தர்மபுரி மாவட்டம் பெற்ற மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச்சேர்ந்த 12வயது சிறுமியை, அவரது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில், சிறுமியை பெற்ற தந்தையே பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால், தம்பியை கொலை செய்து விடுவதாகவும் இதனால் பயந்து போன சிறுமி, சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில், ஏற்பட்டது.சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து சிறுமியிடம் அவரது […]
Day: June 14, 2023
மதுரையில் பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
மதுரையில் பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அருளப்பன்(வயது53). இவர் கல்லூரி காம்பவுண்டு வளாகத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு அருளப்பன் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 8½ பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில்வர் பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர். இந்த நிலையில் வீடு […]
பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கு- நாகர்கோவிலைச் சேர்ந்த காசிக்கு ஆயுள் தண்டனை
பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கு- நாகர்கோவிலைச் சேர்ந்த காசிக்கு ஆயுள் தண்டனை கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி (27). இவர், பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்தப் பெண்களிடம் பணம் பறித்துள்ளார். இது தொடர்பான புகாரில் கடந்த 2020-ல் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்திலும் கைதானார். 120 பெண்களின்400 வீடியோக்கள் மற்றும் 1900 […]
பொன்விழா ஆண்டை முன்னிட்டு மகளிர் போலீசாரின் பாய்மரப்படகு பயணம்
பொன்விழா ஆண்டை முன்னிட்டு மகளிர் போலீசாரின் பாய்மரப்படகு பயணம் மகளிர் போலீஸ் துறையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னையிலிருந்து கோடியக்கரை வரை மகளிர் போலீசாரின் பாய்மர படகு பயணம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு போலீஸ் துறையில் புதிய வரலாறு படைக்கும் படகு பயணத்தை இந்த குழுவினர் மேற்கொண்டு உள்ளனர். இது மகளிர் போலீசாரால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாக உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் நீலாதேவி தலைமையில் 25 பேர் கொண்ட போலீசார் பாய்மர படகில் […]
போடி நீதிமன்றம் அருகே மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர்- டிரைவர் கைது
போடி நீதிமன்றம் அருகே மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர்- டிரைவர் கைது தேனி மாவட்டம் தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மனைவி மணிமாலா (35). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மணிமாலா தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு முறையீடு செய்திருந்தார். இதற்காக மணிமாலா கோர்ட்டில் ஆஜராகிவிட்டு மீண்டும் ஊருக்கு […]
மதுரை மேலூர் அருகே வழக்கை வாபஸ் வாங்காததால் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து
மதுரை மேலூர் அருகே வழக்கை வாபஸ் வாங்காததால் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாவினிபட்டியைச் சேர்ந்தவர் திருவாசகம் (42). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தர். 2 பேரும் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். தொழில் போட்டி காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக வழக்கு மேலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கை வாபஸ் பெறுமாறு திருவாசகத்தின் மனைவியிடம் பாலசுந்தர் மற்றும் சிலர் மிரட்டினர். […]
மாநில தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஷகில் அக்தர் நியமனம்
மாநில தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஷகில் அக்தர் நியமனம் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகள் அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் பணியாகும். அதிகாரமிக்க தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு ஆணையர் பொறுப்பிடங்கள் கடந்த நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதற்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் […]
சென்னை கிண்டி-சைதாப்பேட்டையில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
சென்னை கிண்டி-சைதாப்பேட்டையில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் கிண்டியில் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்படுவதையொட்டி இன்று முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கிங்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் அருகில் வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான பணி, பொது பணித்துறையினரால் […]
சிறுமி கற்பழிப்பு: சிறை வார்டன் போக்சோ வழக்கில் கைது
சிறுமி கற்பழிப்பு: சிறை வார்டன் போக்சோ வழக்கில் கைது தருமபுரி மாவட்டம் அரூர் சிக்கனூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி. அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி கூலிவேலைக்கு சென்று வருவதால் சிறுமி தனது பாட்டி வீட்டில் வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஊருக்கு திரும்பி வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு 4 மாதங்களாக வயிற்றில் […]
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- சென்னை வாலிபர் போக்சோவில் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- சென்னை வாலிபர் போக்சோவில் கைது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கும், சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் தங்களது அந்தரங்க தகவல்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் 2 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் தங்களுடைய புகைப்படங்களையும் ஒருவருக்கொருவர் […]