பள்ளி மாணவர்கள் அரசியல் சாசன முகவுரையை வாசிப்பது கட்டாயம்! கர்நாடக அரசு அதிரடி உத்தரவு!! மாநிலத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தினமும் காலையில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை உரக்க வாசித்து, அதன்படி நடப்பதை உறுதிமொழியாக ஏற்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. “அரசியலமைப்புச் சட்டப் பொறுப்புகளுக்குப் பின்னால் உள்ள லட்சியங்கள் மற்றும் கொள்கைகளைப் பற்றி குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த இந்த வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்று கர்நாடக மாநில சமூகநலத்துறை அமைச்சர் சி. மகாதேவப்பா […]
Month: September 2023
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு! சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த எ.எ.நக்கீரன், நிடுமொலு மாலா, எஸ்.செளந்தா், சுந்தா் மோகன், கபாலி குமரேஷ் பாபு ஆகிய 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விழாவில் 5 பேரும் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சய் […]
கைது செய்வதற்கல்லாத புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்தால் நடைமுறை என்ன?
கைது செய்வதற்கல்லாத புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்தால் நடைமுறை என்ன? புகார் கைது செய்வதற்கல்லாதது எனில் காவல்நிலையத்தில் கு.வி.மு.வி. 155 -இன்படி புகாரை பெற்றுக்கொண்டு புகார் கொடுத்தவரை நீதி மன்றத்திற்கு செல்லுங்கள் என காவல்துறை அறிவுரை கூற வேண்டும் என அந்த விதியிலேயே சொல்கிறது. ஆனால் இது நடைமுறையில் போலீசாராலே விசாரிக்கப்பட்டு இனி மேல் இது போல் நடந்து கொள்ள மாட்டோம் என எழுதி வாங்கி கொண்டு வழக்கை முடித்து விடுவர். இதுவரை எனக்கு தெரிந்து இது […]
பாலக்கோடு எம்.ஜி ரோட்டில் உள்ள மயானத்தில் இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இரு தரப்பிணருக்கும் இடையே மோதல் .
பாலக்கோடு எம்.ஜி ரோட்டில் உள்ள மயானத்தில் இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இரு தரப்பிணருக்கும் இடையே மோதல் . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி.ரோடு பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் நேற்று மதியம் உடல் நிலை குறைவால் உயிரிழந்தார்,இவரது உடலை இன்று மதியம் அடக்கம் செய்வதற்காக அதே பகுதியில் உழவர் சந்தை முன்பு உள்ள மயானத்திற்க்கு உறவினர்கள் சவ குழிதோண்ட சென்றனர்.அப்போது அப்பகுதியில் குடியிருக்கும் சிலர் இந்த வழியாக எங்கள் தெருவிற்க்கு சாலை வசதி செய்ய வேண்டி […]
பாலக்கோட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி DSP தலைமையில் போலீசார் அமைதி ஊர்வலம்.
பாலக்கோட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி DSP தலைமையில் போலீசார் அமைதி ஊர்வலம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வருகிற 18 ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை போலீசாரின் அமைதி ஊர்வலம் டி.எஸ்.பி. சிந்து தலைமையில் நடைப்பெற்றது.இந்த ஊர்வலத்தில் பாலக்கோடு துணை காவல் கோட்டத்திற்க்குட்பட்ட பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் மற்றும் மகளிர் காவல் நிலையம் ஆகிய 6 […]
மிட்டாநூலஅள்ளி அருகே
கோழி பிடிக்க சென்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து பலி.
மிட்டாநூலஅள்ளி அருகேகோழி பிடிக்க சென்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து பலி. நல்லம்பள்ளி,செப்.17: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள சின்னநூல அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் கோவிந்தன் (எ)கண்ணுபையன்(70).விவசாயி. இவர் வளர்த்து வந்த கோழி ஒன்று அருகில் இருந்த விவசாய கிணற்றில் நேற்று இரவு தவறி விழுந்துள்ளது.அதனை மீட்பதற்காக முதியவர் கிணற்றில் இறங்கி கோழியை மீட்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு […]
தருமபுரியில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
தருமபுரியில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைக்கும் முன்பாகவே, திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பலரின் வங்கிக் கணக்கில் ரூ.1000 தொகை வந்து சேரத் தொடங்கியுள்ளது. […]
தொழுவத்தில் அடைத்து வைத்த மாடுகளை அத்துமீறி நுழைந்து அவிழ்த்து சென்ற பெண்கள் கைது
தொழுவத்தில் அடைத்து வைத்த மாடுகளை அத்துமீறி நுழைந்து அவிழ்த்து சென்ற பெண்கள் கைது தொழுவத்தில் அடைத்து வைத்த மாடுகளை அத்துமீறி நுழைந்து அவிழ்த்து சென்ற பெண்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆவடி போக்குவரத்து போலீசார் உதவியுடன் ஆவடி எச்.வி.எப். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிக்கொண்டிருந்த 3 எருமை கன்றுகள் மற்றும் அண்ணனூர் 60 அடி சாலையில் சுற்றித்திரிந்த 2 […]
முதல் தகவல் அறிக்கை புகார்தாருக்கு இலவசமாக கொடுப்பது போல் எதிரிக்கும் கொடுக்க வேண்டுமா?
முதல் தகவல் அறிக்கை புகார்தாருக்கு இலவசமாக கொடுப்பது போல் எதிரிக்கும் கொடுக்க வேண்டுமா? குற்ற விசாரணை முறை விதி 154 ன்படி எந்த காவல் நிலையத்திலும் உங்கள் புகாரை கொடுக்கலாம். அதாவது அந்த காவல் நிலையத்திற்கு அதிகார வரம்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை அதிகார வரம்பு இல்லையென்றாலும் கூட புகாரை பதிவு செய்து அதிகார வரம்புள்ள காவல் நிலைய விசாரணைக்கு அதை மாற்றி விட வேண்டியது காவல் நிலை ஆணைகள் பிரிவு […]
மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு
மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு தமிழ்நாடு அரசால் காவல் துறையில் திறம் பட செயல் பட்டவர்களுக்காக 127 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அண்ணா பதக்கத்தை அறிவித்தார்… அதனில் மதுரை மாநகரில் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணி புரியும் அ. தங்கமணி என்பவருக்கும் திறம்பட செயல் பட்டமைக்காக முதலமைச்சர் அண்ணா விருது அறிவிக்கப்பட்டது…இவர் போக்குவரத்து ஆய்வாளராக பள்ளி, கல்லூரி மாணவர்கள்,, இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு […]