வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு பண்டிகை கால விடுமுறை, கோடை விடுமுறை போன்ற நாட்களில் விடுமுறையை கழிப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெகுநாட்கள் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகிலுள்ள காவல்நிலையங்களில் தகவல் தெரிவித்து விட்டு செல்லவும், இச்செயல் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், ரோந்து பணியிணை சிறப்பாக செய்திடவும் காவல்துறையினருக்கு உதவும், ஏனெனில் சமூக விரோதிகள் பெரும்பாலும் பூட்டிய வீடுகளை குறிவைத்தே திருட்டு போன்ற குற்றசம்பவங்களில் ஈடுபடுகின்றனர்
Month: March 2025
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (14.03.2025) மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் மற்றும் Anti Drug Club மன்றத்தின் உறுப்பினர்களாக […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சாமில்லில் பணத்தை திருடிய நபர் அதிரடி கைது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சாமில்லில் பணத்தை திருடிய நபர் அதிரடி கைது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பார்டரில் சிவம் உட் இண்டஸ்ட்ரீஸ் சாமில்லில். கடந்த 06.03.25. ம் தேதி சாமில்லில் இரவில் மேஜை லாக்கர் பூட்டை உடைத்து ரொக்க பணம் ரூபாய் 45000 ஆயிரம் திருடு போனதாக வந்த புகாரின் வழக்கு பதிவு செய்து துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் முரளீதரன் மற்றும் தலைமை […]
சென்னை பச்சையப்பா கல்லூரியில் வணிக துறை வருடாந்திர செயல்பாட்டு நிகழ்வில், பணி ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி., அவர்களுக்கு பாராட்டு
சென்னை பச்சையப்பா கல்லூரியில் வணிக துறை வருடாந்திர செயல்பாட்டு நிகழ்வில், பணி ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி., அவர்களுக்கு பாராட்டு சென்னை பச்சையப்பா கல்லூரியில் கடந்த 5ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் திருவள்ளுவர் ஹாலில் நடைபெற்ற பச்சையப்ப கல்லூரியின் வணிகத்துறை வருடாந்திர செயல்பாட்டு நிகழ்வில் பணி ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி., திரு Dr.M.S.முத்துசாமி I.P.S., அவர்கள் சிறப்பு விருந்தினறாக கலந்து கொண்டார்Dr.Baby Gulnaz, principal அவர்கள் விழாவினை தலைமை தாங்கினார்.Associate professor […]
மதுரை செல்லூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2017 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம்
மதுரை செல்லூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2017 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் மதுரை மாநகர் செல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான புது விளாங்குடி பகுதியைச் சேர்ந்த விருமாண்டி என்பவரது மகன் சச்சிதானந்தம் வயது 40 என்பவரை கொலை செய்தது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மகன் பூமிநாதன் வயது 43 என்பவரை கைது செய்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த […]
மதுரையில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு கோடை வெப்பத்தை தணிக்க தினமும் பழச்சாறு நீர் மோர் மற்றும் இயற்கை பானங்கள் வழங்கும் திட்டத்தை மதுரை மாநகர் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
மதுரையில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு கோடை வெப்பத்தை தணிக்க தினமும் பழச்சாறு நீர் மோர் மற்றும் இயற்கை பானங்கள் வழங்கும் திட்டத்தை மதுரை மாநகர் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறதுஇதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும்.இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் […]
வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்.
வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம். இன்று (12.03.2025) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 33 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து ) ஆகியோர் உடனிருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக […]
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இன்று (12.03.2025) தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் காவல்துறை தலைவர் திருமதி. அ.கயல்விழி இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாநகர காவல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு […]
மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பில் மதுரை மருத்துவ கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக ஊடங்களின் அபாயங்கள் பற்றி விழிப்புணர்வு
மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பில் மதுரை மருத்துவ கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக ஊடங்களின் அபாயங்கள் பற்றி விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில், பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் சமூக ஊடக அபாயங்களில் இருந்து பெண்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய […]
பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான 45 வது மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு மதுரை மாநகர போலிஸ் கமிஷனர் பாராட்டு
பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான 45 வது மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு மதுரை மாநகர போலிஸ் கமிஷனர் பாராட்டு தேசிய அளவிலான 45 வது மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடந்த 04.03 2025 முதல் 09.03 .2025 வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பில் மதுரை மாநகர் செல்லூர் காவல்நிலைய தலைமை காவலர் திரு. ஜெயச்சந்திர பாண்டியன் 3000 மீட்டர் பலதடை ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும், […]