கொடைக்கானலில் போதை ஸ்டாம்பு விற்பனை−வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இளம் பெண்களுக்கு போதை வஸ்து அடங்கிய எல்.எஸ்.டி.ஸ்டாம்பு மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட 32 போதை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததாகக் கடந்த 2019 ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அபிநாத் என்ற வாலிபரை கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கானது மதுரை மாவட்ட போதை […]
Day: April 10, 2021
மதுரை மாநகர் B3 தெப்பகுளம் காவல்நிலைய போலீசாரின் கருணை அனுப்பானடி தீயணைப்புதுறையினருக்கு நன்றி
மதுரை மாநகர் B3 தெப்பகுளம் காவல்நிலைய போலீசாரின் கருணை அனுப்பானடி தீயணைப்புதுறையினருக்கு நன்றி மதுரை தெப்பகுளத்தில் சிக்கிதவித்த நாய்குட்டியை பார்த்த தெப்பகுளம் போலீசார் மதுரை அனுப்பானடி தீயணைப்புதுறையிருக்கு தகவல் தெரிவிக்கபட்டு விரைந்து செயல்பட்டு நாய்குட்டியை காப்பாற்றினர். வீரர்களுக்கும் போலீசாருக்கும் நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
ராமநாதபுரம் வனரேஞ்சருக்கு சுவிட்சர்லாந்தின் சர்வதேச விருது
ராமநாதபுரம் வனரேஞ்சருக்கு சுவிட்சர்லாந்தின் சர்வதேச விருது சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் மூலமாக ராமநாதபுர வனதுறை ரேஞ்சர் சதீஸ் சேவையை பாராட்டி சரவதேச விருது வழங்கப்பட்டது. சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள வனத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 10 வனத்துறை ரேஞ்சர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சர்வ தேச விருது வழங்குகிறது.100 நாடுகளிலிருந்து 600 க்கும் மேற்பட்ட வன ரேஞ்சர்கள் வின்னப்பித்திருந்தனர். அதில் ராமநாதபுரம், மன்னார் வளைகுடா தேசிய பூங்கா […]
மதுரை, உசிலையில் வாகனஓட்டிகளுக்கு காவலர்கள் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு
மதுரை, உசிலையில் வாகனஓட்டிகளுக்கு காவலர்கள் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புஅதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு பல் வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த கட்டுபாடுகள் நாளை முதல் அமுலுக்க வர உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து காவலர்கள் சார்பில் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன் , போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போக்குவரத்து […]
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2000/− முதல் 5000/− வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2000/− முதல் 5000/− வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், ஒடிசா மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் முறை ரூ. 2000/− அபராதமும், மூன்றாம் முறை முதல் ரூ. 5000/− அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று 10. 4. 2021 காலை 10:15 மணி அளவில் சென்னை எழும்பூர் நரியங்காடு காவலர் குடியிருப்பில் சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து கொரோனாநோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் காவல் அதிகாரிகள் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் I.P.S. அவர்கள் துவக்கிவைத்தார்.