சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் கொரானா வைரஸ் பற்றி விழிப்புணர்வு…! சிவகங்கை மாவட்டம்,மதகுபட்டி காவல் நிலையத்தின் சார்பாக இன்று(24-3-2020) மதகுபட்டி, ஒக்கூர், கீழப் பூங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கொரானா விழிப்புணர்வு மற்றும் 144 தடை உத்தரவு பற்றி விழிப்புணர்வு. ★ கை கொடுக்கக்கூட பயம். எதிரில் நின்று பேச பயம். வெளியே செல்ல பேருந்து ஆட்டோ என எதிலும் போக பயம். யார் இருமினாலும் தும்மினாலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என பயம். எல்லாம் “பயம் […]
Month: March 2020
வீட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பொருட்களை வாங்கலாம்: வெளியில் சுற்றினால் வாகனம் பறிமுதல், வழக்கு: காவல் ஆணையர் எச்சரிக்கை
உங்கள் பகுதியை விட்டு வெகுதூரம் ஏன் பயணிக்கிறீர்கள்? சாலைகளில் அத்துமீறுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். வழக்குப் பதிவு செய்வோம். இது விடுமுறை காலமல்ல, சுற்றுவதற்கு என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்தைப் பொறுத்தவரையில் பொதுமக்கள் ஒழுக்கத்தோடு இருக்கிறார்கள். அரசு உத்தரவை பெரும்பாலானோர் மதித்து நடக்கிறார்கள். அதனால் பிற மாநில போலீஸார் போல சாலையில் செல்பவர்கள் மீது கடுமையான […]
தமிழகத்தில் முக்கிய எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கண்காணித்து வருகின்றனர்.
சோதனைச்சாவடிகளின் விவரங்கள் வடக்கு மண்டலம் திருப்பத்தூர் மாவட்டம் கொல்லப்பள்ளி சோதனைச்சாவடி வேலூர் மாவட்டம் மாதண்டபள்ளி சோதனைச்சாவடி திருவள்ளுர் மாவட்டம் பட்டறை பெருமந்தூர் சுங்க சாவடி திருவள்ளுர் மாவட்டம் நாகலிங்கபுரம் சோதனைச்சாவடி விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை சோதனைச்சாவடி விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டி சோதனைச்சாவடி கடலூர் மாவட்டம் அழகியானந்தம் சோதனைச்சாவடி கடலூர் மாவட்டம் காந்திரகோட்டை சோதனைச்சாவடி மேற்கு மண்டலம் திருப்பூர் மாநகரம் சிவந்தபாளையம் சோதனைச்சாவடி திருப்பூர் மாநகரம் அம்மாபாளையம் சோதனைச்சாவடி திருப்பூர் மாவட்டம் அமராவதி […]
தனிமைப்படுத்தப்பட்ட நபர் மாஸ்க் இல்லாமல் பைக்கில் சுற்றியதால் பரபரப்பு: எச்சரித்து அனுப்பிய போலீஸார்
வெளிநாட்டிலிருந்து விருதுநகர் வந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் பைக்கில் சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீஸார் எச்சரித்துத் திருப்பி அனுப்பி வைத்தனர். கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து விருதுநகர் வந்த 190 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர […]
கரோனா வைரஸ்: வதந்தி பரப்பினால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – ஈரோடு எஸ்பி சக்திகணேசன்
கரோனே வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பினால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு எஸ்பி எஸ்.சக்திகணேசன் தெரிவித்துள்ளார். ஈரோடு எஸ்பி எஸ்.சக்திகணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”கரோனா தொற்றினைப் பொறுத்தவரை நாம் இரண்டாவது ஸ்டேஜில் இருந்து மூன்றாவது ஸ்டேஜ்க்கு செல்லாமல் இருக்கவே தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோபியை அடுத்த தூக்கநாயக்கன் பாளையம் பகுதியில் 24 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரப்பிய இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை […]
கரோனா முன்னெச்சரிக்கை; காவல்துறைக்கு 22 வழிகாட்டுதல்: டிஜிபி உத்தரவு
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறைக்கு 22 வழிகாட்டுதல்களை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார். அதில் இனிவரும் காலங்களில் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பு: கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும், தமிழக அரசு தொற்று ஏற்படாமல் எடுத்துவரும் முன்னேச்சரிக்கை அனைவரும் அறிவோம். காவல்துறைச் சேர்ந்த நமக்கு இதுபோன்ற நேரங்களில் எழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை பேணுவதும், மக்களிடையே அமைதியான சூழலை உருவாக்கும் கடமை உள்ளது. தமிழக […]
பூந்தமல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய இருவர் கைது
பூந்தமல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய இருவர் கைது பூந்தமல்லி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 40 நபர்களில் 12 நபர்கள் இறந்து விட்டதாகவும். இந்நோய் பூந்தமல்லி பகுதியில் வேகமாக பரவி வருவதாகவும், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறிவருகின்றனர் என வாட்ஸப்பில் சில சமூக விரோதிகள் பரப்பிய தகவல் […]
எண்ணூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பெண்கள் உட்பட 4 நபர்களை கைது செய்து 12 கிலோ கஞ்சா மற்றும் 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்த எண்ணூர் சரக உதவி ஆணையாளர் தலைமையிலான போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்
எண்ணூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பெண்கள் உட்பட 4 நபர்களை கைது செய்து 12 கிலோ கஞ்சா மற்றும் 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்த எண்ணூர் சரக உதவி ஆணையாளர் தலைமையிலான போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும்,சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் அதிகரித்து கண்காணித்தல் மற்றும் அதிகளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் […]
கொருக்குப்பேட்டை இரயில்வே காவலர்கள் கொரோன வைரஸ் பற்றி விழிப்புணர்வு…
கொருக்குப்பேட்டை இரயில்வே காவலர்கள் கொரோன வைரஸ் பற்றி விழிப்புணர்வு… இன்று காலை 09.00 மணிக்கு கொருக்குப்பேட்டை இரயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளுக்கு சென்னை பெருநகர மாநகராட்சி கொருக்குப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மற்றும் GRP கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் இணைந்து பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை நடத்தப்பட்டது. ◆ வீட்டைவிட்டு வெளியே போய்ட்டு வந்தால் சோப்பு போட்டு கைகளைக் கழுவுங்கள். வெளியில் செல்வோர் […]
குடும்பப் பிரச்சினையில் ஒருவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள்தண்டனை
குடும்பப் பிரச்சினையில் ஒருவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள்தண்டனை. 17.07.2018-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்கொடுமலூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் அவரது மனைவி போதும்பொண்ணு மற்றும் அவரது சகோதரர் வேல்முருகன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில், போதும்பொண்ணு மற்றும் வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கி கொலை செய்ததையடுத்து அபிராமம் காவல் நிலைய குற்ற எண். u/s 342,449,302 IPC-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்து […]