முட்புதரில் வீசப்பட்ட 10 மாத பெண் குழந்தையை மீட்ட காவல்துறையினர் திருச்சி மாவட்டம்¸ மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி காவல்நிலையத்திற்கு அருகே உள்ள மருத்துவமனை தெருவில் உள்ள முட்புதரில் கைக் குழந்தை ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு முட்செடிகளுக்கு நடுவே பிறந்து சுமார் 10 மாதங்களான பெண் குழந்தை ஒன்று கிடந்தது. குழந்தையை மீட்ட காவல்துறையினர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர். பின்னர் மணப்பாறை மாவட்ட தலைமை […]