சித்திரை திருவிழா பார்க்க வந்த 2 மூதாட்டிகளிடம் நகை பறிப்பு அவனியாபுரம், முத்துக்குமார் தெருவை சேர்ந்தவர் கனகவள்ளி (65). இவர் சித்திரை திருவிழா எதிர்சேவை பார்ப்பதற்காக ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு கும்பல் கனகவள்ளி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பரவை பவர் ஹவுஸ் சாலை ஆர்.ஜே.டி. நகரை சேர்ந்தவர் […]
Day: May 7, 2023
அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்
அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் மதுரை அய்யப்பநாயக் கன்பட்டி ஊரணி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 43), அரசு பஸ் டிரைவர். மகாலிங்கம் சித்திரை திருவிழாவை யொட்டி பணியில் இருந்தார். அப்போது திண்டுக்கல் ரோடு பஸ் நிறுத்தம் அருகில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சை வழிமறித்தனர். இதனை மகாலிங்கம் கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக […]
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி- வடமாநில வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி- வடமாநில வாலிபர்கள் 2 பேர் சிக்கினர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த ஜோடுகுளி பஸ் நிறுத்தம் அருகே வசித்து வருபவர் செல்வராஜ். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவது வீட்டின் ஒரு பகுதியில், 2 தனியார் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டு உரிமையாளரான செல்வராஜூக்கு தீ கருகிய வாடை வந்துள்ளது. இதையடுத்து வெளியே வந்து பார்த்தபோது, 2 […]
ராஜபாளையம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற தொழிலாளி
ராஜபாளையம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற தொழிலாளி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற அன்பழகன்(வயது31). இவர் மீது வனவிலங்குகளை வேட்டையாடுதல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து கடந்த மாதம் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அன்பழகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கனகராஜ் என்பவரது மனைவிக்கும் சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக […]
ராஜபாளையம் அருகே ஆட்டோ டிரைவரை கொல்ல முயற்சி
ராஜபாளையம் அருகே ஆட்டோ டிரைவரை கொல்ல முயற்சி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மங்காபுரத்தை சேர்ந்தவர் இசக்கிராஜா(வயது26), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பானுபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பானுபிரியா, குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து இசக்கிராஜா, விருதுநகரை சேர்ந்த பாண்டியம்மாள்(20) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் புதுப்பாளையம் மாரி யம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதனை […]
தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது- மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவிப்பு
தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது- மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவிப்பு சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது. தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் நாளை முதல் திரையிடப்படாது என அறிவிப்பு. கேரள மாநில பெண்களை மையமாக வைத்து தி கேரளா ஸ்டோரி திரைப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்று கதை களம் […]
கள்ளழகர் சித்திரை திருவிழாவுக்கு வந்தபோது மோதல்- மதுரை வாலிபர் கொலையில் 4 பேர் சிக்கினர்
கள்ளழகர் சித்திரை திருவிழாவுக்கு வந்தபோது மோதல்- மதுரை வாலிபர் கொலையில் 4 பேர் சிக்கினர் மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மகன் சூர்யபிரகாஷ் (வயது23). இவர் பி.ஏ. படித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் வேலை தேடிக்கொண்டிருந்தார். இந்தநிலையில் மதுரையில் நடந்த சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கடந்த 4-ந்தேதி இரவு சூர்ய பிரகாஷ் தனது நண்பர்களுடன் சென்றார். அவர்கள் மதிச்சியம் அம்பலத்தார் தெருவில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த 10 […]
மதுரையில் 2 வாலிபர்கள் பலி
மதுரையில் 2 வாலிபர்கள் பலி பொதும்பு வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் மகன் காளிதாஸ் (24). இவர் இவர் பைக்கில் கூடல்நகர் மெயின்ரோட்டில் சென்ற போது பின்னால் வந்த அரசு டவுன் பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின்பேரில் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பஸ் டிரைவரான அலங்காநல்லூர் முருகன் (48) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரை […]
மதுரை சித்திரை திருவிழா-கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 பேரிடம் நகை பறிப்பு
மதுரை சித்திரை திருவிழா-கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 பேரிடம் நகை பறிப்பு மதுரையில் நேற்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதனை காண்பதற்காக 4-ந்தேதி இரவு முதலே பக்தர்கள் வைகையாற்று பகுதியில் குவிந்தனர். லட்சக்கணக் கான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடியதால் அதனை பயன்படுத்தி சில இடங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:- தேனி மாவட்டம் அல்லி நகரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது60). […]
மெக்கானிக் வீட்டில் நகை-பணம் திருட்டு
மெக்கானிக் வீட்டில் நகை-பணம் திருட்டு மதுரை மாவட்டம் சமயநல்லூர் வி.எம்.டி.நகர் வைகை ரோட்டில் வசித்து வருபவர் கண்ணன் (வயது47). கார் பழுதுபார்க்கும் மெக்கானிக் செட் வைத்துள்ளார். நேற்று மாலை இவர் வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். பின்னர் இரவில் வீடு திரும்பிய போது அவரது வீட்டின் கதவு பூட்டும், மரக்கதவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த லாக்கரில் 4¼பவுன் நகை மற்றும் […]