Police Recruitment

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வேனில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபர் கைது

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வேனில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபர் கைது செங்கோட்டை நகராட்சி பூங்கா அருகில் உள்ள முருகாத்தாள் என்பவர் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து ஒரு வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரு டன் ரேஷன் அரிசியுடன் அந்த […]

Police Recruitment

மதுரை வாடிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய பார்களுக்கு சீல்

மதுரை வாடிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய பார்களுக்கு சீல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் தாதம்பட்டி நீரேத்தான் மதுபான கடை அருகில் அனுமதியின்றி செயல்பட்ட 2 மதுபான பார்களும், சமயநல்லூர், சிக்கந்தர்சாவடியில் தலா ஒரு பாரும் பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த பணியில் மதுரை தெற்கு கோட்ட கலால் தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் முகைதீன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயராஜ், சிவலிங்கம் மற்றும் கிராம […]

Police Recruitment

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் மதுரை நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அதிரடியாக அனைத்து பகுதிகளையும் கண்காணித்தனர். தெப்பக்குளம் மாரி யம்மன் மேற்குத்தெருவில் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த பிரதீப் குமார் சோனி (45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிலோ புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்தனர். தெப்பக்குளம், கீரைத்துறை, சுப்பிரமணிய புரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் சோதனை […]

Police Recruitment

மதுரையில் 187 மது பாட்டில்கள் பறிமுதல்; 31 பேர் கைது

மதுரையில் 187 மது பாட்டில்கள் பறிமுதல்; 31 பேர் கைது மதுரை ஜெய்ஹிந்துபுரம், திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், எஸ்.எஸ்.காலனி உள்பட பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்தந்த பகுதிகளில் திடீர் சோதனை ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த 31 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 187 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட் […]

Police Recruitment

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊர்காவல் படையினருக்கான மாநில அளவில் விளையாட்டுப் போட்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊர்காவல் படையினருக்கான மாநில அளவில் விளையாட்டுப் போட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அக்னி 2023 ஊர் காவல் படை வீரர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தொழில் முறை விளையாட்டுப் போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்காவல் படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து 25.05.2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் வெற்றி பெற்ற ஊர்க்காவல் படை அதிகாரிகள் மற்றும் காவலர்களை நேரில் […]

Police Recruitment

சென்னை புரசைவாக்கத்தில் 500 நடைபாதை கடைகள் அதிரடியாக அகற்றம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் மாநகராட்சி நடவடிக்கை

சென்னை புரசைவாக்கத்தில் 500 நடைபாதை கடைகள் அதிரடியாக அகற்றம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் மாநகராட்சி நடவடிக்கை சென்னை புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பில் இருந்து கங்கா தீசுவரர் கோவில் செல்லும் சிக்னல் வரை ரோட்டின் இரு புறமும் தள்ளுவண்டி கடைகள், நடைபாதை கடைகள் என சுமார் 500 கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. ஏற்கனவே இந்த பகுதியில் ஜவுளி உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் இருப்பதால் தி.நகர் ரங்கநாதன் தெருவை போல் எப்போதும் நெரிசல் மிகுந்த பகுதியாக மாறிவிட்டது. கடைகள், சாலைகளையும் […]