திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS) அவர்கள் உத்தரவின்பேரில் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் மேற்பார்வையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜானகிராமன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் MO JUNCTION பகுதியில் போக்குவரத்து காவலர் திரு.ரகு ( கா எண் 495) ஆகியோர் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட காவலரை மாநக காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) […]
Month: March 2020
மலைபாம்புக்கு முதுகெலும்பு சிகிச்சை அளித்து மறுவாழ்வு வழங்க உதவிய வீரவநல்லூர் ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்கள்.
மலைபாம்புக்கு முதுகெலும்பு சிகிச்சை அளித்து மறுவாழ்வு வழங்க உதவிய வீரவநல்லூர் ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்கள். திநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் வாகனத்தில் அடிபட்டு ஊர்ந்து செல்ல முடியாத நிலையில் இருந்த மலைபாம்பு நிலையை கண்ட வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் திரு. சாம்சன் அவர்கள் மலைபாம்பை அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனையில், மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு எலும்பியல் மருத்துவர் திரு. பிரான்சிஸ் ராய் அவர்களால் மலைப்பாம்புக்கு எலும்பு முறிவு சிகிச்சை அளித்து மலைப்பாம்புக்கு மறுவாழ்வு வழங்கினார். காவல் ஆய்வாளர் […]
தூத்துக்குடியில் கேட்பாரற்று கிடந்த இரு சக்கர வாகனங்களை மாவட்ட எஸ்பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்
தூத்துக்குடியில் கேட்பாரற்று கிடந்த இரு சக்கர வாகனங்களை மாவட்ட எஸ்பி உரியவர்களிடம் ஒப்படைத்தார். தூத்துக்குடியில் கேட்பாரற்று கிடந்த இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், இ.கா.ப தலைமையில் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கேட்பாரற்று சாலையில் நின்ற வாகனங்கள் என சுமார் 65 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் அதில் உள்ள எஞ்சின் எண் ஆகியவற்றை வைத்தும், இணையதளம் மூலமாகவும் விசாரணை செய்து வாகன உரிமையாளர்களை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது, இதையடுத்து […]
நன்னடத்தை விதியை மீறிய இரண்டு நபர்கள் சிறையிலடைப்பு
நன்னடத்தை விதியை மீறிய இரண்டு நபர்கள் சிறையிலடைப்பு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் சண்முக பிரபு ஆகிய இருவரும் வழக்கு ஒன்றில் பிடிபட்டு அக்டோபர் 14.10.2019 அன்று தேவகோட்டை ஆர்டிஓ கோர்ட்டில் ஆஜர் படுத்தப் பட்டது. விசாரணை நடத்திய ஆர்டிஓ திரு.சங்கரநாராயணன் இருவரின் உறுதிமொழி சான்றின் படி ஒரு வருடம் நன்னடத்தை வழங்கி உத்தரவிட்டார். இந்த நன்னடத்தை விதியை மீறி இருவரும் கடந்த 01.01.2020 அன்று காரைக்குடி செக்காலை வாட்டர் […]
அண்ணாசாலையில் வியாபாரி கடத்தல்: காரை மடக்கிய போலீஸாருடன் மோதலில் ஈடுபட்ட 5 பேர் கைது
அண்ணா சாலையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் வியாபாரியைக் காரில் கடத்திச் சென்று தாக்கிய கும்பலை போலீஸார் சென்று மடக்கி விசாரித்தனர். அப்போது அந்த கும்பல் ஆய்வாளரைத் தாக்கியுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். ராயப்பேட்டை, செல்லப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் பைசுதீன் (48). இவர் ஆயிரம் விளக்கில் சொந்தமாக ஹெல்மெட் விற்கும் கடை வைத்துள்ளார். இவர் மதுரையைச் சேர்ந்த ராஜா உசேன் (48) என்பவரிடம் 6 மாதம் முன் ரூ.10 லட்சம் கடன் […]
தீயணைப்பு அருங்காட்சியகத்தை துவக்கிவைத்து குழந்தைகளுடன் கண்டு களித்த காவல்துறை இயக்குநர்.
தீயணைப்பு அருங்காட்சியகத்தை துவக்கிவைத்து குழந்தைகளுடன் கண்டு களித்த காவல்துறை இயக்குநர். தமிழகத்தில் முதன்முறையாக குழந்தைகளுக்கென தீயணைப்பு அருங்காட்சியகம் கோயம்பத்தூர் இணை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பழங்காலத்தில் பயன்படுத்திய தீயணைப்பு கருவிகள், உபகரணங்கள், வீரர்களின் அறைகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்திய ஆடைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் கலந்துகொண்டு அருங்காட்சியகத்தை திறந்து வைத்து குழந்தைகளுடன் கண்டு களித்தார்கள். மேலும் அருங்காட்சியகத்தை காலை 10 மணி முதல் மாலை […]
திருடப்பட்ட 22 சிலைகள் மீட்டு¸ 4 பேரை கைது செய்த காவல்துறையினர்
திருடப்பட்ட 22 சிலைகள் மீட்டு¸ 4 பேரை கைது செய்த காவல்துறையினர் தஞ்சாவூர் மாவட்டம்¸ கரந்தையில் உள்ள ஆதிஸ்வர சுவாமி ஜெயின் கோவிலில் இருந்து 1 ஐம்பொன் சிலை உள்பட 22 சிலைகள் திருடப்பட்டதாக வந்த புகாரின் பேரில்¸ உதவி ஆய்வாளர் திரு. சுகுமாரன் அவர்களின் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு¸ குற்றவாளிகளை தேடிவந்த நிலையில்¸ 07.03.2020ம் தேதியன்று சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து¸ அவர்களிடமிருந்து சிலைகள் கைப்பற்றப்பட்டது. சிறப்பாக பணியாற்றி சிலைகளை […]
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மத்திய அரசு விருது காத்திருப்பு…!!
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மத்திய அரசு விருது காத்திருப்பு…!! இ-வாரண்ட், இ-சம்மனை இ-பீட் உடன் இணைத்து குற்றங்களைத் தடுக்க அவர் புகுத்திய நவீன முறை தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்தது. இதையடுத்து அவர் களுக்குக்கு மார்ச் 12-ம் தேதி புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன் அவர்களை சிவகங்கை போலீஸார் பாராட்டினர். குற்றங்களைத் தடுக்க போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களைக் […]
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது*
*. *பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப. அவர்களின் தலைமையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் அலுவலக பணியாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு தங்களுக்குள் மகளிர் தின வாழ்த்துகளை பூக்களை கொடுத்து பகிர்ந்து கொண்டனர்.*
கள்ள நோட்டை அச்சடித்த இருவர் கைது..!!
கள்ள நோட்டை அச்சடித்த இருவர் கைது..!! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூர் பகுதியில் வீட்டில் சட்டவிரோதமாக 500 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட வேலூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், அய்யனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவரை மகாராஷ்டிர இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு ராவ் தலைமையிலான போலீசார் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். இவர்களிடம் இருந்து 7.50 ரூபாய் கள்ள நோட்டு கைபற்றியதாக முதல் கட்ட தகவல்.