புதுச்சேரியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கல்வி அமைச்சரின் செல்போனைப் பறித்துச் சென்ற வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரி கல்வி அமைச்சராக உள்ள கமலக்கண்ணன், காரைக்காலைச் சேர்ந்தவர். இவர் புதுச்சேரி வரும்போது தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இல்லத்தில் தங்குவது வழக்கம். அமைச்சர் கமலக்கண்ணன் கடந்த 2-ம் தேதி இரவு கடற்கரை சாலையில் செல்போனில் பேசியபடி நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் அமைச்சரின் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான […]
Month: March 2020
விருதுநகரில் விபத்தில் பலியான காவலர் குடும்பத்திற்கு ரூ.2.50 லட்சம் நிதியுதவி: சக காவலர்கள் வழங்கினர்
விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் ரூ.2.50 லட்சம் நிதியுதவி அளித்தனர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எம்.சுக்குலாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்பாண்டி (32). விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 10-ம் தேதி விடுப்பிலிருந்த காவலர் கார்த்திக்பாண்டியும் அவரது நண்பர் ஜெயபாண்டி (34) என்பவரும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை நோக்கி பைக்கில் சென்றபோது எதிரே வந்த பைக் மோதி […]
மாவட்ட அளவில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் முதல் பரிசு பெற்ற ராமநாதபுரம் போலீசார்
மாவட்ட அளவில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் முதல் பரிசு பெற்ற ராமநாதபுரம் போலீசார். சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் 10.02.2020 முதல் 29.02.2020 வரை நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை காவலர்கள் திரு.விக்னேஸ்வரன் PC 711, திரு.முத்தமிழன் PC 591, திரு.கார்த்திக் PC 574, திரு.ராஜபாண்டி PC 722, திரு.கபில்தேவ் PC 696 ஆகியோர் கலந்து கொண்டனர். 12 கடலோர காவல் மாவட்டங்கள் கலந்துகொண்ட […]
விசாரணை கைதி தப்பியோட்டம் 3 காவலர்கள் பனியிடை நீக்கம்
விசாரணை கைதி தப்பியோட்டம் 3 காவலர்கள் பனியிடை நீக்கம்..! நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி வெங்கடேசன் என்பவர் ஹோட்டலில் சாப்பிடும் போது காஞ்சிபுரம் ஆயுதப்படை காவலர் ராஜா என்பவரை ஏமாற்றித் தப்பிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஆயுதப்படையைச் சேர்ந்த நான்கு காவலர்கள் ராஜா, புஷ்பராணி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பரந்தாமன் ஆகியோரையும் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி தேன்மொழி பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
_*வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
_*வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது*_ _திருப்பூர் மாநகரில் தனியாக செல்லும் நபரிடம் மர்ம ஆசாமிகள் மிரட்டி செல்போன்களை பறித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதையடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் *உயர்திரு.சஞ்சய்குமார் (இ கா ப)* அவர்களின் உத்தரவின் பெயரில் மாநகர துணை ஆணையர் *உயர்திரு.வெ.பத்ரிநாராயணன் (இ கா ப)* அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநகர வடக்கு உதவி ஆணையர் திரு.வெற்றிவேந்தன் அவர்களின் மேற்பார்வையில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் […]
போலி பீடி தயாரித்தவர் கைது
போலி பீடி தயாரித்தவர் கைது திருப்பூர் அனுப்பர்பாளையம் சுற்றுவட்டார கடைகளுக்கு தங்கள் நிறுவன பெயர்கொண்ட பீடிகளை ஒரு சிலர் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக கோவை நூர்செட் பீடி மேலாளர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் திரு.ராஜன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.விசாரணையின் போது ஒரு சில கடைகளில் போலியான நூர்செட் பிடி இருப்பது தெரியவந்தது.பின்னர் அந்த கடைகளுக்கு சப்ளை செய்யும் நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாவட்டம் […]
டிக் டாக்கில் ஆபாச விடியோ வாலிபர் கைது..!!
டிக் டாக்கில் ஆபாச விடியோ வாலிபர் கைது..!! தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அருணாசலபுரம் கூலிபத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கண்ணன் (19). தனியார் கல்லூரி மாணவரான இவர், சமீபகாலமாக டிக் டாக்கில் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி வந்தார். இந்நிலையில் அவர், டிக் டாக்கில் ஆபாசமாக பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சேர்ந்தமரம் எஸ்ஐ தினேஷ்பாபு தலைமையிலான போலீசார், இன்று கண்ணனை கைது செய்தனர்.
குதிரை ஏற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு காவல் துறை சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்
குதிரை ஏற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு காவல் துறை சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று 2.3.2020. தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வீரர்கள் சந்தித்து அரியானா மாநிலத்தில் நடைபெற்ற 38 ஆவது அகில இந்திய அளவிலான குதிரை ஏற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு காவல் துறை சார்பாக கலந்து கொண்டு வென்ற ஒரு சுழல் கோப்பை […]
துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை.!!
துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை.!! சிவகங்கை ஆயுதப்படை காவலர் திரு.யோகேஷ்வரன் என்பவா் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கி காப்பு பணியில் கழிவறைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வாட்டர் ஹீட்டரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் காவலர் பலி..!!
வாட்டர் ஹீட்டரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் காவலர் பலி..!! மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தஞ்சை ஆயுதப்படை 2018 பேஜ் காவலர் காளிமுத்து ( எ) தினேஷ் இன்று காலை வெந்நீர் வைத்தபோது வாட்டர் ஹீட்டரிலிருந்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.