தென்காசிவீ.கே.புதூரில் வி.ஏ.ஓ.கொலையை கண்டித்து அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் என்பவர் பணியின் பொழுது வெட்டிக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து வீ.கே.புதூர் தாசில்தார்அலுவலகத்தின் முன்பு தாசில்தார் தெய்வ சுந்தரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மணல் மாபியா கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு […]
Month: April 2023
பாலக்கோட்டில் முறைகேடாக அனுமதியின்றி கட்டப்பட்ட இந்துஅறநிலைத்துறை ஆய்வாளர் புதிய அலுவலக கட்டிடம்.
நிதி எங்கிருந்து வந்தது பொதுமக்கள் கேள்வி.
பாலக்கோட்டில் முறைகேடாக அனுமதியின்றி கட்டப்பட்ட இந்துஅறநிலைத்துறை ஆய்வாளர் புதிய அலுவலக கட்டிடம்.நிதி எங்கிருந்து வந்தது பொதுமக்கள் கேள்வி. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இந்து அறநிலைத்துறை ஆய்வாளராக துரை,செயல்அலுவலராக சிவா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.பாலக்கோடு சுற்றியுள்ள ஸ்ரீதிரெளபதிஅம்மன், ஸ்ரீபுதுர்மாரியம்மன் கோவில், செல்லியம்மன் சாக்கியம்மன் கோவில், ராமசாமி கோவில், பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு, கோவில்களுக்கு சொந்தமான பலஆயிரம் ஏக்கர் நிலம் , வீடு மற்றும் கடை உள்ளிட்டவைஇந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.தமிழக அரசு மூலம் கோவில் பராமரிப்பு […]
காரிமங்கலம் அருகேநிலத்தகராறில் தம்பி உள்பட 4 பேர் மீது தாக்குதல்3 பேர் மீது வழக்கு
காரிமங்கலம் அருகேநிலத்தகராறில் தம்பி உள்பட 4 பேர் மீது தாக்குதல்3 பேர் மீது வழக்கு காரிமங்கலம் அடுத்த சொட்டான்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 50). இவருடைய அண்ணன் ராஜி (58). இவர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னராஜ், அவருடைய மனைவி மஞ்சுளா (45), மகன் மகாலிங்கம் (21), மகள் காமாட்சி (20) ஆகியோர் அவர்களது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது ராஜி, […]
காரிமங்கலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரிமங்கலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து 13 ஆண்டுகளாக தனியாக வீட்டில் வசித்து வந்தார்.இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தீராத வயிற்று வலி உள்ளதாகவும் தெரிகிறது.இதனால் மனமுடைந்த ரவி வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு […]
போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு.. எஸ்சி, எஸ்டி ஆணைய உத்தரவிற்கு ஹைகோர்ட் தடை
போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு.. எஸ்சி, எஸ்டி ஆணைய உத்தரவிற்கு ஹைகோர்ட் தடை திருவண்ணாமலை மாவட்ட கீழ்கொடுங்கலூர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்ற மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணைய உத்தரவிற்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள உளுந்தை கிராமத்தில் வாகனங்களில் பேட்டரி மற்றும் வீடுகளில் நகை ஆகிய திருட்டு புகார்களில் பதிவான வழக்குகளில் சுரேன், சந்தீப், […]
தென்காசி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி கல்லூரி மாணவர் பலி
தென்காசி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி கல்லூரி மாணவர் பலி தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் கிராமம் இல்லம் தெருவை சேர்ந்த ராமர். இவரது மகன் முத்துமாரி (வயது 19). அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் முத்து கணேஷ்(19). இவர்கள் 2 பேரும் சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர். நேற்று வழக்கம்போல் ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் […]
செங்கோட்டையில் மனைவி மீது நாட்டு வெடி வீசிய விவசாயி
செங்கோட்டையில் மனைவி மீது நாட்டு வெடி வீசிய விவசாயி தென்காசி மாவட்டம செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கலைஞர் காலனியை சேர்ந்தவர் சந்தனகுமார்(வயது 33). விவசாயி. இவரது மனைவி கவுசல்யா(25). நேற்று வல்லத்தில் முப்புடாதி அம்மன் கோவிலில் கொடை விழா நடைபெற்றது. இதனால் சந்தனகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்து விட்டு வீட்டிற்கு சாப்பிட வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும், கவுசல்யாவுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த கவுசல்யா, தனது கணவருக்கு சாப்பாடு […]
தென்காசிசுரண்டை அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தென்காசிசுரண்டை அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை சுரண்டை அருகே உள்ள வி.கே.புதூரை அடுத்த வீராணம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன். இவரது மகன் மைதீன்கான் (வயது 21). இவர் சுரண்டையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்துவிடும் மைதீன் கான், அதன்பின்னர் நண்பர் களுடன் சேர்ந்து வெளியில் சென்று விடுவதாகவும், நள்ளிரவு நேரத்தில் தான் தினமும் வீட்டுக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது. […]
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்உறுப்புகள் தானம் திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள அகரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 40). இவர் கடந்த 21-ந்தேதி, அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு உடல்நிலை மோச மானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஜெயராமன் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் […]
விழுப்புரத்தில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு
விழுப்புரத்தில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக காவல் துறை தலைவர் திரு. சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் நிலையத்தில் உள்ள ஆவணங்களை பார்வையிட்டார் அப்போது ஆவணங்கள் அனைத்தும் சரியாக பராமரிப்பு செய்ததால் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன் தலைமையிலான காவலர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு தொகையும், காவல் வரவேற்பில் புகார்களை முறையாக பெற்று அதில் சிறப்பான முறையில் பணியாற்றிய வரவேற்பாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு தொகையினை வழங்கியும் தமது பாராட்டினை தெரிவித்தார்.