மதுரையில் போலி பட்டா வழங்கிய துணை தாசில்தார் கைது மதுரை கலைநகரில் உள்ள பல்லவி நகரை சேர்ந்தவர் கோபிலால். இவர் கடந்த 1990-ம் ஆண்டு ஆனையூர் பகுதியில் சையது அபுதாஹிர் என்பவருக்கு சொந்தமான காலியிடத்தை வாங்கி வீடு கட்டினார். இந்த நிலையில் கோபிலாலுக்கு சொந்தமான அந்த இடத்தை கோசா குளத்தைச் சேர்ந்த ராமன் மகன் ராஜா செல்வராஜ் என்பவர் தனது பெயருக்கு பட்டா மாற்றிக் கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மதுரை மாநகர் நில அபகரிப்பு பிரிவில் 2021-ம் […]
Month: March 2023
சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயண அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதி
சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயண அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதி பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ ரெயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறையானது மிகவும் திறமையான, வசதியான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், பணப்புழக்கத்தை குறைக்க வேண்டிய தேவைக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் வாகன நிறுத்தும் இடங்களில் வேகமாக நுழைவது, வெளியேறுவது, […]
குமரியை தொடர்ந்து தென்காசியிலும் பரபரப்பு: சர்ச்சுக்கு வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை-மத போதகர் கைது
குமரியை தொடர்ந்து தென்காசியிலும் பரபரப்பு: சர்ச்சுக்கு வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை-மத போதகர் கைது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மத போதகராக ஸ்டான்லி குமார் (வயது 49) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- போதகர் ஸ்டான்லி குமார் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு பாலியல் […]
சுப்ரீம் கோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழியாகும் நிலை வரும்- கிரண் ரிஜிஜு பேச்சு
சுப்ரீம் கோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழியாகும் நிலை வரும்- கிரண் ரிஜிஜு பேச்சு மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது. விழாவில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:- இந்தியாவில் மக்கள் தொகை, உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட பல்வேறு சவால்கள் நம் முன்பாக உள்ளன. நீதிபதிகளுக்கான […]
காவல்துறை குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்
காவல்துறை குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் தமிழ்நாடு காவல்துறை குடும்ப உறுப்பினர்க ளுக்கான மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் மற்றும் பயிற்சி துறை, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு , இந்திய தொழில் கூட்டமைப்பு, வெளிநாட்டு மனித வள நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றுடன் இணைந்து சென்னை, வேலூர், கோவை, ஓசூர், திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்காக மதுரை ஆகிய 6 இடங்களில் நடத்தியது. தென்மண்டல காவல் துறை […]
பாலக்கோடு காவாப்பட்டியில் மாட்டு வண்டியில் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
பாலக்கோடு காவாப்பட்டியில் மாட்டு வண்டியில் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காவாப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் முனியப்பன் (வயது .20), திருமணம் ஆகாதவர், இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்,வேலைக்கு சென்று விட்டு இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்,சித்திரப்பட்டியில் இருந்து காவாப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த போது காவாப்பட்டி பிரிவு சாலையில் எதிரே கரும்பு பாரம் ஏற்றி வந்த […]
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனை நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனை நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உலக காச நோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சுகாதார இணை இயக்குநர் டாக்டர் .சாந்தி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசியதாவது..உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளாக காசநோய் பொதுமக்கள் மத்தியில் பரவி உள்ளது.நுரையீரலில் ஏற்படும் நுண்ணுயிர் தொற்று காரணமாகவும், பொது இடங்களில் எச்சில் துப்புவதாலும் காசநோய் கிருமிகள் […]
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய. காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள்
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய. காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய குற்றத்தடுப்பு துப்பு துலங்குதல் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல் பதுக்கல் விற்பனைக்கெதிரான நடவடிக்கைகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்தல் கண்காணித்தல் நீதி மன்ற நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நீதி துறையுடன் இணைந்து செயல்படுதல் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி இடைத் தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த மற்றும் […]
போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்
போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மொட்டலூர் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 1.25 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்ததுடன் நிலத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் ஆக்கிரமிப்பு களை அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் பலமுறை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிலையில் நேற்று தாசில்தார் சுகுமார் மற்றும் வருவாய் துறையினர் […]
வடபழனி-கே.கே.நகரில் 2 பேரிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பு
வடபழனி-கே.கே.நகரில் 2 பேரிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பு சென்னை, எம்.ஜி.ஆர். நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். அசோக் நகரில் உள்ள காலணிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கே.கே.நகர் ஆர்.கே. சண்முகம் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தனது செல்போன் சார்ஜ் இல்லாததால் ‘சுவிட்ச் ஆப்’ ஆகிவிட்டது அவசரமாக வீட்டிற்கு போன் செய்ய வேண்டும் என்று […]