திட்டக்குடியில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாகரூ. 10 லட்சம் மோசடி செய்த நபர் கைது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விஜய ராஜ் (வயது 30) என்ஜினீயரிங் பட்டதாரி. கடந்த 2021 -ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் கடலூர் மேற்கு மாவட்ட தொழில் பிரிவு தலைவர் பெரியசாமி, இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்த பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பழனிவேல் ஆகியோர் […]
Day: May 2, 2023
பண்ருட்டியில் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் கடத்தல்
பண்ருட்டியில் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் கடத்தல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஓறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மன்னாதன் இவரதுமகள் அம்மு (22) இவர் பண்ருட்டி பஸ் நிலையத்தின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை செய்த வருகிறார். இவர்,நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடுதிரும்பவில்லை பல இடங்களில்தேடி எங்கும் கிடைக்காதால்.இவரது தந்தை மன்னாதன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் புகாரில் பண்ருட்டி அடுத்த கனிசபாக்கத்தை சேர்ந்த பஸ் […]
மனைவியை கத்தியால் குத்தியவர் கைது
மனைவியை கத்தியால் குத்தியவர் கைது வில்லாபுரம் வேலு தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 25). இவரை சந்திராதேவி (27) என்பவர், 2-வதாக திருமணம் செய்துள்ளார். துரைப்பாண்டிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்று துரைப்பாண்டி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த துரைப்பாண்டி சந்திராதேவியை கத்தியால் குத்தி விட்டு தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர். மதுரை […]
வியாபாரியை சரமாரியாக அடித்து உதைத்த 5 வாலிபர்கள் கைது
வியாபாரியை சரமாரியாக அடித்து உதைத்த 5 வாலிபர்கள் கைது மதுரை அனுப்பானடி பஸ் நிலையம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை நடுரோட்டில் சரமாரி தாக்கி வேட்டியை உருவி, விரட்டு அடிப்பது போன்ற காட்சி கடந்த சில நாட்களாக சமூக வலை தளத்தில் வேகமாக பரவியது. நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்துக்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து போலீ சாரின் கவனத்துக்கு […]
300 மதுபாட்டில்கள் பறிமுதல்-2 பேர் கைது
300 மதுபாட்டில்கள் பறிமுதல்-2 பேர் கைது திருமங்கலம் அருகே சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாகைக்குளம் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அறிவழகன் என்பவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 135 மது பாட்டில்கள் இருந்தன. அதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த சின்னசாமி என்பவரிடம் 200 மது பாட்டில்கள் இருந்தன. மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி வாடிப்பட்டி வட்டார வைகை இருசக்கர வாகன மற்றும் மெக்கானிக்கல் பொதுநல சங்கம் சார்பில் மே தின விழா, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாநில தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சக்திவேல், பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் ஜாபர் சாதிக் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ரமேஷ்குமார் அறிக்கை வாசித்தார். வல்லப கணபதி கோவிலில் இருந்து ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பழுது பார்ப்பவர்கள் […]
கோவில் திருவிழாவில் திருடிய 2 பேர் சிக்கினர்
கோவில் திருவிழாவில் திருடிய 2 பேர் சிக்கினர் திருமங்கலம் அருகே அத்திப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இங்கு சாமி கும்பிடுவதற்காக அழகன்ராஜ் (வயது 63) என்பவர் நடந்த வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார். சுதாரிக் கொண்ட அழகன்ராஜ் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து சாப்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த […]
மதுரைமீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மதுரைமீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் ஆயிரக்கணக்கான பெண்கள் புதுத்தாலி மாற்றி கொண்டனர்.சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் மாசிவீதிகளில் இன்று இரவு வீதி உலா வருவார்கள்.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக நடைபெறுவது சித்திரை திருவிழா. இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியது முதல் தினமும் காலை மற்றும் […]
திருச்சியில் 800 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சியில் 800 கிலோ குட்கா பறிமுதல் திருச்சியில் 800 கிலோ குட்கா பறிமுதல்திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை பகுதியில் உள்ள தெப்பக்குளம் அருகே குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ரமேஷ்பாபு அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பெயரில் அப்பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு வீட்டை சோதனையிட்டனர். அப்போது பூட்டி கிடந்தது பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தமிழக அரசால் […]
சங்கரன்கோவில் அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை தாக்கிய மகன் கைது
சங்கரன்கோவில் அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை தாக்கிய மகன் கைது சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி குருவம்மாள். இவர்களது மகன் முத்துசாமி (வயது38.) திருமணமாகாதவர். இவருடன் பிறந்த சகோதர- சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் தனக்கு திருமணம் முடித்து வைக்க சொல்லி பெற்றோ ரிடம் வற்புறுத்திய உள்ளார். சம்பவத்தன்று அவர் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் அங்கே […]