மிடி காவல் நிலைய பணிகள் குறித்து பள்ளி மாணவருக்கு விழிப்பு… தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவியருக்கு காவல் நிலைய பணிகள் அதன் பராமரிப்பு முறைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என, தமிழக டிஜிபி சைலேந்தர் பாபு அவர்கள் உத்தரவின் பேரில், பி. துறிஞ்சிப்பட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொம்மிடி காவல் நிலையத்தில் அதன் பணி பராமரிப்புகள், குற்ற வழக்கு விசாரணை, சிறைக் […]
காரியாபட்டி காவல்நிலையம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு.
காரியாபட்டி காவல்நிலையம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு. தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படியும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரப்படியும் காரியாபட்டி வட்ட ஆய்வாளர் அவர்கள் அறிவுரைப்படி யும் World day for prevention of child Abuse நாள் கொண்ட்டாடப்பட்டது. அதில்மாணவர்களை காவல் நிலையம் ஆரம்பித்து அவர்களுக்கு காவல் நிலைய சுற்று புறம் மற்றும் காவல் நிலையம் பற்றிய ஒரு தெளிவும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு சட்டம், […]
காவல் துறையினர் வாகன சோதனையின் போது வண்டி சாவியை எடுப்பது சட்டப்படி சரியா?
காவல் துறையினர் வாகன சோதனையின் போது வண்டி சாவியை எடுப்பது சட்டப்படி சரியா? குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு 102 ன்படி நான்தான் வாகனத்தின் உரிமையாளர் என்று உரிய ஆவணங்களை காண்பிக்க தவறும் போதும் ஓரு வாகனமானது திருடப்பட்டுள்ளது அல்லது ஒரு குற்றத்தை புரிந்து விட்டு தப்பிப்பதற்காக அவ்வாகனம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வண்டி சாவியை எடுக்கலாம் அல்லது மோட்டார் வாகன சட்டம் 185 பிரிவின் கீழ் குடி போதையில் வண்டியை ஓட்டி வந்திருந்தாலும் […]
கொலை முயற்சியில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
கொலை முயற்சியில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு கொலை முயற்சியில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிகப்பட்டார்.மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.மதுரை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா, கோவிலாங்குளம் மு.வில்லேனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 34). இவர் மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 2014-ம் ஆண்டு ஊழியர்களை கட்டி போட்டு நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பும் போது போக்குவரத்து காவலர் ஜீவானந்தத்தை தாக்கி கொல்ல முயன்றார். […]
மதுரையில் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த பழ வியாபாரி கைது
மதுரையில் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த பழ வியாபாரி கைது விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் வெற்றிவேல்முருகன் (வயது 28). இவர்கள் இருவரும் மதுரையில் வீடு எடுத்து தங்கி பழ வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை வெற்றிவேல் முருகன் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். அவருக்கு கஞ்சா மற்றும் மது பழக்கம் இருந்ததால், போதையில் சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கி […]
போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் சிறப்பு படை பிரிவு
போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் சிறப்பு படை பிரிவு மதுரை மாநகரில் உள்ள பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கு போலீசார் மூலம் பாலியல் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கரிமேடு, செல்லூர், கூடல்புதூர், தல்லாகுளம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு மாணவ-மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ‘பாலியல் சீண்டல் செய்தால் என்ன செய்ய வேண்டும்? அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு […]
மதுரை திருமங்கலத்தில்காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
மதுரை திருமங்கலத்தில்காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் கார்த்திகா(24). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் திருமங்கலம் பன்னிகுண்டு கிராமத்தை சேர்ந்த வீரணகுமார்(34) பணிபுரிந்தார். ஒரே நிறுவனத்தில் பணி புரிந்த இருவ ருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு வீரணகுமார் காதலி கார்த்திகாவுடன் சுற்றியுள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் வீரணகுமாருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இது […]
மதுரை வைகையாற்றில் அடைப்புகளை அகற்றிய செல்லூர் காவல் நிலைய ஏட்டுவுக்கு கமிஷனர் பாராட்டு
மதுரை வைகையாற்றில் அடைப்புகளை அகற்றிய செல்லூர் காவல் நிலைய ஏட்டுவுக்கு கமிஷனர் பாராட்டு மதுரை வைகையாற்றில் ஆகாயத்தாமரைகள் அடைப்புகளை அகற்றிய ஏட்டுவுக்கு கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.துணை கமிஷனர்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தனர். மதுரை கல்பாலம் வைகை ஆற்றின் மதகுகளில் செடி-கொடி, குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரை காரணமாக அடைப்பு ஏற்பட்டது. வைகை ஆற்று வெள்ளம், இரு கரைகளையும் தாண்டி சாலைக்கு வந்தது. செல்லூர் போலீஸ் ஏட்டு ராமன் ஆற்றுக்குள் துணிச்சலாக இறங்கி, மதகுகளில் […]