தமிழகத்தில் போதை பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தகவல்கள் அளிப்பவர்களை பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதை பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 426 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1590 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 730 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் ஐ.ஜி.ருபேஷ் குமார் […]
Month: April 2023
லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது37). மினி லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று திருச்சியிலிருந்து மதுரைக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். மேலூர் அருகே உள்ள தெற்குபட்டி நான்கு வழிச்சாலையில் விஜயன் லாரியை நிறுத்தி கீழே இறங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென விஜயனை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,840 மற்றும் வெள்ளி நகையையும் பறித்து கொண்டு தப்பினர். இதே போல் மேலூர் அருகே உள்ள சுண்ணாம்பூரை சேர்ந்தவர் முருக பெருமாள். இவர் […]
பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்த தாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் நேருயுவ கேந்திரா மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் சிறப்பாக செயல்படும் உறுப்பினர்களை தேர்வு செய்து, குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வ லர்களாக செயல்படுத்திடும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளித்திட வேண்டும். சிறுதொழில் பிச்சையெடுப்பில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இளைஞர் […]
திருச்சியில் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அகிலா. குறு விவசாயியான அகிலாவின் தந்தையார் வையாபுரி அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை தனது தந்தையார் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டி அகிலா மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு செய்துள்ளார். இவரது மனுவினை பரிசீலனை செய்த அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பழனியம்மாள் (44) என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதற்கு 5000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே […]
வாலிபரை தாக்கிய தந்தை-மகன்கள் கைது
மதுரை ஆத்திகுளம், அங்கையற்கண்ணி காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் ஸ்ரீ விஷ்ணு ராம் (வயது 24). இவரது தாத்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். அதற்கான இறுதிசடங்குகளை கே.புதூர், பாண்டியன் நகரை சேர்ந்த அந்தோணி (52) என்பவர் செய்தார். பின்னர் அவர் பேசியதற்கு மேல் கூடுதலாக பணம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அவருக்கும், ஸ்ரீ விஷ்ணு ராமுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்தோணி தனது மகன்களுடன் சேர்ந்து விஷ்ணுராமை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து […]
சென்னை ஈ.வே.ரா. சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் ஈ.வே.ரா சாலையில் சுதா ஓட்டல் முன்பு (நாயர் மேம்பாலம் சந்திப்பிற்கும் தாசபிரகாஷ் பாயின்ட் சந்திப்பிற்கும் இடையில்) நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்கிரமித்து, இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் மேற்கொள்ள உள்ளதால், போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.கோயம்பேட்டில் இருந்து ஈ.வே.ரா சாலை வழியாக வரும் வாகனங்கள் தாசபிரகாஷ் சந்திப்பில் இருந்து நாயர் மேம்பாலம் சந்திப்பை […]
மாணவிகளின் விருப்பத்துக்கு மாறாக பேராசிரியர் ஆபாசமாக செயல்பட்டதாக எப்.ஐ.ஆரில் பரபரப்பு குற்றச்சாட்டுகள்
மாணவிகளின் விருப்பத்துக்கு மாறாக பேராசிரியர் ஆபாசமாக செயல்பட்டதாக எப்.ஐ.ஆரில் பரபரப்பு குற்றச்சாட்டுகள் கலாசேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பேராசிரியர் அரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பரபரப்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு போட்டுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 509 என்கிற சட்ட பிரிவு பெண்ணின் கற்புக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சட்டப்பிரிவாகும். இந்த சட்டப்பிரிவின்கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 354-ஏ.ஐ.பி.சி. என்கிற சட்டப்பிரிவும் கடுமையான […]
கடையம் அருகே வீட்டில் நகை-பணம் கொள்ளை
கடையம் அருகே வீட்டில் நகை-பணம் கொள்ளை கடையம் அருகே உள்ள முதலியார்பட்டியை சேர்ந்தவர் அகமது மீரான். இவரது மனைவி அசன் பாத்து (வயது 75). இவர் நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு சாவியை கதவின் மேலே வைத்துவிட்டு அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்திற்கு பின்னர் வீடு திரும்பிய அசன் பாத்து வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் ரூ.5 ஆயிரம் மற்றும் […]
இன்ஸ்டாகிராமில் பெண் குறித்து அவதூறு பரப்பிய வாலிபர்- போலி ஐ.டி. உருவாக்கி பதிவிட்டது அம்பலம்
இன்ஸ்டாகிராமில் பெண் குறித்து அவதூறு பரப்பிய வாலிபர்- போலி ஐ.டி. உருவாக்கி பதிவிட்டது அம்பலம் தென்காசி பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த ஒரு வருடமாக அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து போன் அழைப்புகள் வந்துள்ளது. இந்நிலையில் அதில் பேசுபவர்கள் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளனர். அவ்வாறு பேசிய ஒருவருடைய செல்போன் எண் மூலம் இன்ஸ்டாகிராமில் ஒரு போலியான கணக்கு தொடங்கப்பட்டு, அதன் மூலமாக தன்னை பற்றி அவதூறு செய்தி பலருக்கும் பகிரப்பட்டு உள்ளதை அறிந்த அந்த பெண் […]
சாம்பவர்வடகரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி கைது
சாம்பவர்வடகரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி கைது போராட்டம் செய்த சிறுமியின் உறவினர்கள். தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையை அடுத்த ஊர்மேலழகியான் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அந்த வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது பள்ளி மாணவியை மோட்டார் சைக்கிளில் கட்டாயப்படுத்தி ஏற்றி உள்ளார். பின்னர் சிறுமியை காட்டுப்பகுதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த சிறுமி நடந்த […]