Police Department News

வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உள்பட 3 பேர் கைது மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்தவர் ராஜா முகமது. இறைச்சி கடை நடத்தி வரும் இவரது வீட்டில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி சென்றனர். இதில் வீட்டின் கதவில் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்து திரைச்சீலை எரிந்து சேதமானது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத், டி.எஸ்.பி. ஆர்லிஸ் ரெபோனி மற்றும் மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து […]

Police Department News

கோவையில் தொழிலாளியை குத்திவிட்டு திண்டுக்கல் வந்த 2 வாலிபர்களை மடக்கிய போலீசார்

கோவையில் தொழிலாளியை குத்திவிட்டு திண்டுக்கல் வந்த 2 வாலிபர்களை மடக்கிய போலீசார் நெல்லை முத்தமிழ் தோட்டத்தை சேர்ந்த சாமுவேல் மகன் கிறிஸ்டோபர்(26). அதேபகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் வினித்(25). இவர்கள் 2 பேரும் கோவை மலர்காடு என்ற பகுதியில் தங்கி குனியமுத்தூரில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தனர். அதேபகுதியில் சபரிநாதன்(30) என்பவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவருக்கும் தொழில் விசயம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. […]

Police Department News

திருச்சி சரக காவல் அதிகாரிகளுடன் மத்திய மண்டல ஐ.ஜி. ஆலோசனை

திருச்சி சரக காவல் அதிகாரிகளுடன் மத்திய மண்டல ஐ.ஜி. ஆலோசனை திருச்சி சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் இன்று முக்கிய வழக்குகள், ரவுடிகளை கட்டுப்படுத்துதல், கஞ்சா ஒழித்தல், தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். கலந்தாய்வு கூட்டம் திருச்சி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Police Department News

அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சார்பாக போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு

அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சார்பாக போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கியது. இந்த பேரணியை நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.செந்தில்வேல் அவர்களால் பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது.மாணவிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Police Department News

மகேந்திரமங்கலம் பெரிய தப்பை கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயிக்கு அடி உதை .
தப்பியோடிய குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு.

மகேந்திரமங்கலம் பெரிய தப்பை கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயிக்கு அடி உதை .தப்பியோடிய குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு. தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பெரியதப்பை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி (வயது 38 ) இவருடைய தந்தை நாகராஜ் என்பவருக்கும்தர்மபுரி அருகே உள்ள அன்னசாகரம் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு நிலம் சம்மதமாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக பாலக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வரும் நிலையில், நேற்று மாலை நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் உள்ள தேங்காய் […]

Police Department News

காரிமங்கலம் அருகேவிவசாயி விஷம் குடித்து தற்கொலை

காரிமங்கலம் அருகேவிவசாயி விஷம் குடித்து தற்கொலை காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் ஊராட்சி சொன்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாறன் (வயது 52). விவசாயி. இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த மாறன் நேற்று வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் […]

Police Department News

போக்குவரத்து விதியை மீறுபவர்களை செல்போனில் படம் பிடிக்கும் போலீசார்- அபராதம் விதித்து குறுந்தகவல்

போக்குவரத்து விதியை மீறுபவர்களை செல்போனில் படம் பிடிக்கும் போலீசார்- அபராதம் விதித்து குறுந்தகவல் சென்னையில் சுமார் 80 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 6.51 சதவீதம் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. அதிக சாலை விபத்துகள் நடைபெறும் பெரு நகரங்களில் சென்னை முதல் 3 இடங்களுக்குள் உள்ளது. சென்னையில் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக, போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னையில் மொத்தம் 312 சிக்னல்கள் […]

Police Department News

மாரண்டஅள்ளி கணபதி நகரில் கடையின் மேற்கூரை சிமென்ட் சீட்டு அமைக்கும் பணியின் போது கீழே விழுந்து வெல்டிங் தொழிலாளி சாவு.
மற்றொருவர் பலத்த காயம் .

மாரண்டஅள்ளி கணபதி நகரில் கடையின் மேற்கூரை சிமென்ட் சீட்டு அமைக்கும் பணியின் போது கீழே விழுந்து வெல்டிங் தொழிலாளி சாவு.மற்றொருவர் பலத்த காயம் . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கணபதி நகரை சேர்ந்தவர் இளங்கோ இவர் அப்பகுதியில் டிரேடர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது கடையின் மேற்கூரை பலத்த காற்றினால் சேதமடைந்தது, இதனை சரிசெய்ய நேற்று குத்தல அள்ளியை சேர்ந்த மாதன் (55) ஜக்கசமுத்திரத்தை சேர்ந்த வெங்கடேசன் (45) ஆகிய இரண்டு வெல்டிங் தொழிலாளர்களை அழைத்து வந்து […]

Police Department News

மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் மின்சாரம் தாக்கி இறந்த மூன்று காட்டு யானைகளுக்கு 21-வது நாள் காரியம் செய்த ஊர்மக்கள்*

மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் மின்சாரம் தாக்கி இறந்த மூன்று காட்டு யானைகளுக்கு 21-வது நாள் காரியம் செய்த ஊர்மக்கள்* தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் கடந்த 20-நாட்களுக்கு முன்பு முருகேசன் என்பவரின் விவசாய நிலத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த ஒரு பெண் யானை 2 ஆண் யானை என மூன்று காட்டு யானைகள் எதிர்பாராதவிதமாக விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த விபத்து […]

Police Department News

பஞ்சப்பள்ளி சொரகொரிக்கை கிராமத்தில் மின் வேலியில் சிக்கி மூதாட்டி சாவு

பஞ்சப்பள்ளி சொரகொரிக்கை கிராமத்தில் மின் வேலியில் சிக்கி மூதாட்டி சாவு தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே சொரகொரிக்கை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜவேலுவின் மனைவி ராமு (55),இவர் நேற்று காலை ஏரி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை, இரவு நீண்ட நேரமாகியும் வராததால் உறவினர்கள் இவரை பல இடங்களில் தேடினர்,அப்போது அதே பகுதியில் உள்ள பெரியமுனிராஜ் (58), என்பவரின் நெல் வயலில் மின்சார தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளது தெரிய […]