திருச்சியில் உற்சாக நடனமாடிய பெண் காவலர்கள் தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். இதனையடுத்து சைக்கிள் பேரணியானது நேற்று மாலை திருச்சி முதல் பட்டாலியன் வளாகத்திற்கு வந்து சேர்ந்தது. அவர்களுக்கு பட்டாலியன் கமாண்டன்ட் ஆனந்தன் தலைமையில் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் மொத்தம் 110 பெண் காவலர்கள் […]