திண்டுக்கல்லில் சட்டகல்லூரி மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த பாலமுருகன் மகள் யாஷினி (வயது 20). இவர் திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த மாணவி இன்று காலை பயணிகள் ரெயில்மூலம் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். தாமரைப்பாடி ரெயில்நிலையம் வந்ததும் ரெயிலை விட்டு இறங்கிய அவர் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
Month: May 2023
குடும்ப வறுமையால் விபரீதம் பெண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை
குடும்ப வறுமையால் விபரீதம் பெண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை ஒட்டன்சத்திரம் அருகே பழக்கனூத்து தாத்தா கவுண்டனூரை சேர்ந்தவர் கோபி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த ருக்மணிக்கு 3வதாகவும் பெண் குழந்தை பிறந்தது. கணவன்-மனைவி 2 பேரும் கூலி வேலை செய்வதால் குடும்ப வறுமை வாட்டியது. 3 பெண் குழந்தைகளை வளர்ப்பதில் சிரமம் என நினைத்தனர். எனவே தற்போது பிறந்த குழந்தையை விற்பனை […]
பழனியில் இன்று ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை
பழனியில் இன்று ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள என்.குரும்பபட்டியை சேர்ந்த கோபால் மகன் வடிவேல் (வயது27). இவர் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் மீது பழனி அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ஒருவரை வெட்டிய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த வடிவேல் இன்று காலை பழனி […]
இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி
இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்தவர் சுவேதா கார்த்திக். பட்டதாரியான இவர் படிப்புக்கேற்ற வேலை தேடி வந்துள்ளார். அதற்காக பல இணையதளங்களிலும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் மங்கம் மாள்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் சுவேதாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்ப்பதாகவும், தன்னால் வெளிநாட்டில் வேலை வாங்கி தரமுடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது போட்டோ அடையாள அட்டை […]
மதுரை சித்திரை திருவிழாவுக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து சாவு
மதுரை சித்திரை திருவிழாவுக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து சாவு மதுரை மேல வெளி வீதி ரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் முதியவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து மேலமதுரை கிராம உதவியாளர் பழனி கொடுத்த புகாரின்பேரில் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். விசாரணையில் இறந்த முதியவர் சிவகாசி முஸ்லிம் தெருவை சேர்ந்த பாஸ்கரன்(63) என்பதும், சித்திரை திருவிழா பார்ப்பதற்காக […]
பழனி ரவுடி கொலையில் 2 வாலிபர்கள் கைது
பழனி ரவுடி கொலையில் 2 வாலிபர்கள் கைது பழனி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த கோபால் மகன் வடிவேல் (வயது 27). கூலித் தொழிலாளி. இவர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. திருப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களாக பழனியில் தங்கி இருந்தார். நேற்று காலை அடிவாரம் பகுதியில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் வடிவேல் உயிரிழந்தார். இது குறித்து டவுன் போலீசார் வழக்கு […]
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பெண்ணிடம் செல்போன், பணம் பறிப்பு
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பெண்ணிடம் செல்போன், பணம் பறிப்பு வடமதுரை அருகே கோவககவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ரீட்டா (வயது35). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை கீழே தள்ளி விட்டனர். இதையடுத்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு […]
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர் மீது தாக்குதல்
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர் மீது தாக்குதல் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ரேடியோலஜி முதுநிலை இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர் நேற்று இரவு தியேட்டரில் படம் பார்த்து விட்டு கல்லூரி விடுதிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த இளநிலை மருத்துவம் 4-ம் ஆண்டு படித்து வரும் 10 மாணவர்கள் சேர்ந்து அவரை தாக்கினர். இதில் முதுநிலை மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் பேராசிரியை ஒருவருடன் தியேட்டருக்கு சென்று விட்டு வந்ததாக கூறப்படுகிறது. […]
திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கு – மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது
திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கு – மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம கும்பல் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி அதில் இருந்த ரூ.72 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கர்நாடகா, அரியானா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட […]
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மதுரை பழங்காநத்தம், நேரு நகரை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 65). இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவுக்கார பெண் குடும்பத்துடன் பழகி வந்தார். அவர் அடிக்கடி உறவினர் வீட்டுக்கு சென்று வருவார். இந்தநிலையில் சண்முக நாதன், உறவுப்பெண்ணின் 10 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் சிறுமியிடம் இது பற்றி வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் […]