காவலர் வேலை வாய்ப்பு காவலர் தேர்வுக்கு என்ன படிப்பது? எப்படி படிப்பது? இனி குழப்பம் வேண்டாம் ! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பங்களை அனுப்புவது மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இடையே எழக்கூடிய சந்தேகங்களை களைவதற்காகவும் அவர்களுக்கு ஒரு சரியான தீர்வு அளிக்கும் வண்ணமாகவும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு மைய சிறப்பு உதவி மையம் செயல்பட்டு வருகின்றது. காவலர் தேர்வுக்கு என்ன படிப்பது, […]
Day: October 6, 2020
பட்டாக்கத்தியை கையில் வைத்து நாக்கை அறுப்பேன் என டிக்-டாக் வீடியோ எடுத்த வாலிபர் கைது
ஆலந்தூர், சென்னை புறநகர்் பகுதிகளில் சமீப காலமாக பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு சினிமா பாடலுக்கு ஏற்றார்போல் போஸ் கொடுப்பதும், பிறந்தநாளில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவதும், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் தங்களை பெரிய ரவுடிகளாக சித்தரித்து கொள்கின்றனர். இந்தநிலையில் வாலிபர் ஒருவர், கையில் பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு தன்னை மிகப்பெரிய ரவுடியை போல் சித்தரித்து, “நாக்கை அறுப்பேன்” என்று சினிமா பாடலுக்கு ஏற்ப […]
ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு கஞ்சா கடத்த முயன்ற 7 வாலிபர்களை போலீசார் மடக்கி கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நேற்று ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த மொத்தம் 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. […]
காஞ்சீபுரம் அருகே செல்போன் கடையில் உதிரிபாகங்கள் மற்றும் செல்போன் திருடிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம், காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைகேட் என்ற இடத்தில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் விற்கும் கடையில் உரிமையாளர் ஐயப்பன், அவரது மனைவியுடன் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 ரவுடிகள் செல்போன் உதிரிபாகங்கள் வாங்குவது போல் நோட்டமிட்டு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐயப்பனை தாக்கினர். உடனடியாக அவர்கள் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால் அந்த 2 ரவுடிகளும் கடையில் இருந்த செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் ரூ.30 […]