தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் பிணம் குற்றாலத்தில் மரங்களுக்கு இடையில் அழுகிய நிலையில் 45 வயது முதல் 50 வயது வரை மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த நபரின் உடலை நாய்கள், காட்டுப்பன்றிகள் கடித்திருந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்த நபர் யார்? எந்த […]
Month: July 2023
முக்கிய சாலைகளை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும்
முக்கிய சாலைகளை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும் சோழவந்தானில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. சோழவந்தான் நகரில் மாற்று வழியோ, புறவழிச் சாலையோ, அகலமான சாலையோ இல்லை. இதனால் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் ஒரே நேரத்தில் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது. தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். 1987-ம் ஆண்டில் மார்க்கெட் ரோடு ஒருவழி பாதையாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது இருவழிப்பாதையாக […]
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது தேன்கல்பட்டி கிராமம். இப்பகுதி மக்களுக்கு சொந்தமான மயானம் செக்கானூரணி திருமங்கலம் மெயின் ரோட்டில் உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் இறந்தவர்ளை அவர்கள் வழக்கப்படி சாஸ்திர சம்பிரதாயங்கள் முறைப்படி அடக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிதாக மின் மயானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு மின் மயானம் அமைந்தால் […]
கிராம மக்கள் பஸ்சை மறித்து திடீர் சாலை மறியல்
கிராம மக்கள் பஸ்சை மறித்து திடீர் சாலை மறியல் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாளப்பட்டியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் குடிதண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் […]
உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட்
உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரேட்டால் என்ற வணிக பெயரில் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் எனும் ரசாயனம் வேளாண்மை மற்றும் இதர உபயோகங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு நிரந்தர தடை விதித்துள்ளது. பொதுவாக மக்கள் ரேட்டால் பேஸ்ட்டை எலிகளை கட்டுப்படுத்த வீடுகளில் பயன்படுத்து கின்றனர். இதை குழந்தைகள் பேஸ்ட் என கருதி உப யோகப்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு எதிர்வினை மருந்து இல்லாததால் மத்திய மற்றும் […]
திருமங்கலம் அருகே கார் மீது வேன் மோதல்- பெண் உள்பட 2 பேர் பலி
திருமங்கலம் அருகே கார் மீது வேன் மோதல்- பெண் உள்பட 2 பேர் பலி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 40). இவரது தலைமையில் கோவையில் ஆன்லைன் விளம்பர கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக செங்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணி மனைவி ஜெயஸ்ரீ (50), சுவைதீர்த்தபுரத்தை சேர்ந்த செந்தில் இசக்கி (28), வீரகேளரபுரம்புதூரைச் சேர்ந்த கிருஷ்ணன் (38) ஆகியோரையும் காரில் அழைத்து சென்றார். காரை கடையநல்லூரை சேர்ந்த வைரமுத்து ஓட்டிச் […]
ரெயிலில் மாணவியை தள்ளிவிட்டு கொலை: வாலிபரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது ரத்து- ஐகோர்ட் உத்தரவு
ரெயிலில் மாணவியை தள்ளிவிட்டு கொலை: வாலிபரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது ரத்து- ஐகோர்ட் உத்தரவு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் மாணிக்கம்(47). கால் டாக்சி ஓட்டுனர். இவரது மனைவி ராமலட்சுமி(43) ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சத்யா (வயது 20) என்ற மகள் இருந்தார். இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் […]
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் விருதுநகர் மாவட்டம் படந்தால் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த 17 வயதுடைய ஆணும், இளம்பெண்ணும் வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. பெண்ணின் காதல் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேரையும் அழைத்து பேசி எச்சரித்தனர். அதன்பின் இளம்பெண் தனது […]
குழந்தைகள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை தற்கொலை செய்ய தூண்டுதல்
குழந்தைகள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை தற்கொலை செய்ய தூண்டுதல் இந்திய தண்டனைச் சட்டம் -1860 பிரிவு 305 குழந்தைகள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை தற்கொலை செய்ய தூண்டுதல் பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர் அல்லது சித்த சுவாதீனம் இல்லாதவர் அல்லது புத்திக் கோளாறு உள்ள மயக்க நிலையில் இருப்பவர் அல்லது பிறவி முட்டாள்; அல்லது குடிபோதையில் உள்ளவர் ஆகியவர்களின் யாராவது தற்கொலை செய்து கொல்வதற்கு ஒருவர் உடந்தையாக இருப்பது குற்றமாகும். இந்தக் குற்றத்துக்காக மரண தண்டனை அல்லது ஆயுள் […]
தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் மகாலட்சுமி கோவில் 4-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் புவனேஷ் குமார். இவரது மனைவி சுகன்யா (வயது23). இவர்கள் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். பக்கத்து வீட்டில் வசிப்பவர் யோகேசுவரன் என்ற நாகரத்தினம். இவரும், நண்பர்களும் சேர்ந்து வீட்டின் மொட்டை மாடி யில் மது அருந்தினர். போதை அதிகமான நிலையில் சுகன்யா வீட்டின் மாடியில் வைக்கப் பட்டிருந்த டிஸ் […]