செங்கல்பட்டுபிறந்து சில மணி நேரமே ஆன அனாதையாக வீசப்பட்ட குழந்தை மீட்பு- போலீஸ் விசாரணை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட அதியமான் தெருவில் நேற்று முன்தினம் மறைமலைநகர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தெருவில் உள்ள பூட்டப்பட்டிருந்த வீட்டின் சுற்றுச்சுவருக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனையடுத்து அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பணியாளர்கள் சென்று பார்த்த போது அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன […]
Month: May 2023
திண்டிவனம் அருகே சாராயம் விற்றதாக பெண்ணை கைது செய்ய வந்த போலீசார்: பொதுமக்கள் கடும் வாக்குவாதம்
திண்டிவனம் அருகே சாராயம் விற்றதாக பெண்ணை கைது செய்ய வந்த போலீசார்: பொதுமக்கள் கடும் வாக்குவாதம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமத்தில் ஜெயலலிதா என்ற பெண் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக சாராயம் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த பகுதியில் சாராயம், அந்நிய மதுபானங்கள் விற்கக் கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதனால் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஊருக்கு கட்டுப்பட்டு சாராயம் விற்க மாட்டேன் […]
மதுவிலக்கு போலீசார் தொடர் கண்காணிப்பு
மதுவிலக்கு போலீசார் தொடர் கண்காணிப்பு மதுரை மாவட்டம் சாப்டூர் வனப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்று தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாப்டூர் கும்பமலை வனப் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருமங்கலம் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இளவரசன் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்தப் பகுதியில் டிரம்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. போலீசார் […]
மதுரையில் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்தது
மதுரையில் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்தது மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்தது. .அரசு ஆஸ்பத்திரிக்கு எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, அரசு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளது. தென் மாவட்டத்தின் மிக முக்கிய மருத்துவமனையாக இது உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகன பயன்பாடு அதிகம் காணப்படுகிறது. இதுபோல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், ஊழியர்கள், பயிற்சி […]
மதுரையில் கஞ்சா, மது விற்பனை; 29 பேர் கைது
மதுரையில் கஞ்சா, மது விற்பனை; 29 பேர் கைது மதுரை பழங்காநத்தம் பகுதியில் சினிமா தியேட்டர் எதிரே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் 2-வது தெருவைச் சேரந்த காஜா மைதீன் (40) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா, ரூ.9,740 ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை […]
மதுரையில் வடமாநில பெண்ணை கடத்த முயற்சி
மதுரையில் வடமாநில பெண்ணை கடத்த முயற்சி மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் கடந்த 2 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்து வந்துள்ளார். அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரை நேற்று இரவு சிலர் ஆட்டோவில் கடத்தி செல்ல முயன்றனர். அப்போது அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் அவருக்கு உணவு, குடிநீர் கொடுத்து பழ மார்க்கெட் வணிக வளாகத்தில் பத்திரமாக தங்க வைத்தனர். […]
கடலூர் அருகே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற 2 வாலிபர்கள் கைது
கடலூர் அருகே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற 2 வாலிபர்கள் கைது கடலூர் அடுத்த புதுக்கடை பகுதியில் 2 வாலிபர்கள் கையில் கத்தி வைத்துக் கொண்டு அனைவரையும் மிரட்டிக்கொண்டு இருந்ததாக ரெட்டிச்சாவடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் 2 வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவரை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்கள் வைத்திருந்த கத்தியால் வெட்ட […]
தென்காசி அருகே சிறுவர்களுக்கு போதை மாத்திரை வழங்கிய வாலிபர் கைது
தென்காசி அருகே சிறுவர்களுக்கு போதை மாத்திரை வழங்கிய வாலிபர் கைது தென்காசியில் வாலிபன் பொத்தை பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் வாந்தி ஏற்பட்டு திடீர் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அங்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் அந்த 4 சிறுவர்களுக்கும் மர்மநபர் ஒருவர் போதை மாத்திரை வழங்கியதும், அதனை சிறுவர்கள் தெரியாமல் […]
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புலவனூர் பொன்மலை நகரை சேர்ந்தவர் ராமர். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா(வயது 28). இவர்கள் இருவரும் நேற்று இரவு கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக கீழமாதாபுரத்தை அடுத்த ஜெபமாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் […]
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வள்ளி செல்வம் (வயது 52). இவர்கள் இருவரும் கடந்த 16-ந்தேதி பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் அருகே நெல்லை- தென்காசி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சாலையின் குறுக்கே முயல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் முருகன் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது பின்னால் அமர்ந்திருந்த வள்ளிசெல்வம் நிலை […]