மாணவர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த 17 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் மாணவர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த 17 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரையில் போலீஸ் நிலையம் அருகில் என்.எம்.ஆர். பாலம் கீழ்ப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டது. மதுரைமதுரை தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். போலீஸ் நிலையம் அருகில் உள்ள என்.எம்.ஆர். பாலம் கீழ்ப்பகுதியில் உள்ள பிள்ளையார்பாளையம் ரோட்டில் சென்றபோது அந்தப்பகுதியில் புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. […]
Day: September 6, 2023
மதுரையில் நான்கு மாசி வீதிகளில் இருசக்கர வாகனத்தை நிறுத்துதல் நெறிப்படுத்தும் வகையில் மஞ்சள் கோடு வரையும் பணியை காவல் ஆணையர் இன்று மாலை தொடக்கி வைத்தார்.
மதுரையில் நான்கு மாசி வீதிகளில் இருசக்கர வாகனத்தை நிறுத்துதல் நெறிப்படுத்தும் வகையில் மஞ்சள் கோடு வரையும் பணியை காவல் ஆணையர் இன்று மாலை தொடக்கி வைத்தார். மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மாநகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு வாகன நிறுத்தங்களை சீர்செய்ய நகரின் மையப் பகுதியான நான்கு மாசி வீதிகள் (சுமார் 4.6 கி.மீ சுற்றளவு), நான்கு ஆவணி மூல வீதிகள் (சுமார் 2.5 கி.மீ […]
மதுரையில் முறையான நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் பறிமுதல்
மதுரையில் முறையான நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் பறிமுதல் முறையான நம்பர் பிளேட் இல்லாத 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ட பொம்மன் சிலை முன்பு உரிமையா ளரிடம் வாகனத்தை ஒப்படைத்தனர். மதுரைதமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்ப டுகிறதா என்பதை போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள், விதி மீறும் வாகனங்களை […]
பயணிகளிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபருக்கு தர்ம அடி
பயணிகளிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபருக்கு தர்ம அடி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தாராபட்டியை சேர்ந்தவர் ரவி. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரை சேர்ந்தவர் கருப்பையா. இவர்கள் நாள்தோறும் மதுரைக்கு வேலைக்காக வந்து செல்கின்றனர்.அதன்படி இன்று காலை பெரியார் பஸ் நிலையம் வந்த 2 பேர் பஸ்சுக்காக காத்திருந்தனர். பஸ் வரும் வரை 2 பேரும் செல்போனை எடுத்து பார்த்துக் கொண்டி ருந்தனர்.அப்போது அவர்களை வடமாநில வாலிபர்கள் நோட்டமிட்டதாக தெரிகிறது. அதில் […]
குற்றமில்லா சமூதாயம் அமைய கல்வி முக்கியம் கோவையில் இடை நின்ற மாணவர்களை கண்பிடித்து பள்ளியில் சேர்க்கை போலீஸாரின் பெரிய விஷயம் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்க்கு குவியும் பாராட்டு!
குற்றமில்லா சமூதாயம் அமைய கல்வி முக்கியம் கோவையில் இடை நின்ற மாணவர்களை கண்பிடித்து பள்ளியில் சேர்க்கை போலீஸாரின் பெரிய விஷயம் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்க்கு குவியும் பாராட்டு! இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுப்பதற்காக, கோவையில் ஆப்ரேசன் ரிபூட் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்காணித்து அவர்களை பள்ளியில் சேர்த்து வருகிறோம், இதுவரை 173 பேரை பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளோம் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். குற்றமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்றால், […]
இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கல்
இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கல் சிவகங்கை மாவட்டம் இலுப்பைகுடி இந்தோ திபத் எல்லைக்காவல் படை காவலர் பயிற்சி மையத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் மத்திய இணை மந்திரி சோபா கரண்ட்லஜே கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-மத்திய அரசின் வேலை வாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ் 8-வது முகாம் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று அதன் மூலம் மொத்தம் 51 ஆயிரம் […]
கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது செங்கோட்டை:தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அதில் மூட்டைகளில் 1,250 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து காரில் வந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் செங்கோட்டையை சேர்ந்த செண்பகராஜன் (31), சாத்தான்குளம் அருகே உள்ள கீழ செட்டிக்குளத்தை […]
உலகளவிலான போட்டிகளில் முத்திரை பதித்து தமிழக போலீஸ்துறைக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று சென்னை போலீஸ் விளையாட்டு வீரர்களுக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கி உள்ளார்.
உலகளவிலான போட்டிகளில் முத்திரை பதித்து தமிழக போலீஸ்துறைக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று சென்னை போலீஸ் விளையாட்டு வீரர்களுக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கி உள்ளார். சென்னை போலீஸ்துறையை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு புதுப்பேட்டையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில், குத்துச்சண்டை மேடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைக்கும் அறை புதிதாக கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்துகொண்டு இதனை திறந்து வைத்தார். […]