திண்டுக்கல் பழனியில் பயணியின் கழுத்தை அறுத்து வழிப்பறி செய்ய முயன்ற 2 பேர் கைது மதுரையை சேர்ந்தவர் அழகுமலைகண்ணன். இவர் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்றார். மலைக்கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர் மதுரைக்கு செல்வதற்காக பழனி பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அழகுமலை கண்ணனை மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறித்து பணம் கேட்டனர். அவர் தர மறுக்கவே கத்தியை எடுத்து அழகுமலைகண்ணனின் கழுத்தை அறுத்து விட்டு […]
Month: April 2023
ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாளர்கள் அலட்சியத்தால் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்
ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாளர்கள் அலட்சியத்தால் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். தினசரி வெளிநோயாளிகளாக 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கர்ப்பிணி பெண்கள் இங்கு பரிசோதனைக்கு வருகின்றனர். 24 மணிநேரமும் செயல்படும் இந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். மேலும் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களிடம் […]
விபத்து பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதல்: ஒருவர் பலி- 22 பேர் படுகாயம்
விபத்து பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதல்: ஒருவர் பலி- 22 பேர் படுகாயம் ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு பாலி அலுமினிய குளோரைடு என்ற ஸ்பிரிட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் தேவராஜ் என்பவர் ஓட்டிவந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் திண்டுக்கல்-பழனி சாலை கன்னிவாடி அருகே தெத்துப்பட்டி புதுப்பாலம் அருகே வந்தபோது லாரி திடீரென பழுதாகி நின்றது. இதனையடுத்து டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அப்பகுதியில் ஏதேனும் பழுது நீக்கும் […]
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே புதுப்பெண்ணை கடத்திய வியாபாரி
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே புதுப்பெண்ணை கடத்திய வியாபாரி திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பஞ்சம்தாங்கி காக்காயம்பட்டியை சேர்ந்தவர் செவத்த முத்து(25). கூலித்தொழி லாளி. இவர் தனது உறவினரான முத்துவிஜயா(19) என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த முத்துவிஜயா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து […]
பெங்களூரில் பதுங்கிய கோவை ரவுடிகள் 4 பேரை துரத்தி பிடித்த போலீஸ்சார்
பெங்களூரில் பதுங்கிய கோவை ரவுடிகள் 4 பேரை துரத்தி பிடித்த போலீஸ்சார் கோவை நகரில் ரவுடி கும்பலுக்குள் நடந்த மோதலில் சத்திய பாண்டி என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். கோர்ட்டு அருகே கோகுல் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ரவுடி கும்பல்களின் அட்டகாசத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காமராஜர்புரம் கவுதம் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில ரவுடிகள் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர். போலீசார் தேடுதல் வேட்டையை தொடர்ந்து ரவுடி கும்பல் […]
கோர்ட்டு வளாகத்தில் திராவகம் வீசப்பட்ட பெண் உயிரிழப்பு
கோர்ட்டு வளாகத்தில் திராவகம் வீசப்பட்ட பெண் உயிரிழப்பு கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42), லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிதா (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்து குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை பறித்ததாக கவிதா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு சென்று வந்த […]
மதுரை நகை கடையில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்
மதுரை நகை கடையில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:- மதுரை கான்சாமேட்டு தெருவில் ராமதாஸ் மகன்கள் திருநாவுக்கரசு, பிரசன்னா மற்றும் ரத்தினம் மகன் ஜெயராமன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து “ஸ்ரீ காயத்திரி ஜூவல்லர்ஸ்” என்ற பெயரில் நகை கடையை தொடங்கினர். மேற்கண்ட 3 பேரும் பொதுமக்களிடம் பல கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் நகையை முதலீடு செய்தால் அதிக வட்டி (15 சதவீதம்) […]
மதுரை கீரைதுறை பகுதியில் குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
மதுரை கீரைதுறை பகுதியில் குண்டர் சட்டத்தில் ரவுடி கைது மதுரை கீரைத்துறை லாடபிள்ளை தெருவை சேர்ந்தவர் பழனி (வயது28). இவர்மீது பெண்களை கிண்டல் செய்து தாக்கியது, கொலை செய்தது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் பழனி மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி பழனியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார், அவரை […]
மதுரையில் பீர்பாட்டிலால் வாலிபர் மீது தாக்குதல்
மதுரையில் பீர்பாட்டிலால் வாலிபர் மீது தாக்குதல் கீழகள்ளந்திரியை சேர்ந்தவர் மகாராஜன். இவரது மகன் ராஜீவ் காந்தி (36). இவர் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். மதுரை ஆண்டார் கொட்டாரம், அய்யனார் நகரை சேர்ந்தவர் பிரதீப் குமார் (46). இவருக்கும், ராஜீவ்காந்திக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் பாண்டிகோவில் ரோட்டில் உள்ள பாரில் ராஜீவ் காந்தி, பிரதீப் குமார் ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. […]
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகன் செந்தூர்பாண்டி (வயது23). இவர் மீனாம்பிகை நகரில் நடந்து சென்றார். அப்போது 3 பேர் கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து செந்தூர்பாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மீனாம்பிகை நகர் 7-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (24), மீனாம்பிகை […]