பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊர்க்காவல் படையினர் எம்.எல்.ஏ.,யிடம் மனு அளித்தனர் கள்ளகுறிச்சியில் ஊர்க் காவல் படை வீரர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யவும் கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர கோரியும் எம்.எல்.ஏ., விடம் மனுக் கொடுத்தனர். கள்ளக்குறிச்சி ஊர்க்காவல் படை வீரர்கள் சார்பில் ஏ பிரிவு படை வீரர் சரவணன் எம்.எல்.ஏ., செந்தில்குமார் அவர்களிடம் மனு அளித்துள்ளார். தமிழக காவல்துறையில் ஒரு பகுதியாக செயல்பட்டுவரும் ஊர் காவல் படையில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் […]
Day: June 24, 2021
மதுரை மாவட்டத்தில் நடக்கவிருந்த இரண்டு குழந்தை திருமணங்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் நடக்கவிருந்த இரண்டு குழந்தை திருமணங்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. மதுரை, மாவட்டம் உசிலம்பட்டி வில்லாணிச் சாலையிலும், வாகைகுளம் கிராமத்திலும் திருமண வயதை எட்டாத சிறுமிகளுக்கு நேற்று திருமணம் நடத்த உள்ளதாக உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல்நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் திருமதி பரமேஸ்வரி அவர்களின் தலைமையில் போலீசார் சம்வவ இடத்திற்கு சென்று நடக்கவிருந்த இரண்டு திருமணங்களையும் தடுத்து நிறுத்தி, சிறுமிகள் மற்றும் மணமகன்களின் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை நகர், மற்றும் புறநகர் காவல் நிலையங்களின் எல்லைகள் பிரிப்பு. அவனியாபுரம் காவல் நிலையத்தின் எல்லையின் கீழ் மதுரை விமான நிலையம்
மதுரை நகர், மற்றும் புறநகர் காவல் நிலையங்களின் எல்லைகள் பிரிப்பு. அவனியாபுரம் காவல் நிலையத்தின் எல்லையின் கீழ் மதுரை விமான நிலையம் காவல்துறையின் நிர்வாக வசதிக்காக மதுரை நகர், மற்றும் புறநகர் காவல் நிலையங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி மதுரை விமானநிலைய பகுதிகள் பெருங்குடி காவல் நிலையத்திற்கு பதில் அவனியாபுரம் காவல் நிலையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது, மதுரை, சுப்ரமணியபுரம் காவல்நிலையத்திற்குட்பட்ட பசுமலை, முனியாண்டிபுரம், மாடக்குளம், பகுதிகள் திருப்புரங்குன்றம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அவனியாபுரம் பிரசன்னா காலனி […]
காவல் ஆய்வாளர்கள் பணி மாற்றம்,மற்றும் புதிய பொறுப்பேற்பு
காவல் ஆய்வாளர்கள் பணி மாற்றம்,மற்றும் புதிய பொறுப்பேற்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காவல் ஆய்வாளராக இருந்த செல்ப்பாண்டி அவர்கள் சாத்தூருக்கு பணி மாற்றம் செய்யபட்டதை தொடர்ந்து பெருங்குடி காவல் ஆய்வாளர் திருமதி, மாயா ராஜலெக்ஷிமி அவர்கள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். தாலுகா காவல் ஆய்வாளராக இருந்த சிவசக்தி அவர்கள் செக்காணூரணிக்கு மாற்றப்பட்டார் திண்டுக்கல் காவல் ஆய்வாளராக இருந்த வீரசோலை அவர்கள் அவருக்குப்பதில் பொறுப்பேற்றார்.
மதுரை துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகர்ணங்களை வழங்கிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மதுரை துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகர்ணங்களை வழங்கிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுரை அருகே மூன்று கிராமங்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். மதுரை மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மதுரை மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் சார்பாக மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலாங்குளம், குலமங்களம், பொதும்பு ஆகிய பஞ்சாயத்தில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு […]