தென்காசி மாவட்டத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம் தென்காசி மாவட்டத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமையில் கலெக்டர் கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டரின் துணைவியார் ஹேமலதா கலந்துகொண்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவியப்போட்டி, கோல போட்டி, சமையல் போட்டி, பாடல் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் வெற்றி […]
Month: March 2023
கருமத்தம்பட்டி அருகே மாயமான இளம்பெண் உறவினர்களிடம் ஒப்படைப்பு
கருமத்தம்பட்டி அருகே மாயமான இளம்பெண் உறவினர்களிடம் ஒப்படைப்பு கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் உமாதேவி (வயது40).மனநலம் பாதிக்கப்பட்டவர். திருமணமாகவில்லை. இவரை அவரது அக்கா ருக்மணி என்பவர் கவனித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென உமாதேவி மாயமானார். அவரை அவரது அக்கா பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ருக்மணி மாயமான தனது தங்கையை கண்டுபிடித்து தரும்படி கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து […]
கந்துவட்டி கொடுமை: மதுரை ஓட்டல் அதிபர் அதிக மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி
கந்துவட்டி கொடுமை: மதுரை ஓட்டல் அதிபர் அதிக மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 46). இவர் கே.புதூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அழகுராஜாவை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக […]
கோவையில் ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய வடமாநில தொழிலாளர்கள்
கோவையில் ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய வடமாநில தொழிலாளர்கள் கோவை மாவட்டத்தில் ஜவுளி, கட்டுமானம், வார்ப்படம், பம்ப் செட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனால் அச்சம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் […]
பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்
பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம் அமிழ்ந்து பேரிருளா மறியாமையில்அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ” என்ற மகாகவி பாரதியார் அவர்களின் கவிதை வரிக்கு முன்னுதாரணமாக […]
5 வயது சிறுமியை கணவர் கடத்தி சென்றதாக மனைவி புகார்
5 வயது சிறுமியை கணவர் கடத்தி சென்றதாக மனைவி புகார் மதுரை வண்டியூரை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது36),ஆட்டோ டிரை வர். இவரது மனைவி பிரபாதேவி(33). இவர்க ளுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரபா தேவி, கண்ணதாசனை பிரிந்து கடந்த 3 ஆண்டு களாக திருமங்கலத்தில் தனியாக வசித்து வருகிறார். விவாகரத்து வழக்கு திருமங்கலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. கண்ண தாசன் மனைவியிடம் இருக்கும் தனது குழந்தையை பார்க்க வந்துள்ளார். இதற்கு […]
வெளி மாநில தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வெளி மாநில தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளி மாநில தொழிலாளர்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து நிறைகுறைகளை கேட்டறிந்தார் தென்காசி மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்துவரும் வெளி மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் IPS அவர்கள் தென்காசியில் வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே நேரில் சென்று அவர்களை சந்தித்தார்அப்போது அவர் பேசுகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் […]
நாள்தோறும் பெருகிவரும் குற்றங்களை தடுக்கவும் அதை எப்படி, எவ்வாறு இனம் காண்பது என்ற விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதை குறித்து கூறும் விதமாக மக்கள் பணியில்
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை. நாள்தோறும் பெருகிவரும் குற்றங்களை தடுக்கவும் அதை எப்படி, எவ்வாறு இனம் காண்பது என்ற விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதை குறித்து கூறும் விதமாக மக்கள் பணியில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தின் சார்பாகசிறப்பு சார்பு ஆய்வாளர்களான திரு. இளங்கோவன், திரு.செல்வராசு மற்றும் முதல் நிலைக் காவலர்கள் ஆகியோர்களால் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற வார்த்தை வரிகள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை நினைவூட்டும் விதமாக. உலக மகளிர் தின வாழ்த்துக்கள் சர்வதேச மகளிர் தினம் 08.03.2023 இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினர் மற்றும் பெண் அமைச்சுப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். மேலும் […]
காவல் கண்காணிப்பாளர் சிந்து உறுதிமொழி
காவல் கண்காணிப்பாளர் சிந்து உறுதிமொழி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்து அவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற உறுதிமொழியில் மகளிர் தின கொண்டாட்டத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெண் முன்னேறினால் சமுதாயம் முன்னேறுவதற்கு உந்துசக்தியாக, அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கமுடியும் பெண்களுக்கு பல இன்னல்கள் வந்தாலும் படிப்பிலும், பண்பிலும் சிறந்து விளங்கினால் அனைத்து இன்ளல்களும் தானாகவே விட்டு விலகி ஓடிவிடும், இன்றைய கால கட்டத்தில் இருக்கும் நவீன தொழில்நுட் பங்களை […]