மதுரையில் வாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது மதுரை திடீர் நகர் போலீசார் இரவில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வக்கீல் தெரு சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த இரண்டு வாலிபர்களை பிடித்தனர். அவர்கள் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தனர். அந்த வாளை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஹீரா நகர் காளிமுத்து மகன் மூர்த்தி (38), அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் பாலாஜி (23) என்று […]
Month: July 2023
மதுரையில் பொதுக்கூட்டம்-ஊர்வலம் நடத்த 15 நாட்கள் தடை உத்தரவு
மதுரையில் பொதுக்கூட்டம்-ஊர்வலம் நடத்த 15 நாட்கள் தடை உத்தரவு மதுரையில் வருகிற 9-ந் தேதி வரை 15 நாட்களுக்கு போலீஸ் அனுமதி இன்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழக காவல்துறை சட்டம் 1888 -பிரிவு 41 மற்றும் 41(ஏ)- படி மதுரை மாநகர் பகுதிகளில் பொது,தனியார் இடங்களில் அனுமதி இன்றி கூடுதல், போராட்டத்தில் ஈடுபடுதல், ஆயுதங்களுடன் […]
அகரம் பிரிவு சாலையில் சொகுசு கார் மோதி தனியார் பஸ் கண்டக்டர் படுகாயம்.
அகரம் பிரிவு சாலையில் சொகுசு கார் மோதி தனியார் பஸ் கண்டக்டர் படுகாயம். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பொய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் பூபாலன் (வயது .36) இவர் இன்று காரிமங்கலம் அருகே அகரம் பிரிவு சாலையில், சாலையை கடக்க முயன்ற போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த சொகுசு கார் இவர் மீது மோதியது,இதில் பலத்த காயமடைந்த பூபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு […]
பாலக்கோடு தீத்தார அள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் காட்டு பன்றியை வேட்டையாடிய தந்தை மகன் கைது
பாலக்கோடு தீத்தார அள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் காட்டு பன்றியை வேட்டையாடிய தந்தை மகன் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தீத்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கௌரன் (58). இவரது மகன் ராம்குமார் (வயது.32) ஆகிய இருவரும் தங்களது விவசாய நிலத்தில் உள்ள விளை பயிர்களை காட்டு விலங்குகளிலிருந்து காப்பாற்ற விவசாயம் தோட்டம் முழுவதும் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தி வயல்வெளி முழுவதும் மின்கம்பி மூலம் விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ச்சி வந்தனர்.வழக்கமாக வரும் […]
மைனர் பெண்ணை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்- உளுந்தூர்பேட்டை வாலிபர் கைது
மைனர் பெண்ணை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்- உளுந்தூர்பேட்டை வாலிபர் கைது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் சதீஸ்குமார்(23). இவருக்கும் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனிலேயே பேசி வந்த நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சதீஸ்குமார் கடந்த மே மாதம் 3-ந்தேதி தனது ஊருக்கு அழைத்துச்சென்றுவிட்டார். மகளை காணாமல் பல இடங்களில் தேடிய அவரது பெற்றோர் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தனர். உளுந்தூர்பேட்டையில் […]
ஆர்.எஸ்.மங்கலம் சுகாதார கட்டிடத்தை முதன்மை செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஆர்.எஸ்.மங்கலம் சுகாதார கட்டிடத்தை முதன்மை செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:- ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், சுற்று வட்டார கிராமத்தில் மக்கள் பயன் பெறும் வகையில் அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலைய கட்டிடம் பலவீனமாக காணப்படுகிறது. மேற்கூரைகள் இடிந்து விழுகின்றன. எனவே சுகாதார நிலைய கட்டிடத் தினை இடித்து […]
திருமங்கலம் அருகே விபத்து- ஓட்டல் தொழிலாளர்கள் 2 பேர் பலி
திருமங்கலம் அருகே விபத்து- ஓட்டல் தொழிலாளர்கள் 2 பேர் பலி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சாஸ்தா நகரை சேர்ந்தவர் சந்திரன் மகன் சுஜித் (வயது 20). இவரது நண்பர் செந்தில்குமார் மகன் பிரபு (26). இவர்கள் இருவரும் கோவையில் ஒரு ஓட்டலில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தனர். இன்று காலை […]
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்க தலைவர் கே.செல்வராஜ் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் 32-ம் ஆண்டு விழாவையொட்டி, வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்பில் தொடர்ந்து பள்ளியில் படித்துவரும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சான்றிதழ், […]
சிவகங்கை மாவட்டத்தில் காரில் வந்து ஆடு திருடிய 2 பேர் சிக்கினர்
சிவகங்கை மாவட்டத்தில் காரில் வந்து ஆடு திருடிய 2 பேர் சிக்கினர் சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் பிள்ளை வன ஊரணி அருகே சிவப்பு கலர் காரில் 3பேர் வந்தனர். காரில் இருந்து இறங்கி நோட்டமிட்டபடி இருந்த அவர்கள் அந்தப் பகுதியில் மேய்ச்சலில் இருந்த 2 ஆடுகளை காரில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காரில் ஆடு கத்தும் சத்தம் கேட்டதால் காரை வழிமறித்து சத்தம் போட்டனர். உடனடியாக […]
விவசாயி வீட்டில் ரூ.50 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
விவசாயி வீட்டில் ரூ.50 ஆயிரம் திருடிய வாலிபர் கைது தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி இ.பி. காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 70). விவசாயி.இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். பின்னர் வேலை முடிந்த பின்னர் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணி உள்ளிட்ட பொருட்கள் […]