சங்கரன்கோவில் அருகே சீட்டு விளையாட்டை தடுத்த போலீசாருக்கு அடி-உதை- 8 பேர் கும்பல் கைது சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் சப்- இன்ஸ்பெக்டர் தாமரைலிங்கம் மற்றும் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். உடப்பன்குளம் பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சீட்டு விளையாடிய வர்களிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது விசாரணையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு தினேஷ் மற்றும் சங்கர […]
Month: April 2023
பாலக்கோடு அருகே மாமியாரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு அருகே மாமியாரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்த குண்டுமணி மகன் பூவரசன் (வயது 26), கட்டிட மேஸ்திரி, இவருக்கும் அருகே உள்ள கவுண்டனூரை சேர்ந்த பிரியா (20) என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்க்கு முன்னர் திருமணம் நடந்தது. பூவரசன் மனைவியை, தன்னுடன் கட்டிட வேலைக்கு வரும்படி வற்புறுத்தி வந்துள்ளார், இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு நேற்று முன்தினம் […]
பாலக்கோடு பேளாரஹள்ளி பஞ்சாயத்தில் கஞ்சா , குட்கா புழக்கமற்ற பகுதியாக அறிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன்ஜேசுபாதம் பேச்சு .
பாலக்கோடு பேளாரஹள்ளி பஞ்சாயத்தில் கஞ்சா , குட்கா புழக்கமற்ற பகுதியாக அறிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன்ஜேசுபாதம் பேச்சு . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஹள்ளி ஊராட்சிமன்றம் கஞ்சா , குட்கா புழக்கமற்ற பகுதியாக அறிவிக்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் ராதா மாரியப்பன் தலைமையில் நடைப்பெற்றது. பாலக்கோடு ஒன்றியம் பேளாரஅள்ளி ஊராட்சிமன்றத்திலுள்ள 32 கிராமங்களிலும் முற்றிலும் கஞ்சா புழக்கமற்ற பகுதியாக கண்டறிந்து பேளாரஹள்ளி ஊராட்சியை கஞ்சா , குட்கா புழக்கமற்ற பகுதியாக மாவட்ட காவல் […]
நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் காவல் துறைக்கு பங்கு உண்டு: சப்-இன்ஸ்பெக்டரை பாராட்டிய முதலமைச்சர்
நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் காவல் துறைக்கு பங்கு உண்டு: சப்-இன்ஸ்பெக்டரை பாராட்டிய முதலமைச்சர் மதுரையை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). இவர், தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சப்-இன்ஸ்பெக்டர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கல்வி மீது ஆர்வம் கொண்ட இவர், தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு […]
மதுரை மாநகர காவல்துறை சார்பாக மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
மதுரை மாநகர காவல்துறை சார்பாக மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் மதுரை நத்தம் சாலையில் புதிய பறக்கும் மேம்பாலம் கடந்த 8ம் தேதி அன்று போக்குவரத்திற்காக திறக்கப்பட்டு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேற்படி மேம்பாலத்தில் போக்குவரத்து சீராக்குவதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு நரேந்திர நாயர் அவர்களின் உத்தரவின்படி மேற்படி மேம்பாலத்தில் 24 மணி நேரமும் உதவி ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து காவலர்களுடன் கூடிய ரோந்து வாகனம் கடந்த 16 […]
சட்டத்திற்கும் விதிக்கும் என்ன வித்தியாசம்
சட்டத்திற்கும் விதிக்கும் என்ன வித்தியாசம் சட்டம் தெரிந்தவன் சண்டைக்காரன் என்றும் விதி தெரிந்தவன் வில்லங்மானவன் என்றும் சமுதாயம் பார்கின்ற நிலைக்கு சட்டத்தை பயன்படுத்தியவர்கள் தவறாக பயன்படுத்தி விட்டார்கள் உண்மையில் சண்டை போடவா சட்டம்? நாட்டில் நடக்கும் செயல்கள் அனைத்தும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உறுவாக்கப்பட்ட தொகுப்புதான் சட்டம் இதன் நோக்கத்திற்காக. சட்டம் என்பது எதை எதையெல்லாம் செய்யக்கூடாது, எதை எதையெல்லாம் செய்யனும் இதை செய்வதால் அல்லது செய்யாமல் இருப்பதால் அது எந்த விதத்தில் குற்றமாகும் […]
போலீஸ்காரர் வீட்டில் நகை-பணம் திருட்டு
போலீஸ்காரர் வீட்டில் நகை-பணம் திருட்டு திருமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டி நடராஜ் நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது43). இவர் மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி மதுரை ஆவினில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூ. 2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்த […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வாலிபர் கொலை- கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வாலிபர் கொலை- கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு கிடாரகுளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் மணிகண்டன் (வயது 25), பொக்லைன் எந்திர டிரைவர். இவர் ஒரு வழக்கு தொடர்பாக தென்காசி கோர்ட்டில் நேற்று ஆஜராகி விட்டு மதியம் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். கிடாரகுளம் பாலத்தின் அருகே வந்தபோது, ஒரு மர்ம கும்பல் திடீரென்று மோட்டார் சைக்கிளை […]
ஏழுகுண்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டவுன் பஸ் மோதியதில் விவசாயி கை முறிந்து பலத்த காயம்.
ஏழுகுண்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டவுன் பஸ் மோதியதில் விவசாயி கை முறிந்து பலத்த காயம். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்கபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாபு (வயது.47),இவர் நேற்று மாலை சரவணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு பஞ்சப்பள்ளி அருகே புதுப்பேட்டையில் உள்ள மோகன் என்பவரின் தோட்டத்திற்க்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.பஞ்சப்பள்ளி அருகே ஏழுகுண்டுர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு டவுன் […]
சென்னையில் சினிமா துணை நடிகரை வெட்டி கடத்த முயற்சி- 4 பேர் கும்பல் கைது
சென்னையில் சினிமா துணை நடிகரை வெட்டி கடத்த முயற்சி- 4 பேர் கும்பல் கைது சென்னை ராமாபுரம், திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (23) சினிமா துணை நடிகர். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென 4 பேர் வந்தனர். அவர்கள் அஜித்தை சரமாரியாக தாக்கினர். மேலும் மது குடிக்க வற்புறுத்திய கும்பல் கத்திமுனையில் அஜித்தை அங்கிருந்து கடத்தி செல்ல முயன்றனர். அதிர்ச்சி அடைந்த அஜித் கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் கத்தியால் அஜித்தை வெட்டிவிட்டு அங்கிருந்து […]