எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் அறிவுறுத்தலின் பேரில் ராஜபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தலைமையில் 10 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகள், மோட்டார் வாகனச் சட்டப்பிரிவுகள், அச்சட்டத்தினைப்; பின்பற்றுதல், […]
Month: May 2023
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி தற்கொலை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி தற்கொலை தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மலையராமபுரம் இசக்கி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 35). இவருக்கு திருமணமாகி சரஸ்வதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சக்கரவர்த்தி டீக்கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தனது தேவைக்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளார். மேலும் தனது மனைவி மூலம் மகளிர் சுய உதவி குழுக்களிலும் கடன்கள் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி […]
தென்காசிசங்கரன்கோவிலில் இளம் பெண் மாயம்
தென்காசிசங்கரன்கோவிலில் இளம் பெண் மாயம் சங்கரன்கோவில் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48). இவரது மகள் முத்துசெல்வி (25). இவர் டிப்ளமோ முடித்துவிட்டு சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு தனியார் இருசக்கர வாகன விற்பனை மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பரமசிவம் மற்றும் அவரது மனைவி வெளியூர் சென்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்த போது முத்துசெல்வியை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த […]
திரையரங்கில் பழங்குடியினருக்கு அனுமதி மறுப்பு- மீண்டும் சர்ச்சை
திரையரங்கில் பழங்குடியினருக்கு அனுமதி மறுப்பு- மீண்டும் சர்ச்சை சென்னை கல் மண்டபம் பகுதியில் உள்ள திரையரங்கிற்கு சென்ற பழங்குடியின மக்களுக்கு டிக்கெட் காலியானதாக கூறி, டிக்கெட் வழங்குபவர் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்களுக்கு டிக்கெட் இல்லையென கூறிவிட்டு, பின்னால் வந்தவர்களுக்கு டிக்கெட் வழங்கியதாகவும் பழங்குடியின மக்கள் கூறினர். பணம் கொடுத்து தானே டிக்கெட் கேட்கிறோம் என கூறிய அவர்கள், டிக்கெட்டை வைத்துகொண்டே இல்லை என கூறிய காரணம் என்ன? என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினர். சமீபத்தில் ரோகிணி […]
தீவிரவாத எதிர்ப்பு படை- தமிழக போலீசில் உருவாக்கம்
தீவிரவாத எதிர்ப்பு படை- தமிழக போலீசில் உருவாக்கம் கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் தீவிரவாத எதிர்ப்பு படை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தீவிரவாத எதிர்ப்பு படையை தமிழக போலீஸ் உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் தீவிரவாத எதிர்ப்பு படை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. உளவுப் […]
சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் பார்த்த ரசிகரின் மோட்டார் சைக்கிள் திருட்டு- 2 வாலிபர்கள் கைது
சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் பார்த்த ரசிகரின் மோட்டார் சைக்கிள் திருட்டு- 2 வாலிபர்கள் கைது மோட்டார் சைக்கிளை சந்தேகப்படும்படியான 2 பேர் தள்ளிச் சென்ற போது அங்கு சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர் சக்திவேல், அவர்களை பிடித்து விசாரித்தார்.அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி இருவரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.சென்னை சூளைமேடு பாரி தெரு அவ்வை நகரைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் (38). சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்க்க […]
சென்னை அண்ணனூர் ரெயில் நிலையத்தில் ரூ.4 லட்சம் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
சென்னை அண்ணனூர் ரெயில் நிலையத்தில் ரூ.4 லட்சம் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், கார்த்திக் மற்றும் போலீசார் அண்ணனூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 20 கிலோ கஞ்சாவுடன் நின்ற 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த கவிராஜ்(24), அஜித் குமார் (25) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கஞ்சா […]
சென்னை வளசரவாக்கம் சினிமா இயக்குனர்-தோழிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
சென்னை வளசரவாக்கம் சினிமா இயக்குனர்-தோழிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது வளசரவாக்கத்தை சேர்ந்தவர் ராம்குமார். சினிமா பட இயக்குனரான இவர் நடிப்பு பயிற்சி பள்ளி ஒன்றும் நடத்தி வருகிறார். இவருக்கும் கணவரை இழந்து மகளுடன் வசித்து வரும் மைதிலி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி பொன்மலைபட்டி பகுதியை சேர்ந்த ஜெயராம் பாண்டியன் என்பவர் மைதிலி மற்றும் ராம்குமார் ஆகிய இருவரையும் செல்போன் மூலம் […]
கடையில் லேப்-டாப்பை திருடி பையில் திணித்த இளம் பெண்
கடையில் லேப்-டாப்பை திருடி பையில் திணித்த இளம் பெண் கோவை காந்திபுரம் பகுதியில் ஏராளமான துணிக்கடைகள், நகைக்கடைகள், லேப்டாப் மற்றும் செல்போன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் இங்கு லேப்டாப் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வாலிபர் மற்றும் ஒரு இளம்பெண் வந்தனர். அங்கு பணியில் இருந்த விற்பனையாளரிடம் கம்ப்யூட்டருக்கு மவுஸ் வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த விற்பனையாளர் இளம் பெண்ணுடன் வந்த வாலிபருக்கு மவுஸ் காண்பித்துக் கொண்டிருந்தார். இதனை பயன்படுத்தி கொண்ட […]
கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – டி.ஜி.பி. சைலேந்திர பாபு
கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – டி.ஜி.பி. சைலேந்திர பாபு ராமநாதபுரம்,சரக அளவிலான காவல்துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம், தமிழகம் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, தமிழகத்தில் சரக அளவிலான காவல்துறை அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக காஞ்சிபுரம் மற்றும் வேலூர் சரகங்களில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை ராமநாதபுரம் […]