மதுரை மாவட்டம் முழுவதும் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 199 வழக்குகள் பதிவு நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். முன்னதாக தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தமிழக அரசு நேரக்கட்டுப்பாடு விதிருந்தது.மதுரை மாநகர் பகுதியில் அரசு அனுமதித்த […]
Month: November 2023
முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு மதுரை சிம்மக்கல் அபிமன்யூ தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (42). சிம்மக்கல் எம்.சி.தெருவை சேர்ந்தவர் மகா லிங்கம் மகன் வெங்கடேச பெருமாள் (21). இவர் 10 நாட்களுக்குமுன்பு சிகரெட் பற்றவைக்க வேல்முருகனிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அதற்கு தீப்பெட்டி கேட்க வயது வித்தியாசம் வேண்டாமா? வயதில் மூத்தவனான என்னிடமா கேட்கிறாய்? என்று வெங்கடேச பெருமாளை கண்டித்துள்ளார். அதில் தகராறு ஏற்பட்டு வேல்முருகனை வெங்கடேசபெருமாள் பிடித்து கீழே தள்ளியுள்ளார்.இந்த சம்பவத்தைப் பார்த்த அவர் மகன் அருண்குமார் […]
சென்னையில் போதையில் வாகனங்களை சேதப்படுத்திய 2 பேர் கைது
சென்னையில் போதையில் வாகனங்களை சேதப்படுத்திய 2 பேர் கைது சென்னை மாநகரில் 14 ஆட்டோரிக்ஷாக்கள், 2 கார்கள் மற்றும் பல இருசக்கர வாகனங்களை சேதப்படுத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.செவ்வாய்கிழமை அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை இருவர் சேதப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், போதையில் இருந்த 3 பேர் ஆயுதங்களுடன் வாகனங்களை சேதப்படுத்தியது தெரியவந்தது. […]
தருமபுரி மான்காரன் கொட்டாய் பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதியதில் கட்டிட மேஸ்திரி படுகாயம்.
தருமபுரி மான்காரன் கொட்டாய் பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதியதில் கட்டிட மேஸ்திரி படுகாயம். தருமபுரி மாவட்டம் பெரியமல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சரவணன் (வயது .40)இவர் தருமபுரி செல்வதற்காக நேற்று காலை 10 மணி அளவில் தருமபுரி – மொரப்பூர் சாலையில் சோலைக்கொட்டாய் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்,மான்காரன் கொட்டாய் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது பிரிவு சாலையில் இருந்து குறுக்கே வந்த மொபட் மோட்டார் சைக்கிள் மீது […]
மாரண்டஅள்ளி பொன்முடி தியேட்டரில் சினிமா பார்க்கும் போது ஏற்பட்ட தகராறில் ஈடுபட்ட இருவர் கைது .
மாரண்டஅள்ளி பொன்முடி தியேட்டரில் சினிமா பார்க்கும் போது ஏற்பட்ட தகராறில் ஈடுபட்ட இருவர் கைது . தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த அமானி மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (வயது. 34) இவர் நேற்றிரவு மாரண்டஅள்ளியில் உள்ள பொன்முடி சினிமா தியேட்டரில் ஜிகர்தண்டா திரைப்படம் பார்த்து கொண்டிருந்தார்,இவருக்கு முன் சீட்டில் சிக்கமாண்டஅள்ளியை சேர்ந்த பிரகாஷ் (வயது.27) செல்வம் (வயது.22) ஆகியோர் அமர்ந்து சினிமா பார்த்து கொண்டிருந்தனர்.அப்போது முருகனின் கால் பிரகாஷ் மீது பட்டடுள்ளது,இதில் இருவருக்கும் […]
பாலக்கோடு ஆரதஅள்ளி சாலையில் மாம்பழம் ஜூஸ் கம்பெனி தொழிலாளி ஹிந்தி மொழி பேசியதால் தாக்கிய உள்ளூர் போதை அசாமிகள்.
4 பேர் கைது.
பாலக்கோடு ஆரதஅள்ளி சாலையில் மாம்பழம் ஜூஸ் கம்பெனி தொழிலாளி ஹிந்தி மொழி பேசியதால் தாக்கிய உள்ளூர் போதை அசாமிகள்.4 பேர் கைது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஆரதள்ளியில் மகா அக்ரோ மாம்பழம் கூல் தயாரிக்கும் கம்பெனி இயங்கி வருகிறது.இக் கம்பெனியில் பீகார் மாநிலம் புர்னகி கிராமத்தை சேர்ந்த மதன்குமார் (வயது.37) என்பவர் வேலை செய்து வருகிறார்.நேற்று மாலை வேலை முடிந்து வெளியே வந்தவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்,அப்போது சாலையில் மது போதையில் இருந்த சொன்னம்பட்டி […]
தீபாவளியின் போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 2095 பேர் கைது
தீபாவளியின் போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 2095 பேர் கைது சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது அந்த வகையில் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததற்காக தமிழகம் முழுவதும் […]
தமிழகமெங்கும் தீபாவளி பண்டிகை கோலாகலம், 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை
தமிழகமெங்கும் தீபாவளி பண்டிகை கோலாகலம், 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையானது தமிழகம் முழுவதும் ரூ. 467 கோடிக்கு மது பானமும் ரூ. 315 கோடிக்கு கறி கோழியும் விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாலிபரிடம் ரூ.5.51 லட்சம் மோசடி
வாலிபரிடம் ரூ.5.51 லட்சம் மோசடி வேலூர் மாவட்டம், ஊசூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அமீன் (வயது 32). இவரை ஆன்லைனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆன்லைனில் வேலை தருவதாக நம்பிக்கை வார்த்தைகள் கூறினர்.இதனை உண்மை என நம்பிய அமீன் அவர்கள் அனுப்பிய லிங்கில் இணைந்தார். பின்னர் சிறிது சிறிதாக ரூ.5 லட்சத்து 51 ஆயிரத்து 520 அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தினார்.மர்ம நபர்கள் கூறியபடி அமீன் முடித்துக் கொடுத்த வேலைக்கான பணம் அவரது வங்கி […]
காரியமங்கலம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஆயிரம் ரூபாய் கரும்புகள் எரிந்து நாசம்.
காரியமங்கலம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஆயிரம் ரூபாய் கரும்புகள் எரிந்து நாசம். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே காளப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணிவேல் (வயது.45)அதே பகுதியில் இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு வளர்த்து வந்தார்.கரும்பு பயிர் வளர்ந்து அறுவடைக்கு தையராக இருந்த நிலையில் நேற்று மதியம் திடிரென கரும்பு தோட்டத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு […]