Police Department News

பாலக்கோடு அருகே சர்க்கரை நோயால் கால்கள் பாதிக்கப்பட்ட மூதாட்டி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

பாலக்கோடு அருகே சர்க்கரை நோயால் கால்கள் பாதிக்கப்பட்ட மூதாட்டி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி கந்தம்மாள் (வயது 60). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருந்து வந்தது. இதனால் அவருடைய 2 கால்களும் பாதிக்கப்பட்டன. வலியால் அவதிப்பட்டு வந்த அவர், பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு குணமாகவில்லை.மீண்டும் வலி அதிகரித்ததால் மூதாட்டி கந்தம்மாள் […]

Police Department News

பாலக்கோடு பஸ் நிலையம் அருகில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

பாலக்கோடு பஸ் நிலையம் அருகில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,அதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாலக்கோடு பஸ் நிலையம் அருகில் லாட்டரி சிட்டு விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தில் மைதீன்நகரை சேர்ந்த யூசுப் அலி (வயது. 43) என்பதும் இவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள் […]

Police Department News

ஆழ்வார்குறிச்சி பகுதியில் மகளிர் குழு பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

ஆழ்வார்குறிச்சி பகுதியில் மகளிர் குழு பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் 19 பெண்கள் இணைந்து ஸ்டார் மகளிர் குழுவில் கடந்த 2012 முதல் 2018 வரை மாதம் ரூ. 100, ரூ. 200 என்ற வீதம் சிறுக சிறுக சேமித்து வந்த நிலையில் அக்குழுவின் தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2018 முதல் சேமிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மேற்படி குழு தலைவி மீதமுள்ள பணத்தை தங்களுக்கு தராமல் மோசடி செய்ததாக […]

Police Department News

ஐ.பி.எஸ் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

ஐ.பி.எஸ் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு ஆவடி மாநகர காவல் ஆணையராக அருண் திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகை எஸ்.பி.யாக ஹர்ஷ் சிங், ஈரோடு எஸ்.பி.யாக ஜவஹர், நாமக்கல் எஸ்.பி.யாக ராஜேஷ் கண்ணன், வேலூர் எஸ்.பி.யாக மணிவண்ணன் நியமனம் செங்கல்பட்டு எஸ்.பி.யாக சாய் பிரநீத், திருப்பூர் எஸ்.பி.யாக சாமிநாதன், விழுப்புரம் எஸ்.பி.யாக சஷாங்க் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக […]

Police Department News

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சாராயம் விற்றவர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சாராயம் விற்றவர் கைது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் வம்பாமேடு பகுதியில் விஷச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். பலர் பார்வை இழந்தனர்.இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில் தனிப் படைபோலீசார் பண்ருட்டி புலவனூர்காலனி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்தஅன்பழகன் (60 மதகடிப்பட்டு சென்று 12 சாராய பாக்கெட் வாங்கி கொண்டு வந்து புலவனூர் கர்ம […]

Police Department News

தூக்குபோட்டு மூதாட்டி சாவு

தூக்குபோட்டு மூதாட்டி சாவு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே செங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது65). கணவன்-மனைவி இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பழனியம்மாள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேதபரி சோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு […]

Police Department News

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் நிருபர்களிடம் கூறியதா வது:- ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்த தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இந்த வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கிறோம். இதை மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். இனி கால்நடைகளுக்கு எந்த தீங்கும் […]

Police Department News

பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்தவர் சாவு

பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்தவர் சாவு மதுரை பாண்டியன் நகர் முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (49). இவர் தெற்குவாசல் பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உறவினர் சாகுல் ஹமீது கொடுத்த புகாரின் பேரில் தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள […]

Police Department News

வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய கட்சி பிரமுகருக்கு போலீசார் வலை வீச்சு

வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய கட்சி பிரமுகருக்கு போலீசார் வலை வீச்சு தமிழகத்தில் அண்மை காலமாக பிறந்தநாள் விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தரவர்கத்தினரும் பிறந்தநாள் விழாக்களை மண்டபத்தில் வைத்து கொண்டாடுகிறார்கள். அப்போது உற்சாக பெருக்கத்தில் இளைஞர்கள் அச்சுறுத்தும் வகையில் செய்யும் செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கேக் வெட்டுவதற்கு அரிவாள், வாள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். தங்கள் பகுதிகளில் ‘கெத்து’ காட்டுவதற்காக பிறந்தநாள் விழாக்களில் இதுபோன்ற அடாவடி செயல்களில் சிலர் ஈடுபடுவது […]

Police Department News

வேடசந்தூரில் காற்றாலை ஏற்றி வந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியது- பெரும் விபத்து தவிர்ப்பு

வேடசந்தூரில் காற்றாலை ஏற்றி வந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியது- பெரும் விபத்து தவிர்ப்பு மகாராஷ்டிராவில் இருந்து ராட்சத காற்றாலையை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த லாரி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள அய்யர் மடம் தனியார் மில் அருகே வந்தபோது திடீரென பழுதானது. இதனால் டிரைவர் என்ன செய்வதென்று தெரியாமல் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து லாரியை ஓரமாக போக்குவரத்துக்கு […]