போக்குவரத்து விதி மீறல்களுக்கு எந்த போலீஸ் அபராதம் விதிக்கலாம் போக்குவரத்து விதிமீறல்களை எந்த போலீஸ் சோதனை செய்யலாம் யார் அபராதம் விதிக்கலாம் என்பது பொது மக்களில் நிறைய பேருக்கு சந்தேகம் உள்ளது. காவல்துறையை பொறுத்தமட்டில் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு போக்குவரத்து ஆயுதப்படை என செயல்பட்டு வருகிறது இதில் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு என்ற லோக்கல் போலீசாருக்கு சகல அதிகாரங்களும் உண்டு இவர்கள் வாகனங்களை எந்த இடத்திலும் சோதனை செய்தல் வாகன விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்க முடியும் […]
Day: November 24, 2022
பொய்யான உரிமையியல் பிரச்சினையில் விரைவில் தீர்வு காண்பது எப்படி?
பொய்யான உரிமையியல் பிரச்சினையில் விரைவில் தீர்வு காண்பது எப்படி? இரண்டு நபர்கள் ஓர் இடத்திற்கு உரிமை கொண்டாடுகிறார்கள் எனில் அவர்களில் யார் பெயரில் அந்த இடத்திற்குரிய பத்திரம் அல்லது பட்டா போன்ற ஆவணங்கள் இருக்கிறது என்பதை சரி பார்த்தாலே வழக்கு பிரச்சினை முடிந்து விட்டது. ஒரு வேளை இரண்டு நபர்களும் அவரவர்கள் பெயரில் சான்றாவணம் வைத்திருந்தால் அது ஒன்று அவர்களில் ஒருவரால் போலியாக தயாரிக்கப்பட்டது அல்லது அவர்களில் ஒருவரால் அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து போலியாக பெறப்பட்டது […]
மதுரை செல்லூர் குலமங்கலம் இணைப்புசாலையை சீரமைக்க கோரி பகுதிவாழ் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மறியல்
மதுரை செல்லூர் குலமங்கலம் இணைப்புசாலையை சீரமைக்க கோரி பகுதிவாழ் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மறியல் மதுரை செல்லூர் குலமங்கலம் இணைப்பு சாலையை சீரமைக்க கோரி பகுதி வாழ் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். சாலை விபத்துகளை ஏற்படுத்தும் குலமங்கலம் மெயின் ரோட்டை சீரமைக்க கோரி நேற்று மறியல் போராட்டம் நடந்தது. பல ஆண்டுகளாக சாலைகள் போடப்படாமல் இருக்கும் வ.உ.சி […]
திருச்சியில் 3 கடைகளில் கொள்ளை- 11 பவுன் தங்க நகை 10 கிலோ வெள்ளி திருட்டு
திருச்சியில் 3 கடைகளில் கொள்ளை- 11 பவுன் தங்க நகை 10 கிலோ வெள்ளி திருட்டு திருச்சி மாவட்டம் துறையூர் தியாகி சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (48). அதே தெருவை சேர்ந்தவர் பிரபு (36). இவர்கள் இருவரும் ஆலமரம் அருகே உள்ள தெற்கு மாரியம்மன் கோவில் தெருவில் அடுத்தடுத்து நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் இன்று அதிகாலையில் நகை கடைக்கு […]
கள்ளக்காதலுக்கு இடையூறு: வெளிநாட்டில் இருந்து வந்த கணவரை ஊனமாக்க மனைவி செய்த கொடூர செயல்
கள்ளக்காதலுக்கு இடையூறு: வெளிநாட்டில் இருந்து வந்த கணவரை ஊனமாக்க மனைவி செய்த கொடூர செயல் மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது35). என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும்(24) திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதன்படி மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி மகளை பள்ளியில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு […]
கல்லூரி பஸ் மோதி மாணவர் பலி
கல்லூரி பஸ் மோதி மாணவர் பலி மதுரை சிக்கந்தர் சாவடி யை சேர்ந்தவர் பிரவீன், கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது பயஸ், ஆனைக்குளத்தை சேர்ந்தவர் சரவணன். நண்பர்களாக இவர்கள் 3 பேரும் மதுரை அழகர்கோவில் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். 3 பேரும் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றதாக தெரிகிறது. அழகர்கோவில் அருகே சென்ற போது அவர்கள் படிக்கும் கல்லூரி பஸ்சும் முன்னால் சென்று கொண்டிருந்தது. அதனை முந்தி செல்ல […]
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்கள் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்கள் கைது மதுரை மேலவாசல், அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 47). ஜவுளிக்கடை ஊழியர். இவரை நாய் கடித்து விட்டது. தடுப்பூசி போடுவதற்காக, மோட்டார் சைக்கிளில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பழைய அரசு மருத்து வமனை சண்முகம் பிள்ளை தெருவில் உள்ள சாய்பாபா கோவில் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து மதிச்சியம் போலீசில் […]
தருமபுரி மாவட்டம் காவல்துறையினர் உதவியுடன் ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்து மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர்.
தருமபுரி மாவட்டம் காவல்துறையினர் உதவியுடன் ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்து மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர். தருமபுரி மாவட்டம் காவல்துறையினர் உதவியுடன் ஆதரவற்ற உடல்களை மை தர்மபுரி அமரர் சேவை என்கின்ற தன்னார்வ அமைப்பினர் நல்லடக்கம் செய்து வருகின்றனர். மை தருமபுரி அமைப்பினருக்கு காரிமங்கலம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்டு 45 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற ஆணின் உடல் நல்லடக்கம் செய்ய வேண்டி தகவல் கிடைத்தது. இவர் கடந்த மாதம் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார், […]
பாலக்கோடு அருகே சூதாடிய 22 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.
14 இருசக்கர வாகனங்கள் சிக்கின.
பாலக்கோடு அருகே சூதாடிய 22 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.14 இருசக்கர வாகனங்கள் சிக்கின. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்துவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். பாளையம் கிராமத்தில் அருள்பிரகாஷ் என்பவரின் வீட்டில் மங்காத்தா எனப்படும் வெட்டுஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். காவல்துறையை கண்டதும் தப்பி ஓட முயன்றவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். […]