டாஸ்மாக் கடைகளை நீண்ட நேரம் திறப்பதா? கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு கொடுக்க வந்தவர் கோஷம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். கடலூர் மாவட்டம் கிள்ளையை சேர்ந்த மகேந்திரனும் மனு கொடுக்க வந்தார். அவர் […]
Month: May 2023
சேத்தியாத்தோப்பு அருகே சிறுவனை ஏமாற்றி 3 பவுன் நகை கொள்ளை : வாலிபருக்கு வலைவீச்சு
சேத்தியாத்தோப்பு அருகே சிறுவனை ஏமாற்றி 3 பவுன் நகை கொள்ளை : வாலிபருக்கு வலைவீச்சு கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 50). இவர் சம்பவத்தன்று தனது பேரன் திவாகரனை (13) வீட்டில் விட்டுவிட்டு வடலூருக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த வாலிபர், உங்கள் பாட்டி எனக்கு பணம் தர வேண்டும். பீரோ சாவியை கொடு என கேட்டுள்ளார். சாவியை வாங்கி பீரோவில் இருந்த 3 பவுன் […]
வேப்பூர் அருகே கீரம்பூரில் கோவில் உண்டியல் உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
வேப்பூர் அருகே கீரம்பூரில் கோவில் உண்டியல் உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை வேப்பூர் திருபாக்கம் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏலம் விடப்பட்டது. இதில் ரூ.20 ஆயிரம் வருவாயாக கோவிலுக்கு கிடைத்தது. இந்த பணத்தை ஊர் பொது மக்கள் கோவில் உண்டியலில் போட்டு வைத்தனர் இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கோவிலில் பூஜைகள் செய்து வீட்டு, […]
சேத்தியாத்தோப்பு அருகே ஓடும் பஸ்சில் 7 பவுன் நகை கொள்ளை
சேத்தியாத்தோப்பு அருகே ஓடும் பஸ்சில் 7 பவுன் நகை கொள்ளை கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதி சேர்ந்தவர் மாலிக் ஜான் தில்ஷாத் பேகம் (வயது 48) சம்பவத்தன்று புவனகிரி பங்களா பஸ் நிறுத்தத்திலிருந்து தனது மகள் வீட்டிற்கு வடலூர் செல்ல சிதம்பரத்திலிருந்து வந்த சேலம் பஸ்சில் ஏறி சென்றார். சேத்தியாத்தோப்பு அருகே பஸ் வந்த போது தனது கட்டைப் பையில் வைத்திருந்த 4 பவுன் ஆரநெக்லஸ், 3 பவுன் நெக்லஸ் என மொத்தம் 7 பவுன் நகையை […]
178 குரோஸ் பட்டாசு திரி பறிமுதல்; 4 பேர் கைது
178 குரோஸ் பட்டாசு திரி பறிமுதல்; 4 பேர் கைது சிவகாசி தாயில்பட்டி டி.ராமலிங்கபுரம் பகுதியில் அனுமதி இன்றி பட்டாசு திரி தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வெம்பக்கோட்டை போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது பாலமுருகன் (வயது 35) என்பவரது வீட்டில் 48 குரோஸ் பட்டாசு திரிகளும், உமாராஜ் (58) வீட்டில் 36 குரோஸ் பட்டாசு திரிகளும், வீரராஜ் (50) வீட்டில் 50 குரோஸ் பட்டாசு திரிகளும், செல்வராஜ் (61) வீட்டில் […]
சற்று முன் பெய்த மழைக்கு பழைய மரம் ஒன்று சாய்ந்து
மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் அருகே*சற்று முன் பெய்த மழைக்கு பழைய மரம் ஒன்று சாய்ந்து *மின்கம்பங்கள் மீது விழுந்துள்ளது இதனால்அசம்பாவிதம் எதுவும் நடக்காதவாறு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தீயனைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி துறை, காவல் துறையினர் இணைந்துபுயல் வேகத்தில் மரங்களை வெட்டிஅகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த வழியாக செல்லும்பாதையில் போக்குவரத்துதடைசெய்யப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதி முழுவதும்இருளில் மூழ்கியுள்ளது.
பாலக்கோடு அருகேதொழிலாளியை கத்தியால் வெட்டிய வாலிபர் மீது வழக்கு
பாலக்கோடு அருகேதொழிலாளியை கத்தியால் வெட்டிய வாலிபர் மீது வழக்கு பாலக்கோடு அருகே உள்ள கடைமடை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார், அப்போது அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (27) என்பவர் தனக்கு ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என கூறி செல்வம் சிகரெட் வாங்கி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]
11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் சேலம்சேலம் சரகத்தில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர்கள் சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.ரவிச்சந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டிக்கும், பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், சிங்காரப்பேட்டைக்கும், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் எஸ்.ரவி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு […]
+2 தேர்வில் தருமபுரி மாவட்டத்தில் 92.72 சதவீதம்
பேர் தேர்ச்சி
+2 தேர்வில் தருமபுரி மாவட்டத்தில் 92.72 சதவீதம்பேர் தேர்ச்சி தருமபுரி மாவட்டத்தில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது, தர்மபுரி மாவட்டத்தில் +2 தேர்வு முடிவுகள் தேர்வு வெளியீடு முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தகவல்.தர்மபுரி மாவட்டத்தில் எழுதியவர்கள்மாணவர்கள்: 9628மாணவிகள் : 9858மொத்தம்: 19486தேர்ச்சி பெற்றவர்கள்மாணவர்கள்: 8723 மாணவிகள்: 9345மொத்தம்: 18068தருமபுரி மாவட்டத்தில் 92.72 சதவீதம் பேர்தேர்ச்சி மாணவர்கள் 90.60 சதவீதமும்மாணவியர் 94.80 சதவீதமும் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
பாப்பாரப்பட்டி அருகே மருந்து விற்பனை பிரதிநிதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாப்பாரப்பட்டி அருகே மருந்து விற்பனை பிரதிநிதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 35). மருந்து விற்பனை பிரதிநிதி. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் கார்த்திகேயன் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக மனைவி சம்பூரணி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டுக்கு சென்று தனது அறையில் தூக்குப்போட்டு கொண்டார்.இதனை ஜன்னல் வழியாக பார்த்த மனைவி அதிர்ச்சி […]