துப்பாக்கி சுடுதலில் முதல் பரிசு வென்ற திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்! தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, திருச்சி மத்திய மண்டல காவல்துறை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1 ம் அணி மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10 ம் அணிகளுக்கு உட்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முதல், காவல்துறை தலைவர் வரையிலான அதிகாரிகளுக்கான Pistol 1 Revolver மற்றும் INSAS துப்பாக்கி சுடுதல் போட்டிகள் அக்.6 அன்று திருச்சியில் நடைபெற்றன . இந்தத் […]
Month: October 2022
பெண் மீது சரமாரி தாக்குதல்
பெண் மீது சரமாரி தாக்குதல் மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி காளியம்மாள் (வயது 55). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது கடைக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பணம் தராமல் சிகரெட் கேட்டுள்ளனர். காளியம்மாள் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் உருட்டுக்கட்டையால் காளியம்மாளை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது மகனின் மோட்டார் சைக்கிளையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியது. இதுகுறித்து […]
பெற்ற மகளை கொன்று வாளியில் அடைத்த பெயிண்டர் கைது
பெற்ற மகளை கொன்று வாளியில் அடைத்த பெயிண்டர் கைது மதுரை ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது42). இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களது மகள் தன்ஷிகா (8). காளிமுத்து டெய்லராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி பிரியதர்ஷினி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சிறுமி தன்ஷிகா 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காளிமுத்து சிவகங்கையில் உள்ள சகோதரி வீட்டிற்கு […]
மதுரை பென்மேனி பகுதியை சேர்ந்த வாலிபர் தற்கொலை எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை
மதுரை பென்மேனி பகுதியை சேர்ந்த வாலிபர் தற்கொலை எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை மதுரை பொன்மேனி பகவத்சிங் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 37. பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்த இவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்துக்குமார் மாடி அறைக்கு சென்று பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை சோழவந்தான் பகுதியில் கஞ்சா வைத்திருந்த கூட்டுறவு சங்கத்தலைவர் கைது
மதுரை சோழவந்தான் பகுதியில் கஞ்சா வைத்திருந்த கூட்டுறவு சங்கத்தலைவர் கைது மதுரை சோழவந்தான் அருகே கஞ்சா வைத்திருந்த கூட்டுறவு சங்க துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார் மதுரை சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவராக இருப்பவர் செல்வகுமார் வயது 38/22, சோழவந்தான் போலீசார் ரோந்து சென்ற போது கருப்பட்டி கிராமத்தில் அரசு பள்ளி அருகே 800 கிராம் கஞ்சாவுடன் செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சாவை கைபற்றிய போலீசார் […]
ஓய்வு பெற்ற பெண் நீதிபதி, உள்ளிட்டோரிடம் போலி உயில், பத்திரப்பதிவு மூலம் ரூ.23 கோடி சொத்துக்கள் அபகரிப்பு: தென்மண்டல ஐஜியிடம் புகார்
ஓய்வு பெற்ற பெண் நீதிபதி, உள்ளிட்டோரிடம் போலி உயில், பத்திரப்பதிவு மூலம் ரூ.23 கோடி சொத்துக்கள் அபகரிப்பு: தென்மண்டல ஐஜியிடம் புகார் மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் நேற்று அளித்த புகார் மனு: திருமங்கலம் அருகே ஆலம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரியின் ரூ.5 கோடி மதிப்புள்ள அட்டை கம்பெனி, சென்னை பட்டிமேட்டை சேர்ந்த தீப ஆனந்திக்கு சொந்தமான எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் உள்ள ரூ.15 கோடி மதிப்பிலான […]
காரில் வைத்திருந்த 87 பவுன் நகை திருட்டு
காரில் வைத்திருந்த 87 பவுன் நகை திருட்டு தேனி நகர் ஜெகநாதன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 54. இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையின் மேலாளர் சயூபு, டிரைவர் ராஜகோபால் ஆகியோர் நகையுடன் காரில் மதுரை வந்தனர். பின்னர் அவர்கள் அரசரடி பகுதியில் காரை நிறுத்திவிட்டு அங்குள்ள ஓட்டலில் சாப்பிட சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது காரில் இருந்த 87 பவுன் நகையை காணவில்லை. இது குறித்து அவர்கள் கடை […]
விடாமல் தொல்லை கொடுத்த ஆன்லைன் லோன் ஆப்: ஐ.டி ஊழியர் எடுத்த விபரீத முடிவு
விடாமல் தொல்லை கொடுத்த ஆன்லைன் லோன் ஆப்: ஐ.டி ஊழியர் எடுத்த விபரீத முடிவு ஆன்லைன் லோன் ஆப் மோசடியில் சிக்கி ஐ.டி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. வாங்கிய கடனை செலுத்திய பின்னரும் கடனை கட்ட சொல்லி மிரட்டல் விடுத்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளார். சென்னை கே.கே நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்த டெய்லர் சீனிவாசராஜா(53). இவருக்கு நரேந்திரன்(23) மற்றும் கீர்த்தனா என இரு பிள்ளைகள் உள்ளனர். நரேந்திரன் பிகாம் […]
தமிழகத்தில் காந்தி ஜெயந்தி அன்று, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 1,200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் காந்தி ஜெயந்தி அன்று, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 1,200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாநிலம் முழுதும் அனைத்து ‘டாஸ்மாக்’ மது கடைகளையும் மூட, தமிழக அரசு உத்தரவிட்டது.ஆனாலும், அரசின் தடையை மீறி, மாநிலம் முழுதும் ஆங்காங்கே, சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பனை நடந்ததை போலீசார் கண்டறிந்து, நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, அதிகபட்சமாக கரூரில் 72 பேர் கைது செய்யப்பட்டனர்; 523 மது பாட்டில்கள் பறிமுதல் […]
ரேஷன் கடைக்கு, ஊழியர்கள் நியமன தேர்வு வெளிப்படையாக நடக்க உள்ளதால், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’ என, கூட்டுறவு துறை அறிவுறுத்திஉள்ளது.
ரேஷன் கடைக்கு, ஊழியர்கள் நியமன தேர்வு வெளிப்படையாக நடக்க உள்ளதால், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’ என, கூட்டுறவு துறை அறிவுறுத்திஉள்ளது. கூட்டுறவு துறை நடத்தும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள, 4,300 விற்பனையாளர், எடையாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்காக, கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக, அடுத்த வாரத்தில் இருந்து அறிவிப்பாணைகள் வெளியிடப்பட உள்ளன. வரும் டிசம்பருக்குள் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரியில் பணி ஆணை வழங்கப்பட […]