மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்..!! காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் இறப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் ரவி(53). ஜமுனாமத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு பணிக்காக ஜமுனாமத்தூரில் உள்ள சோதனைச்சாவடியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜமுனாமத்தூர் காவல் நிலையத்திர்க்கு அருகில் […]
Day: July 10, 2020
மக்களின் நலன் காப்பதே எங்களின் பணி..! பொதுமக்களுக்கு உதவி வரும் டிஎஸ்பி ரமேஷ்.
மக்களின் நலன் காப்பதே எங்களின் பணி..! பொதுமக்களுக்கு உதவி வரும் டிஎஸ்பி ரமேஷ். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கிவரும் டிஎஸ்பி ரமேஷ். இன்று கொரனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, இதில் ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர், முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோரனா வைரஸ் எச்சரிக்கை. இங்கிருந்து வெளிநாடு செல்பவர்களும் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்புவர்களும் தங்களது உடல் நிலையை கவனமாக […]
*கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்.*
*கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்.* திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கினார். *இடம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திருவள்ளூர்.* *நாள் : 06.07.2020.* போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்கள். B.சுபிதா P.சௌமியா
போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயற்சித்தார், உ.பி. காவல்துறை தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக்கொலை..!!
போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயற்சித்தார், உ.பி. காவல்துறை தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக்கொலை..!! உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை என தகவல். மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தப்பிச் செல்ல முயன்ற விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக் கொன்றதாக முதற்கட்ட தகவல் தெரியவருகிறது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி. தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தினந்தோறும் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினரை பகுதி பகுதியாக பிரித்து, அனைத்து காவல் நிலையங்களிலிருந்தும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் உட்பட சுமார் 50 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி […]
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தேனி மாவட்ட காவல் துறையினருக்கு யோகா பயிற்சி.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தேனி மாவட்ட காவல் துறையினருக்கு யோகா பயிற்சி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா பயிற்சி தேனி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் காவல்துறையினரின் மனவலிமை மற்றும் உடல் வலிமையை மேம்படுத்த தியானம், மூச்சுப்பயிற்சி, ஆசனப் பயிற்சி, பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொரோனா நோய் தொற்று […]
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா..!! மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா..!! மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல். நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிப்பதால் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விழிப்புணர்வுகளை அரசு தரப்பிலும் போலீஸ் தரப்பிலும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரையில் புரோட்டா பிரியர்கள் அதிகம் என்பதால் அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாஸ்க் புரோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது விற்பனையிலும் அசத்தி வருவதோடு பெரும் விழிப்புணர்வினையும் ஏற்படுத்தி […]