சென்னையில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள், சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தின் கீழும், உரிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு வருகிறார்கள். குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள், உரிய நிப ந்தனையை மீறி தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டவர்களின் ஜாமீனும் ரத்து செய்யப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு […]
Day: February 15, 2021
ஈரோட்டில் கைதான 4 பேரில் 2 பெண்களுக்கு கருமுட்டை, குழந்தை விற்பனையில் தொடர்பு போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் அகிலா என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், ‘தனக்கு விலைக்கு குழந்தை வேண்டும் என்றும், சட்ட ரீதியான பிரச்சினை வராமல் பார்த்து கொள்ளலாம் என்றும்’ கூறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அகிலா இதுபற்றி ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடமும், கருங்கல்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து போலீசாரின் அறிவுரைப்படி போனில் பேசிய பெண்ணிடம் செவிலியர் அகிலா போன் செய்து, தன்னிடம் குழந்தை […]