சென்னை நுங்கம்பாக்கத்தில் சாலையோர தர்பூசணி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு சென்னை நுங்கப்பாக்கத்தில் லயோலா கல்லூரி சுற்றுச்சுவரையொட்டிய பகுதியில் ஏராளமான தர்பூசணி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கோடை காலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று தர்பூசணியை வாங்கி சாப்பிட்டு தாகம் தணிப்பார்கள். இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் மற்றும் கிர்ணி பழங்கள் தரமற்றவையாக இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து இன்று காலையில் அதிகாரிகள் அங்கு நேரில் […]
Month: May 2023
சென்னை தி.நகர் சுரங்கப்பாதையில் வாலிபரை வழிமறித்து தலையில் வெட்டி செல்போன் பறிப்பு
சென்னை தி.நகர் சுரங்கப்பாதையில் வாலிபரை வழிமறித்து தலையில் வெட்டி செல்போன் பறிப்பு சென்னை தி. நகர் ஆர்.பி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். 40 வயது வாலிபரான இவர் நேற்று இரவு தி.நகர் எம்.எச் ரோடு இருசக்கர வாகன சுரங்கப்பாதை வழியாக மலர்க்கொடி என்பவருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களில் 2 பேர் இறங்கி வந்து முத்துக்குமாரிடம் செல்போனை தருமாரு கேட்டனர். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தார். […]
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி மோதி வாலிபர் பலி
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி மோதி வாலிபர் பலி காட்டுமன்னார்கோவில் பகுதி கலியன்மலை கிராமத்தைச் சேர்ந்த சிகாமணி மகன் பிரபாகரன் (வயது 25). கொத்தனார் பணி செய்கிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பிற்கு வேலைக்கு வந்தார். அப்போது காட்டுமன்னார்கோவிலுக்கு சிலிண்டர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று எதிரில் வந்தது. இந்த லாரி சேத்தியாத்தோப்பு வாலைக்கொல்லை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் […]
கடலூர் மாநகரில் வாகன ஓட்டுநர்களிடம் அடாவடியாக பணம் வசூலில் ஈடுபடும் வாலிபர்கள்
கடலூர் மாநகரில் வாகன ஓட்டுநர்களிடம் அடாவடியாக பணம் வசூலில் ஈடுபடும் வாலிபர்கள் கடலூர் மாநகரில் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் 100-க்கண க்கான வாகனங்கள் மூலமாக பல்வேறு பொரு ட்கள் கொண்டு வரப்பட்டு, கடைகளில் பொருட்களை ஏற்றி, இறக்கி வருகின்றனர் கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கட்டணம் வசூலிக்க வரும் […]
மங்கலம்பேட்டை அருகே புதிய பைபாஸ் சாலையில் ஆட்டோ மீது கார் மோதி முதியவர் பலி: 2 பேர் படுகாயம்
மங்கலம்பேட்டை அருகே புதிய பைபாஸ் சாலையில் ஆட்டோ மீது கார் மோதி முதியவர் பலி: 2 பேர் படுகாயம் சென்னை – கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்தூர்பேட்டை வரையில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இன்று காலை மங்கலம்பேட்டை அருகே, மங்கலம்பேட்டை – புல்லூர் சாலை மற்றும் பைபாஸ் ரோடு சந்திப்பு அருகே வந்துக் கொண்டிருந்த ஆட்டோவின் மீது, புதிய பைபாஸ் சாலையில் அதி வேகமாக வந்த […]
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் சாராயம் கடத்திய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது: கடலூர் கலெக்டர் உத்தரவு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் சாராயம் கடத்திய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது: கடலூர் கலெக்டர் உத்தரவு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் மதுகடத்தல் சம்பந்தமாக சிறுபாக்கம் ஒரங்கூரிலிருந்து ஓலக்கூர் செல்லும் பாதையில் மா.கொத்தனூரில் சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டார். அவர் 2 லாரி ட்யூப்களில் சுமார் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த […]
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 45 வயது மதிக்கத்தக்கவர் பலி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 45 வயது மதிக்கத்தக்கவர் பலி வேப்பூர் அருகே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்தார். […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 9-ம் வகுப்பு மாணவி மாயம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 9-ம் வகுப்பு மாணவி மாயம் பண்ருட்டி அடுத்துள்ள கிராமம் ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி. நேற்று வீட்டில் இருந்தவர் திடீர் என காணாமல் போனார். இவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடி எங்கேயும் கிடைக்க வில்லை, மாணவியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதேஊரை சேர்ந்த ஏற்கனவே திருமணமான 30 வயதுடைய வாலிபர் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக புகாரளித்தார். […]
கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்- தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்- தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் தர்மபுரி அருகே உள்ள காரிமங்கலம் நகரம், அகரம் பிரிவு சாலை, மொரப்பூர் பிரிவு சாலை, கும்பாரஅள்ளி […]
ஒகேனக்கல்லில் மதுபான பார்களை மூட கலெக்டர் உத்தரவு
ஒகேனக்கல்லில் மதுபான பார்களை மூட கலெக்டர் உத்தரவு கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கர்நாடக மாநில எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ள மதுபான கடைகள், மதுபான பார்களை 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் உள்ள தனியார் ஓட்டல் மற்றும் தமிழ்நாடு ஓட்டல் ஆகியவற்றில் உரிமை பெற்று செயல்படும் பார்களை 8-ந் தேதி முதல் 10-ந் தேதி […]