தென்காசி மாவட்டத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடை செய்ய வேண்டும், திரையிடக்கூடாது என்று கூறி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் அச்சடிக்கப்பட்டுள்ள அந்த போஸ்டர்கள் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை புளியங்குடி, சங்கரன்கோவில், பொட்டல்புதூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக ஒட்டப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த படத்தை திரையிட கடும் […]
Day: May 6, 2023
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக தாய் உள்பட 3 பேர் கைது
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக தாய் உள்பட 3 பேர் கைது தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது சாவில் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மாணவியின் தாயாரை அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். […]
சுரண்டையில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி
சுரண்டையில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது மகன் மகேந்திரன்(வயது 17) பார்வை திறன் குறைபாடு உடையவர். அவர் 8-ம் வகுப்பு முடித்துவிட்டு கிளி, புறா உள்ளிட்டவற்றை வளர்த்து வந்துள்ளார். மேலும் கிணறு, மரங்களில் இருக்கும் புறா உள்ளிட்டவற்றை எடுத்து வீட்டில் வைத்து வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டை விட்டு […]
வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் நினைவிடத்தில் மரியாதை
வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் நினைவிடத்தில் மரியாதை கடந்த 2020-ம் ஆண்டு மே 4-ந்தேதி ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் சந்திரசேகரும் ஒருவர். இந்நிலையில் வீர மரணமடைந்த சந்திரசேகரின் 3-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள […]
தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு கல்லூரி படிப்பை முடித்து அல்லது இறுதி ஆண்டு பயிலும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களுக்கு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வாயிலாக நடைபெற இருக்கிறது. இப்பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு கீழ்காணும் லிங்க் மூலம் https://bit.ly/3ND1U95 தங்கள் சுய விவரங்களை உள்ளீடு […]
பண்ருட்டி – கடலூர் சாலையை விபத்து இல்லாத சாலையாக மாற்ற போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
பண்ருட்டி – கடலூர் சாலையை விபத்து இல்லாத சாலையாக மாற்ற போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பழைய திருட்டு, கொள்ளை, கொலை வழக்குகளை தூசிதட்டி எடுத்து துப்புத்துலக்கி கொலை, கொள்ளைகாரர்களை அதிரடியாக கைது செய்து பொதுமக்களின் பாராட்டையும், நன்மதிப்பினையும் பெற்றுள்ளார். இவரது பல்வேறு அதிரடி களுக்கு நடவடிக்கைகளில் ஒன்றாக, சாலைகளில் தினமும் நடைபெற்று வரும் விபத்துகளை குறைப்பதிலும் அதிக ஆர்வம் […]
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆட்டோவில் சென்றவர் தவறி விழுந்து சாவு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆட்டோவில் சென்றவர் தவறி விழுந்து சாவு கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் தினேஷ் (வயது 26) என்பவர் வேப்பூர் வந்து விட்டு மீண்டும் பெரியநெசலூர் செல்ல சேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பயணிகளை ஏற்றி கொண்டு வேப்பூர் சேலம் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது நயகரா பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தினேஷ் ஆட்டோவிலிருந்து தவறி சாலையில் விழுந்து […]
திட்டக்குடி வெள்ளாற்றின் தடுப்பணை நீரை திறந்து விடும் மர்ம நபர்கள்: விவசாயிகள் வேதனை
திட்டக்குடி வெள்ளாற்றின் தடுப்பணை நீரை திறந்து விடும் மர்ம நபர்கள்: விவசாயிகள் வேதனை வெள்ளாற்றில் உள்ள தடுப்பணையில் தேக்கி வைத்திருந்த பாசன நீரை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திறந்து விட்டதால் வீணாக ஆற்றில் வெளியேறும் அவல நிலை உருவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கூடலூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டத்தை இணை க்கும் தடுப்பணை வெள்ளாற்றில் ரூ.16 கோடியில் கட்ட ப்பட்டது. இந்த தடுப்பணை யால் 4.14 மில்லியன் கன அடி நீரைச் […]
குடும்ப தகராறில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை
குடும்ப தகராறில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பண்ருட்டி அருகே குடுமியான் குப்பத்தை சேர்ந்தவர் குமார் இவரது மனைவி உமா (வயது 45), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குமார் சரிவர வேலைக்கு செல்லாததால் கணவன், மனைவி இருவருக்குள் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் மன உலைச்சலில் இருந்த உமா நேற்று அதே பகுதியில் உள்ள சொந்த நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை […]
வேப்பூர் அருகே வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
வேப்பூர் அருகே வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் இளவரசன் (வயது 25). இவர் பொயனப்பாடி கிராமம் செல்லும் சாலையில் சொந்தமாக வாட்டர் சர்வீஸ் நிலையம் வைத்துள்ளார். இங்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் பொழுது இளவரசன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் இளவரசன் மயங்கி கீழே விழுந்தார். இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். […]