மதுரை மாவட்டத்தில் விபத்தை தவிர்க்க ரூ.100 கோடியில் 7 மேம்பாலங்கள் மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி சூரியசக்தி பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் மதுரை எம்.பி. வெங்கடேசன் கலந்து கொண்டு நிழற்குடையை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- மேலூர், கொட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.10 கோடியில் பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற உள்ளது. மேலூர் பகுதியில் […]
Month: March 2023
மதுரை மாநகராட்சிக்கு எதிராக போராட்டம்
மதுரை மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பதவி வகித்து வருகிறார். இவர் தி.மு.க. கட்சியை சேர்ந்தவர். மாநகராட்சி துணை மேயராக நாகராஜன் உள்ளார். இவர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். மதுரை மாநகராட்சியில் பதவிக்கு வந்த புதிதில் மேயரும், துணை மேயரும் இணக்கமாகவே செயல் பட்டு வந்தனர். மாநகராட்சி நிகழ்ச்சிகளில் 2 பேரையும் பல நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்க முடிந்தது. ஆனால் சமீப காலமாக இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி […]
கோவை கோர்ட்டு அருகே ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் போலீசிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்தார்
கோவை கோர்ட்டு அருகே ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் போலீசிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்தார் கோவை கோர்ட்டு அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. 2 ரவுடிகளிடையே ஏற்பட்ட விரோதம் காரணமாக கோகுல் கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தனிப்படை போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்திருந்தனர். இந்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த […]
மின்சாரப் புகாருக்கு லஞ்சமின்றி உடனடி தீர்வு
மின்சாரப் புகாருக்கு லஞ்சமின்றி உடனடி தீர்வு தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் 9498794987 என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின்இணைப்பு எண்ணை தெரிவித்து உங்களுக்கு என்ன புகாரோ அதை தெரிவித்தால் போதும். தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள். அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சார வாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் […]
3 மாத குழந்தை கடத்தல் பெண் உள்பட இருவர் கைது
3 மாத குழந்தை கடத்தல் பெண் உள்பட இருவர் கைது மதுரை ரயில்வே நிலையத்தில் உறங்கி கொண்டிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த சையதலி பாத்திமா என்பவர்களது 3 மாத குழந்தை ஷாலினியை போஸ் வயது 34, மற்றும் அவரது பெண் நண்பர் கலைவாணி வயது 33, இருவரும் சேர்ந்து கடத்தி சென்றனர் இது குறித்து தகவல் அறிந்து வந்த திலகர் திடல் போலீசார் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது […]
கோவை மத்திய சிறை இடம் மாறுகிறது
கோவை மத்திய சிறை இடம் மாறுகிறது கோவை மத்திய சிறை காரமடை அருகே உள்ள பிளிச்சி பகுதிக்கு இடமாறுகிறது. இதற்காக கையகப்படுத்தப்பட்ட 95 ஏக்கர் நிலத்தை மாநில உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி நேற்று பார்வையிட்டார். கோவை மத்திய சிறையில் தற்போது 2,350 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறை, செம்மொழிப் பூங்காவாக இடமாற்றம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையை நகரை விட்டு மாற்ற அரசு உத்தரவிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து மத்திய சிறையை புதிதாக அமைக்க இடம்தேர்வு […]
பெண் காவலர்களுக்கு முதல்வரின் முக்கிய அறிவிப்பு
பெண் காவலர்களுக்கு முதல்வரின் முக்கிய அறிவிப்பு தமிழக காவல்துறையில் இந்த ஆண்டு பெண் போலீசின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண் காவலர்களுக்காக 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அதன்படி ரோல்கால் எனும் காவல் அணிவகுப்பு இனி காலை 8 மணிக்கு மாற்றப்படும் பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி தனியாக நடத்தப்பட்டு விருது வழங்கப்படும் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வரை அமைத்து தரப்படும் பெண் காவலர்களின் […]
உங்கள் வழக்கில் நீங்களே வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது, எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்கு நாமே எடுத்துக் கொள்வதாகும்
நீங்களும் வக்கீல்தான் உங்கள் வழக்கில் நீங்களே வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது, எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்கு நாமே எடுத்துக் கொள்வதாகும் வக்கீல் அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா? நீதிமன்றத்தின் முன் அனுமதியோடு ஆஜராகி வாதிடும் ஒவ்வொரு நபரும் வக்கீல்தான் அப்படீன்னு குற்ற விசாரணை முறை விதிகள் 1973- ன் விதி 2(17) ,உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908- விதி 2(15) மற்றும் வழக்கறிஞர் சட்டம் […]
சர்ச்சை வீடியோ பதிவிட்டதாக சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு
சர்ச்சை வீடியோ பதிவிட்டதாக சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாகுளம் கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு கோவிலில் சிலை வைத்தது மற்றும் இடப்பிரச்சினை தொடர்பாக இரு சமுதாயத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரபல யுடியூப்பரான சாட்டை துரைமுருகன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது யுடியூப்பில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் குறிஞ்சாகுளத்தில் நிலவும் மோதலில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவும் […]
பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை
பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை மதுரை கூடல் புதூர் பொதிகை நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் குமர வடிவேல். இவரது மகள் ஹரிணி (வயது16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் ஹரிணி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். அவர் சரியாக தேர்வு எழுதவில்லை என்று கூறப்படுகிறது. அவர் இது தொடர்பாக குடும்பத்தினரிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் […]