எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் சட்ட மாணவர்கள் கோர்ட்டு வழக்கு விசாரணையை பார்வையிட்டனர் வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் அதன் நிர்வாகத்தினர் தங்கள் மாணவர்களின் சட்டக் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.டி. முருகேசன் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை முதன்மை மாவட்ட நீதிபதி அனுமதிப் பெற்று சிவகிரியில் அமைந்துள்ள கூடுதல் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையைப் பார்வையிட அழைத்துச் சென்றனர். சட்டக் கல்லூரி […]
Month: April 2023
தர்மபுரி மாவட்டத்தில்நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு கலெக்டர் அறிவிப்பு.
தர்மபுரி மாவட்டத்தில்நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு கலெக்டர் அறிவிப்பு. மே தினத்தை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மதுவிற்பனை கூடம் அனைத்தும் அடைக்க உத்தரவிடப்படுகிறது. இதை மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூத்தாண்டஅள்ளியில் மகள் மாயம்,
தந்தை போலீசில் புகார்.
கூத்தாண்டஅள்ளியில் மகள் மாயம்,தந்தை போலீசில் புகார். தர்மபுரிமாவட்டம் பஞ்சப்பள்ளியை அடுத்த கூத்தாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் இவரது மகள் சினேகா (வயது.18) இவர் இராயக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்,நேற்றிரவு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்க்கு வந்தவர் இரவு உணவு முடித்து குடும்பத்துடன் தூங்க சென்றனர்.விடியற்காலை கண் விழித்த முருகன் மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்,உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தருமாறு பஞ்சப்பள்ளி காவல் […]
பாப்பாரப்பட்டி அருகே
சந்துக்கடையில் மது விற்றவரின் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள்
மதுபாட்டில்களை உடைத்ததால் பரபரப்பு
பாப்பாரப்பட்டி அருகேசந்துக்கடையில் மது விற்றவரின் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள்மதுபாட்டில்களை உடைத்ததால் பரபரப்பு பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட் டது பூதிநத்தம் கிராமம். இங்கு அதே கிராமத்தை சேர்ந்த பெருமான் மகன் ஜெயராமன் (வயது 30). இவர் தனது வீட் டில் சந்துக்கடை நடத்தி மது விற்பனை செய்து வந்தார். இதுதொடர்பாக கிராம மக்கள் கடந்த கிராமசபைகூட்டத்தில் ஊராட்சி நிர்வாகத் திடம் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை.எதுவும் எடுக்கப்படவில்லை,மேலும் சத்துக்கடையில் 24 மணி நேரமும் விற்பனை செய்வதால் […]
பாலக்கோடு அருகே குப்பன் கொட்டாய் கிராமத்தில் நிலத்தில் இருந்த மரம் யாருக்கு சொந்தம் என்ற தகராறில் அடிதடி
இருவர் கைது கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் .
பாலக்கோடு அருகே குப்பன் கொட்டாய் கிராமத்தில் நிலத்தில் இருந்த மரம் யாருக்கு சொந்தம் என்ற தகராறில் அடிதடிஇருவர் கைது கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கல்கூடபட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது.40)இவருக்கு குப்பன் கொட்டாய் பகுதியில் விவசாய நிலம் உள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழையினால் இவரது நிலத்தில் இருந்த தேக்கு மரம் சாய்ந்து பக்கத்து நிலமான காண்டீபன் என்பவரது நிலத்தில் விழுந்தது,காண்டீபன் தேக்கு மரத்தை வெட்டி […]
சென்னை ராமாபுரத்தில் வங்கியில் கடன் பெற்று தருவதாக காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த போலி டி.எஸ்.பி. கைது
சென்னை ராமாபுரத்தில் வங்கியில் கடன் பெற்று தருவதாக காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த போலி டி.எஸ்.பி. கைது சென்னை ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42) பெயிண்டிங் காண்டிராக்டர். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு கே.கே நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பாலாஜி (வயது60) என்பவர் அறிமுகமானார். அப்போது “வங்கி உயர் அதிகாரிகளுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. வங்கியில் கடன் பெற்று […]
தமிழகத்திலும் தலையெடுக்கும் ‘தாதா’ அரசியல்… களை எடுக்க போலீசார் அதிரடி திட்டம்
தமிழகத்திலும் தலையெடுக்கும் ‘தாதா’ அரசியல்… களை எடுக்க போலீசார் அதிரடி திட்டம் ‘தாதா அரசியல்’ உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் சர்வ சாதாரணம்.தமிழகத்தில் ‘தாதா அரசியல்’ தலையெடுக்க தொடங்கி இருப்பது பேராபத்து என்று எச்சரிக்கிறார் போலீஸ் அதிகாரி.கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்பார்கள். அந்த வகையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கத்தியை தூக்கி கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் ஒரு கட்டத்தில் “வேண்டாம் இந்த ரவுடியிசம்” என்று நினைத்து ஒதுங்கி வாழ நினைத்தால் அது […]
பெண் பயணி பையில் 22 பாம்புகள் – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்!
பெண் பயணி பையில் 22 பாம்புகள் – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்! மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய பெண் பயணியிடம் இருந்து 22 பாம்புகள் மீட்கப்பட்டன. பெண் கொண்டு வந்த பைகளில் பல்வேறு வகையை சேர்ந்த பாம்புகள் தனித்தனியே பிளாஸ்டிக் டப்பாக்களில் வைக்கப்பட்டு இருந்தன. அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெண் பாம்புகளை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின் பெட்டிகளை திறந்து பாம்புகளை அதிகாரிகள் நீண்ட கம்பி மூலம் வெளியே எடுத்தனர். இவ்வாறு செய்யும் போது, […]
கன்னியாகுமரி மாவட்டம் , நித்திரவிளை போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் , நித்திரவிளை போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு போலீஸ் நிலையத்தின் பின்புறம் காலியாக கிடக்கும் இடத்தில் தங்கும் விடுதி அமைக்கலாம் என்ற ஆலோசனை நடத்தினார்.காவல் நிலைய வளாகத்தில் உள்ள பட்டாலியன் பிரிவையும் ஆய்வு செய்தார்.நாகர்கோவில்:தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட கொல்லங்கோடு, நித்திரவிளை போலீஸ் நிலையங்களை திடீரென ஆய்வு மேற்கொண்டார். நித்ராவிளை போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர் புகார்தாரர்கள் வருகை பதிவேடு மற்றும் வழக்கு சம்பந்தமான கோப்புகளை ஆய்வு […]
ரயிலில் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
ரயிலில் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் ரயிலில் பயணம் செய்வதற்கும் சில விதிகள் உள்ளன. ஒவ்வொரு பயணிகளும் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான விதிகள் சில உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், ரயில்வேயின் ஒரு முக்கியமான விதியைப் பற்றி இங்கு காணலாம். இந்த விதியின் கீழ், ரயில்வேயில் சில பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களுடன் யாராவது சென்றால், ரயில்வே சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்படலாம். ரயிலில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் வெடி […]