போலி ஆவணம் தயாரித்து வங்கியில் நகையை அபகரிக்க முயற்சி சென்னை பூந்தமல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியில் நெசவுத் தொழில் செய்து வருபவர் அதியப்பன். இவரது மனைவி கனகரத்தினம் (வயது65). இவர் பார்வையற்றவர். இவருடைய சகோதரி சந்திரபிரபா. அவரது கணவர் பாலசுப்பிரமணி ஆகிய 2 பேரும் இறந்து விட்டனர். அவர்களுக்கு வாரிசு இல்லாததால் கனகரத்தினம் திருமங்கலம் கனரா வங்கியில் 100 பவுனுக்கு மேற்பட்ட நகைகளை லாக்கரில் வைத்துள்ளார். இந்த நிலையில் அவருடைய உறவினர்கள் போலியான ஆவணம் தயாரித்து நகையை […]
Day: November 12, 2022
விவசாய நிலத்தில் கஞ்சா செடியை வளர்த்து விற்பனை செய்த முதியவர் கைது
விவசாய நிலத்தில் கஞ்சா செடியை வளர்த்து விற்பனை செய்த முதியவர் கைது தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் பாலக்கோடு அடுத்த எருமாம்பட்டி கிராமத்தில் கஞ்சாசெடி வளர்த்து விற்பனை செய்வதாக பாலக்கோடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் பாலக்கோடு அடுத்த எருமாம்பட்டி கிராமத்தில் நடத்திய […]
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார் .
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார் . தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தொட்டம்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 45) இவர் நேற்று மாலை சித்திரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்அப்போது எதிரேவந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் இவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர்மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிவலிங்கம் பலியானார். இந்த விபத்து குறித்து பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
மாணவிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க எடுத்த நடவடிக்கை என்ன?- அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
மாணவிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க எடுத்த நடவடிக்கை என்ன?- அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு மதுரையைச் சேர்ந்த விக்டோரியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான் சட்டப்படிப்பு முடித்து ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். அரசு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருந்தேன். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி அன்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அந்த வீடியோவில், மதுரை கோரிப்பானையந்தில் உள்ள மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி […]
திருமங்கலம் அருகே வெடி விபத்தில் 5 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
திருமங்கலம் அருகே வெடி விபத்தில் 5 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காண்டை ஊராட்சிக்குட்பட்ட அழகுசிறை கிராமத்தில் அனுசுயா தேவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று மதியம் பட்டாசு தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த கோபி, விக்கி, வல்லரசு, அம்மாசி, […]
திருமங்கலம் அருகே முன் விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
திருமங்கலம் அருகே முன் விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் பாரதிராஜா (வயது35) இவருக்கு திருமணமாகி முகிலா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிராஜாவிற்கும், அதே ஊரை சேர்ந்த சந்தனபாண்டி என்பவருக்கும் கோவில் திருவிழாவில் மைக் செட் போடுவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அடிக்கடி இவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக திருமங்கலம் […]
திருச்சியில் (17.11.2022) அன்று வாகனம் பொது ஏலம்
திருச்சியில் (17.11.2022) அன்று வாகனம் பொது ஏலம் திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம் (Ambassador Car – LMV) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வருகின்ற (17.11.2022)-ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் (12.11.2022) முதல் (16.11.2022)-ம் தேதி காலை 10:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை திருச்சி மாநகர […]
மாதுரை டி.கல்லுப்பட்டி அருகே திருவிழாவில் பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்கள்
மாதுரை டி.கல்லுப்பட்டி அருகே திருவிழாவில் பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்கள் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே அம்மாபட்டியில் ஏழூர் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. நேற்று நடந்த விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நேற்று மாலை திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண்களிடம் […]