தலையில் கல்லைபோட்டு காய்கறி வியாபாரி கொலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையை அடுத்த பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 45). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், முருகே சன் (22) என்ற மகனும் உள்ளனர். சூரக்குடி பகுதி யில் அடைக்கலம் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் தான் பார்த்து வந்த வியாபாரத்தை விட்டு விட்டு சில ஆண்டு களுக்கு முன்பு அடைக்கலம் வேலைக்காக திருப்பூருக்கு சென்றார். அங்கு ஒரு கம்பெனியில் […]
Month: May 2023
விநாயகர்-காளியம்மன் கோவில்களில் துணிகர கொள்ளை
விநாயகர்-காளியம்மன் கோவில்களில் துணிகர கொள்ளை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு பூசாரி வன்னியராஜ் வழக்கம் போல் கோவிலை பூட்டி சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்குவந்த மர்மநபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்து காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு தப்பினர். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த பூசாரி வன்னியராஜ் கதவு உடைக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி […]
கோவையில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர்
கோவையில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கோவை சாந்திமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் இவர் தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சாத்தப்பன் (வயது 31) என்பவர் மிஸ்டு கால் மூலமாக நண்பராக பழகினார். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற சாத்தப்பன் […]
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தோமலஅள்ளியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது47). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கதிரடிக்கும் எந்திரத்தில் நாகராஜின் வலது கை சிக்கியது. இதில் அவர் கை துண்டானது.இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் அவர் வீட்டிலேயே இருந்து வந்தார். வேலைக்கு செல்ல முடியாததால் விரக்தியில் இருந்த நாகராஜ் நேற்று மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
பாலக்கோடு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை
பாலக்கோடு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தனியார் மெட்ரிக் பள்ளி சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தனியார் பள்ளி மாவட்ட கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளி மாவட்ட கல்வி இயக்குனரின் உத்தரவை மீறி செயல்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக அரசு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டை ஊதியம் வழங்கப்படுவதாகவும் அதை மாற்றி ஒரே விதமாக ஊதிய வழங்கக் கோரியும், 37வருடங்களாக தினக்கூலியாக வேலை செய்யும் தொழிலாளர்களை நிரந்தர பணி வழங்க கோரியும், மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்து பாகல் பட்டியில் லாரி கார் மீது மோதி விபத்து.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்து பாகல் பட்டியில் லாரி கார் மீது மோதி விபத்து. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டி பகுதியில் உள்ள தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 11. 30 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்திற்கு முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இரு வாகனங்களும் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. அதனை தொடர்ந்து பின்னால் வந்த லாரியும் இந்த […]
காரிமங்கலம் பகுதிகளில் செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல், உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.
காரிமங்கலம் பகுதிகளில் செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல், உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு. தர்மபுரி மாவட்டம், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி, ஐ.ஏ.எஸ்., அவர்கள் உத்தரவின் பேரில், காரிமங்கலம் ஒன்றியம் மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, சமத்துவபுரம், பொன்னேரி, கரகோடள்ளி மற்றும் காரிமங்கலம் பைபாஸ், அகரம் பிரிவு ரோடு போன்ற பகுதிகளில் உள்ள மாம்பழங்கள் விற்பனை செய்யும் சாலையோர விற்பனை கடைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன […]
பைசுஅள்ளியில் வழக்கறிஞரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு.
பைசுஅள்ளியில் வழக்கறிஞரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பையாம்பட்டியானூரை சேர்ந்த வழக்கறிஞர் பாரதி (வயது.36),இவருடைய உறவினர் செல்வராஜ் என்பவர் தர்மபுரி நீலாபுரத்தை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு சொகுசு கார் விற்பனை செய்ததாகவும் அது சம்மந்தமாக பிரச்சனை இருந்து வருவதாகவும் அதற்காக உதவும் படி கேட்டுக் கொண்டார்,செல்வராஜ்பிரச்சனை குறித்து வழக்கறிஞர் பாரதி பைசு அள்ளியில் உள்ள பொது இடத்தில் வடிேவேலுவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்,அப்போது வடிவேல் மற்றும் அவரது கூட்டாளிகளான பிடமனேரியை சேர்ந்த […]
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- 2 பேர் பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- 2 பேர் பலி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த இருளாயி […]