தீவிரவாதம் தடுப்பு தொடர்பாக போலீசாருக்கு பயிற்சி கோவை மாநகரில் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீசாருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறார். இதில் போலீசாருக்கான உடற்பயிற்சிக்கூடம், வாகனங்களில் ‘மினி’ நூலகம், போலீசாரின் குடும்பத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீவிரவாதம் தடுப்பது தொடர்பான […]
Month: May 2023
கோவையில் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் கைது
கோவையில் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் கைது கோவை வடவள்ளி பகுதியில் வசிப்பவர் 17 வயது சிறுமி. இவர் டிப்ளமோ படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அப்போது மாணவிக்கு 2 வயதாக இருந்தது. கைக்குழந்தையுடன் தவித்த அவரது தாயார் பெயிண்டர் ஒருவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சிறுமி தனது தாயார் மற்றும் அவரது 2-வது கணவர் பராமரிப்பிலேயே வளர்த்து […]
மாடியில் இருந்து தவறி விழுந்து வங்கி காசாளர் பலி
மாடியில் இருந்து தவறி விழுந்து வங்கி காசாளர் பலி கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (54). இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, அவர் தனது வீட்டில் மாடியில் துணியை உலர்த்தி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு […]
கோவையில் குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு
கோவையில் குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு கோவையில் கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்ப டுவதை தடுக்கும் விதமாக அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய குழந்தை தொழி லாளர் திட்ட அதிகாரி களுக்கு கோவை யில் உள்ள சில கடைகள் மற்றும் ஓட்டல்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்ப ட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்படி, அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சவுரிபாளையம் உடையாம்பாளையத்தில் உள்ள […]
தண்ணீர் பந்தல் திறப்பு
தண்ணீர் பந்தல் திறப்பு சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த வண்ணாந்துரையில் 03.05.2023 இன்று திரு.அசோக்குமார்( J5 சாஸ்திரி நகர் போகாகுவரத்து காவல் ஆய்வாளர்)அவர்கள் தலைமையில் திரு.பசுமை மூர்த்தி அவர்கள் ஏற்பாட்டில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது.
வாலிபரை ஓட, ஓட விரட்டி வெட்டிய நபர்
வாலிபரை ஓட, ஓட விரட்டி வெட்டிய நபர் கோவை அருகே கோவை புதூர் அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 28). இவர் இன்று காலை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவு செல்வ ராஜா மில் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் அரிவாளுடன் வந்தார். அவர் ஆனந்த்தை ஓட, ஓட அரிவாளால் வெட்டினார். அவரிடம் இருந்து தப்பிக்க ஆனந்த் ஓட்டம் பிடித்தார். இருந்தாலும் தொடர்ந்து விரட்டிச் சென்று ஆனந்த்தை அந்த […]
வேடசந்தூரில் இன்று பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதி 2 பேர் பலி
வேடசந்தூரில் இன்று பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதி 2 பேர் பலி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து காலிபிளவர் ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேனில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேனை கிருஷ்ணகிரியை சேர்ந்த சங்கர் (வயது26) என்பவர் ஓட்டி வந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த தர்ஷன் (20). கோவிந்தசாமி (18) ஆகியோரும் வந்தனர். வேன் இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென டயர் […]
தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த நிருபர் கைது
தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த நிருபர் கைது திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது40). இவர் ஒட்டன்சத்திரம் புளியமரத்துக்கோட்டை பகுதியில் கொட்டாங்குச்சி மூலம் கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு ரமேஷ் (41). என்பவர் தான் ஒரு பத்திரிகை நிருபர் என்றும் தொழிற்சாலை முழுவதையும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். மேலும் தொழிற்சாலை மூலம் பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க ரூ.50 […]
திண்டுக்கல்லில் சட்டகல்லூரி மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
திண்டுக்கல்லில் சட்டகல்லூரி மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த பாலமுருகன் மகள் யாஷினி (வயது 20). இவர் திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த மாணவி இன்று காலை பயணிகள் ரெயில்மூலம் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். தாமரைப்பாடி ரெயில்நிலையம் வந்ததும் ரெயிலை விட்டு இறங்கிய அவர் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
தண்ணீர் பந்தல் திறப்பு
தண்ணீர் பந்தல் திறப்பு சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த வண்ணாந்துரையில் 26.04.2023 அன்று திரு.நெல்சன்(Assistant Commissioner of Police J2 Adyar) அவர்கள் தலைமையில் திரு.பசுமை மூர்த்தி அவர்கள் ஏற்பாட்டில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது.